Wednesday, 13 November 2013

பேரூராதீனமும் தோழர் ஜீவானந்தம்

பேரூராதீனமும் தோழர் ஜீவானந்தம்

      பேருராதீனம் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்களோடு தோழர் ஜீவானந்தம் அவர்கள் நெருங்கிய நட்பினைப் பெற்றவராக திகழ்ந்துள்ளார்.
    பேருரடிகளாருக்கு எழுதிய கடிதத்தில் ‘200 வருட ஆட்சி மொழியான ஆங்கிலத்தை அகற்றினாலும் இன்றும் பொது மொழியாகத் தான் திகழ்கிறது.திருக்கோவில்களில் தமிழ் முழக்கம் கேட்க தாங்கள் பணி அறிந்து மகிழ்ந்தேன்.தமிழ்நாட்டில் எல்லாக் கோவில்களிலும் தமிழ் மந்திரம் ஒலிக்க தங்களின் முயற்சிக்கு உறுதுணையாக இருப்போம்’ என்று தம் கடிதத்தில் எழுதியிருந்தார்.1957 1959 இரண்டு முறை பேரூரடிகளாரை தோழர் ஜீவானந்தம் சந்தித்து பேசியுள்ளார்.

Tuesday, 12 November 2013

பழந்தமிழ் இசை இலக்கண நூல்கள்

பழந்தமிழ் இசை இலக்கண நூல்கள்
பழந்தமிழ் மக்கள் வேறு நாட்டாருடன் தொடர்பு கொள்வதற்கு முன்பே இசை கூத்து முதலிய கலைகள் வளரத் தொடங்கின.மிகத் தொன்மையான பல நூல்கள் இயற்கையின் கொடுமையால் அழிந்து போயின.
பஞ்ச மரபு;
      இசைமரபு, வாச்சிய மரபு, நிருத்த மரபு, அவிநய மரபு, தாள மரபு, எனும் 5 வகை மரபுகளைப் பற்றிக் கூறும் பழந்தமிழர் இசை இலக்கண நூல்.இதன் ஆசிரியர் அறிவனார்.பஞ்சமரபிலிருந்து அடியார்க்கு நல்லார் தம் உரையில்  பல இடங்களை குறிப்பிடுகிறார்.
    600 வருட பாரம்பரிய மரபு கொண்ட கோவை பேரூராதீனம் திருமடத்தில் பஞ்சமரபு என்னும் இசை நூல், நூறு வெண்பாக்களை கொண்ட ஒலைச்சுவடி உள்ளது.அதனை நூலாக வெளிக்கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அந்த சுவடி சிதிலமடைந்து காணப்பட்டாலும் எழுத்துக்கள் புரியும் வண்ணம் உள்ளன.500க்கும் மேற்பட்ட சுவடிகள் ஆதீனத்தாரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.தக்க இராமாயணம் எனும் பழமையான சுவடி தமிழகத்தில் இங்கு மட்டும் தான் உள்ளது.பேராசிரியரின் தொல்காப்பிய உரை பிரதி தெய்வசிகாமணி கவுண்டரால் கண்டுபிடிக்கப்பட்டு தற்சமயம் ஆதீன நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
  அகத்தியம்;
      இயல்,இசை நாடகம் எனும் முத்தமிழுக்கும் இலக்கணம் கூறும் நூல்.அகத்திய முனிவரால் இயற்றப்பட்டது.அகத்தியம் முதலாக உள்ள தொன்னூல்களும் இறந்தன என்று அடியார்க்கு நல்லார் கூறுவதால் அவர் காலமாகிய 12 ம் நூற்றாண்டுக்கு முன்பே இந்நூல் மறைந்து போயிற்று எனக் கருத வேண்டும்.
 இசை நுணுக்கம்;
       அகத்திய முனிவரின் மாணவராகிய சிகண்டி முனிவரால் இயற்றப்பட்டது.சிலப்பதிகாரத்திலுள்ள இசை விளக்கங்களுக்கு அடியார்க்கு நல்லார் பயன்படுத்திய நூல் இது என்பது தெளிவாகிறது.
இந்திர காவியம்;
   யாமளேந்திரரால் எழுதப் பெற்றது இந்நூல். பழந்தமிழர் வளர்த்த இசையின் இலக்கணம் கூறும் நூல். க.ப.அறவாணன் அவர்கள் பதிப்பித்து வெளியிட்ட இந்திரகாவியம் அடியார்க்கு நல்லார் குறிப்பிடும் நூல்தானா? என்பது ஆராய்ச்சிக்குட்பட்டது.
 பஞ்ச பாரதியம்;
    இந்நூல் தேவவிருடி என்பவரால் இயற்றப்பட்டது.அடியார்க்கு நல்லார் காலத்திலேயே அழிந்து விட்டது.வேறு குறிப்புகள் கிடைக்கப்பெறவில்லை.
 பஞ்ச மரபு;
      இசைமரபு, வாச்சிய மரபு, நிருத்த மரபு, அவிநய மரபு, தாள மரபு, எனும் 5 வகை மரபுகளைப் பற்றிக் கூறும் பழந்தமிழர் இசை இலக்கண நூல்.இதன் ஆசிரியர் அறிவனார்.பஞ்சமரபிலிருந்து அடியார்க்கு நல்லார் பல இடங்களில் குறிப்பிடுகிறார்.
பெருங்குருகு;
    இந்நூலின்  சில குறிப்புகள் மட்டுமே சிலப்பதிகாரத்தில் அடியார்க்கு நல்லார் உரை மூலம் கிடைக்கப்பெறுகிறது.
பெருநாரை;                                                               இந்நூலின்  சில குறிப்புகளும்  சிலப்பதிகாரத்தில் அடியார்க்கு நல்லார் உரை மூலம் கிடைக்கப்பெறுகிறது.இந்த நூலின் வேறு குறிப்புகள் கிடைக்கப்பெறவில்லை.
                             நன்றி                                       பழந்தமிழர் ஆடலில் இசை நூலில் கண்டவை.
  
திருமுறை நூல்களில் கையாளப்பட்டுள்ள பண்களின் பெயர்கள்

திருமுறை நூல்களில் கையாளப்பட்டுள்ள பண்களின் பெயர்கள்
1)செவ்வழி
2)தக்கராகம்
3)புறநீர்மை
4)பஞ்சமம்
5)நட்டபாடை
6)அந்தாளிக்குறிஞ்சி
7)காந்தாரம்
8)பழம்பஞ்சரம்
9)மேகராகக் குறிஞ்சி
10)கொல்லிக்கெளவாணம்
11)பழந்தக்க ராகம்
12)குறிஞ்சி
13)நட்டராகம்
14)வியாழக்குறிஞ்சி
15)செந்துருத்தி
16)தக்கேசி
17)கொல்லி
18)இந்தளம்
19)காந்தார பஞ்சமம்
20)கெளசிகம்
21)பியந்தைக் காந்தாரம்
22)சீகாமரம்
23)சாதாரி
24)யாழ்முரி

காமராசரும் பேரூராதீனமும்

 காமராசரும் பேரூராதீனமும்
1958 ஆம் ஆண்டு கோயமுத்தூர் வருகை தந்த காமராசர் பேரூராதீனம் வந்து மதிய உணவுத் திட்டத்தினை தொடங்கி வைக்கிறார்.இந்நிகழ்வில் பேரூராதீன சன்னிதானம் தவத்திரு ஆறுமுகசுவாமிகள்,இளைய சன்னிதானம் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார், மாவட்ட  ஆட்சியர் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.இந்நிகழ்வு ஆனந்த விகடன் இதழில் வெளிவந்துள்ளது.
        கோவை மாவட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட காமராசர் இரண்டு நாட்கள் பேரூராதீன மாடி பங்களாவில் தங்கி சென்றுள்ளார்.
      ஊட்டியில் பேருராதீன கட்டுப்பாட்டில் உள்ள திருக்காந்தள் திருமடத்திற்கு 1938 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியடிகள்  வருகை தந்த செய்தி அறிந்து 1961 ஆம் ஆண்டு காமராசர் அவர்கள் திருக்காந்தள் திருமடத்திற்கு வருகை புரிந்தார்.அங்குள்ள வருகை பதிவேட்டில் கையொப்பம் இட்டுச் சென்றார்.
    சிறுவாணி அணையைப் பார்வையிட சென்ற காமராசர் 2-வது முறையாக பேரூராதீனம் வருகை புரிந்து கல்லூரி விழாவில் பங்கேற்றுப் பேசினார்.இவ்விழாவில்  வெள்ளக்கிணறு ஜமீன் திரு.சுப்பையா கவுண்டர் அவர்களும் கலந்து கொண்டார்.
     நன்றி.சன்னிதானங்களின் உரையாடலில் இருந்து தொகுக்கப்பட்டவை