Tuesday, 12 November 2013

பழந்தமிழ் இசை இலக்கண நூல்கள்



பழந்தமிழ் இசை இலக்கண நூல்கள்
பழந்தமிழ் மக்கள் வேறு நாட்டாருடன் தொடர்பு கொள்வதற்கு முன்பே இசை கூத்து முதலிய கலைகள் வளரத் தொடங்கின.மிகத் தொன்மையான பல நூல்கள் இயற்கையின் கொடுமையால் அழிந்து போயின.
பஞ்ச மரபு;
      இசைமரபு, வாச்சிய மரபு, நிருத்த மரபு, அவிநய மரபு, தாள மரபு, எனும் 5 வகை மரபுகளைப் பற்றிக் கூறும் பழந்தமிழர் இசை இலக்கண நூல்.இதன் ஆசிரியர் அறிவனார்.பஞ்சமரபிலிருந்து அடியார்க்கு நல்லார் தம் உரையில்  பல இடங்களை குறிப்பிடுகிறார்.
    600 வருட பாரம்பரிய மரபு கொண்ட கோவை பேரூராதீனம் திருமடத்தில் பஞ்சமரபு என்னும் இசை நூல், நூறு வெண்பாக்களை கொண்ட ஒலைச்சுவடி உள்ளது.அதனை நூலாக வெளிக்கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அந்த சுவடி சிதிலமடைந்து காணப்பட்டாலும் எழுத்துக்கள் புரியும் வண்ணம் உள்ளன.500க்கும் மேற்பட்ட சுவடிகள் ஆதீனத்தாரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.தக்க இராமாயணம் எனும் பழமையான சுவடி தமிழகத்தில் இங்கு மட்டும் தான் உள்ளது.பேராசிரியரின் தொல்காப்பிய உரை பிரதி தெய்வசிகாமணி கவுண்டரால் கண்டுபிடிக்கப்பட்டு தற்சமயம் ஆதீன நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
  அகத்தியம்;
      இயல்,இசை நாடகம் எனும் முத்தமிழுக்கும் இலக்கணம் கூறும் நூல்.அகத்திய முனிவரால் இயற்றப்பட்டது.அகத்தியம் முதலாக உள்ள தொன்னூல்களும் இறந்தன என்று அடியார்க்கு நல்லார் கூறுவதால் அவர் காலமாகிய 12 ம் நூற்றாண்டுக்கு முன்பே இந்நூல் மறைந்து போயிற்று எனக் கருத வேண்டும்.
 இசை நுணுக்கம்;
       அகத்திய முனிவரின் மாணவராகிய சிகண்டி முனிவரால் இயற்றப்பட்டது.சிலப்பதிகாரத்திலுள்ள இசை விளக்கங்களுக்கு அடியார்க்கு நல்லார் பயன்படுத்திய நூல் இது என்பது தெளிவாகிறது.
இந்திர காவியம்;
   யாமளேந்திரரால் எழுதப் பெற்றது இந்நூல். பழந்தமிழர் வளர்த்த இசையின் இலக்கணம் கூறும் நூல். க.ப.அறவாணன் அவர்கள் பதிப்பித்து வெளியிட்ட இந்திரகாவியம் அடியார்க்கு நல்லார் குறிப்பிடும் நூல்தானா? என்பது ஆராய்ச்சிக்குட்பட்டது.
 பஞ்ச பாரதியம்;
    இந்நூல் தேவவிருடி என்பவரால் இயற்றப்பட்டது.அடியார்க்கு நல்லார் காலத்திலேயே அழிந்து விட்டது.வேறு குறிப்புகள் கிடைக்கப்பெறவில்லை.
 பஞ்ச மரபு;
      இசைமரபு, வாச்சிய மரபு, நிருத்த மரபு, அவிநய மரபு, தாள மரபு, எனும் 5 வகை மரபுகளைப் பற்றிக் கூறும் பழந்தமிழர் இசை இலக்கண நூல்.இதன் ஆசிரியர் அறிவனார்.பஞ்சமரபிலிருந்து அடியார்க்கு நல்லார் பல இடங்களில் குறிப்பிடுகிறார்.
பெருங்குருகு;
    இந்நூலின்  சில குறிப்புகள் மட்டுமே சிலப்பதிகாரத்தில் அடியார்க்கு நல்லார் உரை மூலம் கிடைக்கப்பெறுகிறது.
பெருநாரை;                                                               இந்நூலின்  சில குறிப்புகளும்  சிலப்பதிகாரத்தில் அடியார்க்கு நல்லார் உரை மூலம் கிடைக்கப்பெறுகிறது.இந்த நூலின் வேறு குறிப்புகள் கிடைக்கப்பெறவில்லை.
                             நன்றி                                       பழந்தமிழர் ஆடலில் இசை நூலில் கண்டவை.
  

1 comment:

ப. மதன் பாரத் said...

நல்ல முயற்சி நண்பா வாழ்த்துக்கள்