பொன். சங்கர்
Wednesday, 7 October 2026
ஒரு கோடி கனவு - ஹர்சத்மேத்தா, சுசேதா தலால்
Tuesday, 6 October 2026
ஒரு கோடி கனவு 4.BR என்னும் காகிதம்
Saturday, 3 October 2026
3 .ஒரு சாதாரண மனிதனின் அசாதாரண பயணம்
Friday, 2 October 2026
1991- லைசென்ஸ் ராஜ் சட்டம் நீக்கப்பட்டு இந்தியா மாறிய ஆண்டு
Saturday, 26 September 2026
ஒரு கோடி கனவு - ஹர்சத்மேத்தா எ(வி)ழுந்த கதை
Tuesday, 22 September 2026
பயணம் தந்த கதைகள் -5
Monday, 21 September 2026
பயணம் தந்த கதைகள் -4
சென்னை புத்தகக் கண்காட்சி 2026 . வழக்கம்போல் புத்தகங்களின் நறுமணமும், தமிழ் ஆர்வலர்களின் கூட்ட நெரிசலும், அறிவுச் சலசலப்பும் நிறைந்திருந்தது..
2026-ஆம் ஆண்டின் அந்தப் புத்தகத் திருவிழாவில், சிந்தனைக் கவிஞர் கவிதாசன் ஐயா அவர்களின் ஆசியால் உருவாகியிருந்த ஒரு நூல் மக்கள் பார்வைக்கு வரத் தயாராக இருந்தது.
‘சிந்தனைக் கவிஞர்’ கவிதாசன் அவர்களிடம் நான் நேர்காணல் நடத்தி, அதை ஒரு புத்தக வடிவில் செதுக்கியிருந்தேன். அந்த நூலின் பெயர் ‘சிந்தனைக் கவிஞர் கவிதாசனின் வெற்றிப் படிக்கட்டுகள்’.
விழாவுக்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக அமைந்திருந்தன. மேடையில் கம்பீரமாக அமர்ந்திருந்தார்கள் சிறப்பு விருந்தினர்கள். எழுத்தாற்றலாலும் சிந்தனையாலும் பலரையும் ஈர்த்த சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்கள், தன்னுடைய காந்தக் குரலாலும், தெளிவான உச்சரிப்பாலும் இன்றும் இளைஞர்களுக்கு வழிகாட்டியாகத் திகழும் மூத்த நடிகர் சிவகுமார் அவர்கள், மற்றும் தமிழ்ப் புத்தக உலகிற்குத் தொடர்ந்து சேவை ஆற்றிவரும் விஜயா பதிப்பகத்தின் திரு. வேலாயுதம் அவர்கள், குமரன் பதிப்பகம் திரு.வைரவன் அவர்கள்.
நூல் வெளியீட்டு விழா கோலாகலமாகத் தொடங்கியது. பொன் சங்கராகிய நான், மேடைக்குக் கீழே பார்வையாளர்கள் வரிசையில் அமைதியாக அமர்ந்திருந்தேன்.
சிந்தனைக் கவிஞர் கவிதாசனின் வெற்றிப் படிக்கட்டுகள் நூல் நான்கு மாத தவம் இன்று ஒரு நூலாகப் பலரின் கரங்களைச் சென்றடையப் போகிறது என்ற பெருமிதம் மட்டுமே என் மனதின் ஒரு ஓரத்தில் மெல்லப் பூத்துக் கொண்டிருந்தது.
மேடையில் நடப்பவற்றை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
திடீரென அந்த நெகிழ்ச்சியான தருணம் நிகழ்ந்தது!
மேடையில் பேசிக் கொண்டிருந்த சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்களின் பார்வை பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்த என் மீது விழுந்தது. பேச்சின் நடுவே, "இந்த நூலின் வெற்றிக்குக் காரணமான பொன் சங்கர் கீழே அமர்ந்திருக்கக் கூடாது, அவர் மேடைக்கு வர வேண்டும்" என்று அன்போடு அழைத்தார்.
என் கால்கள் தள்ளாட, இதயத் துடிப்பு அதிகரிக்க நான் மேடையை நோக்கிச் சென்றேன். கவிஞர் கவிதாசன் அவர்கள் என் கரங்களைப் பற்றி, மேடையில் எனக்குரிய இடத்தில் அமர வைத்தார். அதுமட்டுமன்றி, அங்கே வீற்றிருந்த மூத்த கலைஞர் சிவகுமார் அவர்களிடம் என்னை ஆளுமையோடு அறிமுகப்படுத்தினார்.
இவர்தான் இந்த வெற்றிப் படிக்கட்டுகள் நூலைச் செதுக்கிய பொன் சங்கர்..." என்று கவிதாசன் ஐயா கூறிய அந்த வார்த்தைகள் என் காதுகளில் அமுதமாகப் பாய்ந்தன.
உடனே, பொன்னாடையைக் கரங்களில் ஏந்திய நடிகர் சிவகுமார் அவர்கள், தம் புன்னகை தவழும் முகத்தோடு என்னை நோக்கினார். அவருடைய பொற்கரங்களால் என் தோள்களில் அந்தப் பொன்னாடையைப் போர்த்தியபோது, என் உடலில் ஒரு சிலிர்ப்பு பரவியது. ஒரு மாபெரும் கலைஞனின் ஆசியும், ஒரு சிந்தனையாளரின் வழிகாட்டுதலும் எனக்கு ஒரே நேரத்தில் கிடைத்த அந்த நொடி, எனக்குள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத பரவசத்தைக் கொடுத்தது.
அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது. எளிமையாக வந்த ஒரு எனக்கு, திரளான மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் கிடைத்த அந்த அங்கீகாரமும் கௌரவமும் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்களால் என் வாழ்நாளின் ஆகச்சிறந்த பரிசாக மாறியது.
ஒரு புத்தகத்தின் வெளியீடு என்பது சாதாரண ஒன்றுதான், ஆனால் 'வெற்றிப் படிக்கட்டுகள்' நூலின் வெளியீடு, என் வாழ்க்கைப் பயணத்தின் உண்மையான 'வெற்றிப் படிக்கட்டாக' அமைந்தது.
சிந்தனைக் கவிஞர் கவிதாசன் ஐயாவின் பெருந்தன்மையும், நடிகர் சிவக்குமார் , விஜயா பதிப்பகம் வேலாயுதம் ஐயா குமரன் பதிப்பகம் திரு.வைரவன் ஐயா கரங்களால் எனக்குக் கிடைத்த பொன்னாடை கௌரவமும் என்றும் என் நெஞ்சில் பசுமையாக நிலைத்திருக்கும்.