இந்திய வேளாண்மை;
மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்கள்
இந்திய விவசாயிகளுக்கு ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார்.விவசாயிகள் வேளாண் தொழிலை கைவிட்டு
வேறு தொழிலை நாட வேண்டும் என்று.
மரபணு மாற்ற விதைகள்தான் மனித இனத்துக்கு சோறிடும்
என்று பிரதமரும் சரத்பவாரும் அமெரிக்க மகுடிக்கு ஆடுகிறார்கள்.என்டோசல்பைனுக்கு இவ்வளவு
வக்காலத்து வாங்கும் அரசு அவர்களிடம் வாங்கிய தொகையையும் குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்.
உணவு என்பது கார்ப்பரேட் கம்பெனிகளின் சொத்தாக
மாற்றப்பட்டு நாம் அனைவரும் அவர்களிடம் கையேந்தி வரிசையில் நிற்கும் நிலையை உருவாக்கி
விட்டனர்.இந்திய வேளாண்த்துறை அமைச்சர்களுக்கு பூச்சிக்கொல்லி நிறுவனங்கள்தான் சம்பளமே
கொடுக்கிறார்கள் என்பது இதன் மூலம் நிருபனமாகிறது.
காடுகள் காட்சிப் பொருளாக்கப்பட்டு விதைகள் அழிக்கப்பட்டு
கார்ப்பரேட் கம்பெனிகளின் ஆசியால் தண்ணிர் மாயமாக்கப்பட்டு வருகிறது.
விதைத்தவனுக்கு விலையில்லா அரிசி வழங்குவதுதான்
இந்த அரசுகள் செய்த அரும் சாதனை
No comments:
Post a Comment