Sunday, 24 November 2013

பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார்

    பண்டிதமணி                                                                                                                    கதிரேசனாரின் துவக்க காலத் தமிழ்த் தொண்டில் குறிப்பிடத்தக்கது மேலைச் சிவபுரியில் இவர் அமைத்து நடத்திய 'சன்மார்க்க சபை' ஆகும். பொருளியலில் காட்டிய ஆர்வத்தை நகரத்தார் கல்வியில் காட்டாதிருந்த அக்காலத்தில் சன்மார்க்க சபையின் மூலம் அவ்வினத்தாரிடம் தமிழார்வத்தைத் தூண்டி வளர்த்த பெருமை கதிரேசனாரையே சாரும். இதற்கு பொருளுதவி செய்தவர் பழநியப்ப செட்டியார் என்ற பெரும் செல்வராவார். மேலும் இச்சபையின் பிரிவுகளாக 'கணேசர் செந்தமிழ்க் கலாசாலை', 'தொல்காப்பியனார் நூல் நிலையம்' ஆகியவை ஏற்படுத்தப்பட்டு சிறப்பாக நடைபெற்றன. இச்சபை பல பேரறிஞர்கள் முன்னிலையில் இவரின் தமிழ்த்தொண்டினைப் பாராட்டி பண்டிதமணி என்ற பட்டத்தை வழங்கியது அக்காலத்தில் வாழ்ந்த பெரும் புலவர்கள் இச்சபையில் சொற்பொழிவாற்றியுள்ளனர். இவர்களில் திரு. வி. க., உ. வே. சாமிநாதைய்யர், மகாவித்துவான் ரா. ராகவ ஐயங்கார், கா. சுப்பிரமணியப் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார், சுவாமி விபுலானந்தர், உமாமகேசுவரம் பிள்ளை, கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். இச்சபையின் ஆதரவால் தான் பண்டிதமணி அவர்கள் 'கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்தை' தமிழில் மொழிபெயர்க்கத் துவங்கினார். ஆனால், இப்பணி இவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய போதுதான் முடிவுற்றது. இச்சபையின் சார்பாகத் துவக்கப்பட்ட 'கணேசர் செந்தமிழ்க் கல்லூரி', சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு சிறப்புடன் நடந்து இன்றும் இவரின் தமிழ்த்தொண்டினை நினைவூட்டும் சின்னமாக விளங்குகிறது

தமிழர் வழிபாட்டு முறை

தமிழர் வழிபாட்டு முறையை இசையிலிருந்து பிரிக்க முடியாது என்பதைப் பக்தி இலக்கியங்கள் தெளிவுபடுத்துகின்றன. இன்று நமக்குக் கிடைத்திருக்கும் பதிகங்களில் பெரும்பாலானவை, சிவபாத சேகரன் என்றும், திருமுறைகண்ட சோழனென்றும் போற்றப்பட்ட இராசஇராச சோழனின் பெரு முயற்சியால் சிதம்பரம் கோவிலில் பூட்டி வைக்கப்பட்ட அறையிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டளவில் வெளிக் கொணரப்பட்டவையே. அவற்றில் பண்ணிசை ஏதென்று அறியாத பதிகள் இருக்கக் கண்டு, அச்சோழன் யாழ்ப்பாணர் பரம்பரையில் வந்த மதங்க சூளாமணியார் என்னும் பெண்மணியை அழைத்துப் பண்ணினை வரையறுக்கும்படிப் பணிக்க, அவர் வரையறுத்தப் பண் வரிசையிலேயே அவைகள் இன்றும் பாடப்படுகின்றன.
பத்து பத்தாக பாடல்களைப் பாடும் பதிகங்கள் என்ற முறையின் முன்னோடியாகச் சொல்லப்படுபவர் காரைக்காலம்மையார் என்று போற்றப்படும் புனிதவதியார். இவர் பாடிய பதிகங்கள் "மூத்த திருப்பதிகங்கள்" என்று அழைக்கப்படும். அம்மையார் வாழ்ந்த காலம் கி.பி.5 ஆம் நூற்றாண்டாகும். இவர் தெய்வத்தைப் பண்ணிசையில் பாடி வழிகாட்டினார். இவர் பாடிய பதிகங்கள் "மூத்த திருப்பதிகங்கள்" என்று அழைக்கப்படும். அம்மையார் வாழ்ந்த காலம் கி.பி.5 ஆம் நூற்றாண்டாகும். இவரைத் தொடர்ந்து சைவ சமயத்தின் நான்கு தூண்களாக சொல்லப்படும் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் இவர்களில் முதல் மூவர் பல பதிகங்களைத் தமிழ்ப்பண்ணிசையில் பாடியிருக்கின்றனர். தேவாரப்பண்கள் மக்களிடையே மிகப் புகழ்பெற்றமையால், இராசராச சோழன் தொடங்கி பல அரசர்கள் தமிழகத்தின் கோவில்களில் இவற்றை முறைப்படி இசையுடன் பாட ஓதுவார் என்னும் இசைக்கலைஞர்களை நியமித்தனர். இவ்வோதுவார்களின் பணி இன்றும் தமிழகக் கோவில்களில் தொடர்கிறது. சைவ நாயன்மார்களால் தமிழ் இசை முறைப்படி தேவாரப் பாடல்கள் காலந்தோறும் இசைக்கப்பட்டன. திருநீலகண்ட யாழ்ப்பாணர் வரலாறு இசைக்கருவியோடு இணைந்து அமைந்தது ஆகும். கோயில்களில் இசை வல்லார் அமர்த்தப் பெற்றிருந்ததையும், தேவாரம் ஓதப் பெற்றததையும் தஞ்சைப் பெரிய கோயில் முதலான பல கோயில் கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன. பிற்காலத்து அருணகிரி நாதர் தம் திருப்புகழ் முழுவதாயும் பல்வேறு சிவத்தலங்களில் இசைமழைப் பொழிந்து கொட்டியதை அவர்தம் திருப்புகழ் வரலாறு எடுத்துரைக்கிறது.
திருநாவுக்கரசர் அருளியத் தமிழ்ப் பதிகமான தேவாரத்தில் அதிகமாக இருபத்தோரு பண்கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. சிலர் இருபத்துநான்கு என்றும், இன்னும் சிலர் இருபத்தேழு என்றும் கூறுகின்றனர். எப்படியாயினும் தேவாரம் முழுதுமே ஒரு முறையான பண்ணிசை வரிசையில் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். ஒன்பதாவது திருமுறையில் சொல்லப்படும் “சாளராபாணி” என்னும் பண் மற்ற திருமுறைகளில் பயன்படுத்தப்படவில்லை.

ஏழிசையின் தமிழ்ப் பெயர்

வ. எண் ஏழிசையின் தமிழ்ப் பெயர் ஏழிசையின் வடமொழிப் பெயர் பறவை விலங்குகளின்
குரலொலி
1. குரல் சட்சம் மயிலின் ஒலி
2. துத்தம் ரிஷபம் மாட்டின் ஒலி
3. கைக்கிளை காந்தாரம் ஆட்டின் ஒலி
4. உழை மத்திமம் கிரவுஞ்சப் பறவையின் ஒலி
5. இளி பஞ்சமம் பஞ்சமம்
6. விளரி தைவதம் குதிரையின் ஒலி
7. தாரம் நிஷாதம் யானையின் ஒலி

பாண்டிய மன்னர்களின் பட்டியல்

பாண்டிய மன்னர்களின் பட்டியல்
முற்காலப் பாண்டியர்கள்
வடிம்பலம்ப நின்ற பாண்டியன் நிலந்தரு திருவிற் பாண்டியன்
முதுகுடுமிப் பெருவழுதி பெரும்பெயர் வழுதி
கடைச்சங்க காலப் பாண்டியர்
முடத்திருமாறன் மதிவாணன்
பசும்பூண் பாண்டியன் பொற்கைப் பாண்டியன்
இளம் பெருவழுதி அறிவுடை நம்பி
பூதப் பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
வெற்றிவேற் செழியன் கூட காரத்துத் துஞ்சிய மாறன் வழுதி
உக்கிரப் பெருவழுதி மாறன் வழுதி
நல்வழுதி குறுவழுதி
இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி நம்பி நெடுஞ்செழியன்
இடைக்காலப் பாண்டியர்கள்
கடுங்கோன் கி.பி. 575-600
அவனி சூளாமணி கி.பி. 600-625
செழியன் சேந்தன் கி.பி. 625-640
அரிகேசரி கி.பி. 640-670
ரணதீரன் கி.பி. 670-710
பராங்குசன் கி.பி. 710-765
பராந்தகன் கி.பி. 765-790
இரண்டாம் இராசசிம்மன் கி.பி. 790-792
வரகுணன் கி.பி. 792-835
சீவல்லபன் கி.பி. 835-862
வரகுண வர்மன் கி.பி. 862-880
பராந்தகப் பாண்டியன் கி.பி. 880-900
பிற்காலப் பாண்டியர்கள்
மூன்றாம் இராசசிம்மன் கி.பி. 900-945
வீரபாண்டியன் கி.பி. 946-966
அமர புயங்கன் கி.பி. 930-945
சீவல்லப பாண்டியன் கி.பி. 945-955
வீரகேசரி கி.பி. 1065-1070
சடையவர்மன் சீவல்லபன் கி.பி. 1145-1150
பராக்கிரம பாண்டியன் கி.பி.1150-1160
சடையவர்மன் பராந்தக பாண்டியன் கி.பி.1150-1162
மாறவர்மன் சீவல்லபன் கி.பி. 1132-1162
சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1162-1175
சடையவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1175-1180
விக்கிரம பாண்டியன் கி.பி. 1180-1190
முதலாம் சடையவர்மன் குலசேகரன் கி.பி. 1190-1218
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1216-1238
இரண்டாம் சடையவர்மன் குலசேகரன் கி.பி. 1238-1250
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1239-1251
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1251-1271
இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1251-1281
சடையவர்மன் விக்கிரமன் கி.பி. 1149-1158
முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1268-1311
மாறவர்மன் விக்கிரம பாண்டியன் கி.பி. 1268-1281
இரண்டாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1276-1293
தென்காசிப் பாண்டியர்கள்
சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1422-1463
மூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1429-1473
அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1473-1506
குலசேகர தேவன் கி.பி. 1479-1499
சடையவர்மன் சீவல்லப பாண்டியன் கி.பி. 1534-1543
பராக்கிரம குலசேகரன் கி.பி. 1543-1552
நெல்வேலி மாறன் கி.பி. 1552-1564
சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் கி.பி. 1564-1604
வரதுங்கப் பாண்டியன் கி.பி. 1588-1612
வரகுணராம பாண்டியன் கி.பி. 1613-1618

Saturday, 23 November 2013

பரிதமாற் கலைஞர்

பரிதமாற் கலைஞர்

                      டல்படை சூழ்ந்த இவ்வுலகின் கண்ணே பயிலுறும் மொழிகள் அனைத்தையும் ஆராய்ந்து வகுத்து அடைவுபடுத்தி நின்ற மொழிநூற் புலவர்கள் அவையிற்றை ஆரிய மொழிகள், துரானிய மொழிகள் என இரு பகுப்பினும் அடக் குவாராயினர். ஆரிய மொழிகளுள் அடங்குவன பலவற்றுள்ளும் தமிழ் மொழி தலைசிறந்த தொன்றாம். எனவே சமஸ்கிருதமும் தமிழும் வேறு வேறு மொழிகளென்பது வெள்ளிடை மலையென விளங்கும். ஆகவும் சிலர் தமிழ் முன்னதன் வழிமொழியேயன்றித் தனிமொழி யன்றென வாய் கூசாது கூறுவராயினர்.

சமஸ்கிருதமுந் தமிழும் ஒரே நாட்டின்கண் முறையே வடக்கினுந் தெற்கினுமாக வழங்கிய காரணம் பற்றி இவ்விரண்டுந் தம்மிற் சில்லாற்றாற் கலப்பனவாயின. அங்ஙனங் கலப்புழி ஒன்று பேச்சு வழக்கற்று ஏட்டு வழக்காய் மட்டில் நிற்ப, மற் றொன்று இருவகை வழக்கிலும் நின்றமையால் முன்னதன் சொற்பொருள்கள் பல பின்னதன்கட் போந்து வழக்கேற்பனவாயின. இது மொழி நூல் முறையே. இதனை பெய்யாதார் கூற்று ஒதுக்கற் பாலதென விடுக்க.

இனி மொழிநூற் புலவர்கள் வகுத்தவகை ஒருபுறமிருப்பச் சிலர் தமிழ் மொழியின் ஏற்றமுணராது மயங்கிப் பிறிதுபட வகுத்தனர். வடமொழியை உயர்தனிச் செம்மொழியினும் (Classical Language) தென்மொழியை உண்ணாட்டு மொழியினும் (Vernacular Languages) அடக்கி வகைப்படுத்தினர். அங்ஙனம் வகைப்படுப்புழி ஒன்று உயர்வும் மற்றொன்று தாழ்வுமாம் என்ற உட்கருத்துடன் படுப்பாராயினர். அவ்வுட் கருத்துச் சின்னாட்களில் வலியுறுவதாயிற்று. தனிமொழியென்றை அதன் வழிகளோடு வகைப்படுத்தலாமோ? அது முன்னதனை இழிவு படுத்தத்தகாதோ? தமிழனை உண்ணாட்டு மொழிகளுட் படுத்ததேயன்றித் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய அதன் வழி மொழிகளோடு ஒரு நிகரெனக் கூறலாமோ? ஆரிய மொழிகளுள் தலைநின்ற வடமொழியை அதன் பாகதங்களோடு ஒருங்குவைத்து எண்ணத் துணியாமை போலத் துரானிய மொழிகளுள் தலைநின்ற தென்மொழியை அதன் வழிமொழி களோடு ஒருங்குவைத்து எண்ணத் துணியா திருந்தலே அமைவுடைத்து.

இவ்வாறாகவும் நமது சென்னைச் சர்வகலா சாலையார் மேற்கூறியாங்குத் தமிழை இழிவுபடுத்தி வகுத்தபோதே, தமிழராயினார் முற்புகுந்து அவ்வாறு வகைப் படுத்தல் சாலாதென மறுத் திருத்தல் வேண்டும். அப்போழ் தெல்லாம் வாய்வாளாமை மேற்கொண்டிருந்துவிட்டனர் நம் தமிழ் மொழியாளர். ஆதலின் இப்போழ்தத்து, "சர்வகலாசாலை விசாரணை'  (Universities Commission) யில் தமிழ்மொழிக் கல்வியை யோக்கிதைப் பட்டப் பரீட்சைகளினின்றும் ஒதுக்கி விட்டனர். வடமொழி மட்டில் உயர்தனிச் செம்மொழியாதலின் வைத்துக்கொள்ளப்பட்டது.

ஈதென்னை வம்பு! அவ்வுயர் தனிச் செம்மொழி என்பதன் இலக்கணந்தா னென்னை? அதனைச் சிறிது ஆராய்வோம்.

தான் வழங்கும் நாட்டின் கணுள்ள பலமொழிகட்குந் தலைமையும் அவையிற்றினும் மிக்க மேதகவுடைமையுமுள்ள மொழியே உயர் மொழி என்பது இவ்விலக்கணத்தால் ஆராய்ந்த வழி. நம் தமிழ்மொழி தென்னாட்டில் வழங்கும் தெலுங்கு, கன்னட, மலையாள, துளுவங்களுக் கெல்லாம் தலைமையும் அவையிற்றினும் மிக்க மேதகவுடைமையால் தானம் உயர்மொழியே யென்க. தான் வழங்கு நாட்டில் பயிலும் ஏனைய மொழிகளின் உதவியின்றித் தனித்தியங்கவல்ல ஆற்றல் சான்றதே தனிமொழி எனப்படும். தான் பிறமொழிகட்குகச் செய்யும் உதவி மிக்கும் அவை தனக்குச் செய்யும் உதவி குறைந்தும் இருத்தலே வழக்காறு. தமிழ் மொழியின் உதவி களையப் படின் தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலியன இயங்குதலொல்லா; மற்றும் அவையற்றி னுதவி களையப்படினும் தமிழ்மொழி சிறிதுமிடர்ப்படுதலின்றித் தனித்து இனிமையி னியங்க வல்லது. இஃது இந்திய மொழி நூற் புலவர்கள் பலர்க்கும் ஒப்பமுடிந்தது. ஆதலின், நம் தமிழ்மொழி தனிமொழியே யென்க.

இனிச் செம்மொழியாவது யாது?

"திருந்திய பண்புஞ் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய மொழி புகல் செம்மொழியாம்' என்பது இலக்கணம். இம் மொழி நூல் இலக்கணம் நம்முடைய தமிழ்மொழியின் கண்ணும் அமைந்திருத்தல் தேற்றம். என்னை? இடர்ப்பட்ட  சொல் முடிபுகளும் பொருள் முடிபு களும் இன்றிச் சொற்றான் கருதிய பொருளைக் கேட்டான் தெள்ளிதின் உணரவற்றாய்ப் பழையன கழிந்து புதியன புகுந்து திருத்த மெய்தி நிற்றலே திருந்திய பண்பெனப்படுவது. இது தமிழ் மொழியின்கண் முற்றும் அமைந்திருத்தல் காண்க. நாட்டின் நாகரிக முதிர்ச்சிக் கேற்பச் சொற்களும் ஏற்பட்டுப் மொழிக்கும் நாகரிக நலம் விளைத்தல் வேண்டும். அவ்வாறு சொற்களேற் படுமிடத்துப் பிறமொழி சொற்களன்றித் தன் சொற்களே மேற்கோடல் வேண்டும். இவையும் நம் உயர்தனித் தமிழ் மொழிக்கும் பொருந்துவனவாம். ஆகவே தமிழ் தூய் மொழியு மாம். எனவே தமிழ் செம்மொழி என்பது ஒருதலை. இதுபற்றியன்றே தொன்று தொட்டு நம் தமிழ் மொழி, "செந்தமிழ்' என நல்லிசைப் புலவரால் நவின்றோதப் பெறுவதாயிற்று.

ஆகவே, தென்னாட்டின்கண் சிறந்தொளிரா நின்ற நம் அமிழ்தினுமினிய  தமிழ்மொழி எவ்வாற்றானாராய்ந்த வழியும் உயர்தனிச் செம்மொழியேயாம் என்பது திண்ணம். இத்துணை உயர்வுஞ் சிறப்பும் வாய்ந்த நம் அருமைத் தமிழ் மொழியை உண்ணாட்டுப் பன்மொழிகளோடு ஒருங்கெண்ணுதல் தவிர்த்து, வடநாட்டுயர் தனிச் செம்மொழி சமஸ்கிருத மெனக் கொண்டாற் போல, தென்னாட்டுயர் தனிச் செம்மொழி தமிழெனக் கொண்டு விதிகள் வகுத்தலே ஏற்புடைத்தாம். இதனை நமது கனம் பொருந்திய ராஜப் பிரதிநிதியவர்களும் சர்வகலா சாலையின் அவயவிகளும் உள்ளவாறே கவனித்து நடப்பார்களாக. இவர்கள் தமக்கு என்றுங் குன்றாப் பழியை விளைக்கத் தக்க செயலிற் புகாது புகழ் பயக்கற்பால நல்லாற்றிற் சென்று நம் தமிழ் மொழியும் உயர்தனிச் செம்மொழியென்றே கொண்டு ஒழுகுவார்களாக. ஆலவாயிற் பெருமானடிகளாகிய இறையனார் திருவருள் பெற்ற நம் தமிழ் மக்கள் என்றுந் தலைகவிழாது ஒளிர்க.

தமிழ்ப் பாடசாலைகள்

கிராமந்தோறும் தமிழ்ப் பாடசாலைகள் தொன்றுதொட்டு நடந்து வருகின்றன. கிராமச் சிறார்கள் இவற்றிற் கல்வி கற்று வருகின்றனர். இவற்றின் சரித்திரத்தை ஆராயுங்கால் ஐம்பது வருடங்கட்கு முன்னர் இப்பாடசாலைகளில் தமிழ் நன்கு பயிற்றுவிக்கப்பட்டதென்பதும், தற்காலத்தில் அத்துணை பயிற்றுவிக்கப்படவில்லை யென்பதும் எவரும் அறிந்த விஷயமே. இதன் காரணம் யாது?

தற்காலத்துத் தமிழ்ப் பாடசாலைகளில் வாத்திமைத் தொழில் நடத்துவோர் பெரும் பான்மையும் தமிழறிவு நுட்பங்கள் காணாதவரே. ஆங்கிலேய பாடசாலைகளிற் சில்லாண்டு கற்று ஆங்கிலேயமாயினும் தமிழாயினும் சீர்பெறக் கல்லாமல் உதரவலி ஒழித்தற் பொருட்டுத் திரிபவரே சிறுவர்களுக்குப் போதிக்க வருபவராவர். இவர்கட்கு இலக்கண இலக்கிய அறிவு சூனியம். "சட்டியிலுண்டானாலன்றோ அகப்பையில் வரும்' பண்டமில்லாத வாசிரியரிடங் கற்கும் மாணவர் எங்ஙனம் பயன்பெறுவர்? அன்றியும் ஆங்கிலம் அரச மொழியானதனால் முதன்மை பெற்று, நம் நாட்டு ஆலமரம்போல் தழைத்து விழுதுவிட்டு வலிமையுற்று விளங்கி வரும் இக்காலத்தில் சிறார் தமிழ்ப் பாடசாலைகளில் தங்கும் காலம் சிறிதேயாம்.

அன்னார் ஐந்து வயதாகும் முன்னர் ஆங்கிலம் கற்கத் தொடங்குகின்றனர். தமிழ் வாசமும் ஏற்காமல் ஆங்கிலக் கல்வி தொடங்கும் மாணவர் உடல் தேய்ந்து, கண் பூத்து, மனமிற்று நாளடைவில் யமனுக் குணவாகின்றனர். உலகறி வும் ஆயுள் விருத்தியும் குன்றிய இவர்களுடைய சந்ததியின் நிலையை நினைப்பிற் பரிதாபமே. மேலும் தமிழ் பயிற்றும் முறையைக் கவனிக்கப் புகின் வியப்பே. இலகுவாய்ப் பிள்ளைகளுக்குப் மொழியைக் கற்றுக் கொடுக்கக் கருதித் துரைத்தனத்தார் செய்திருக்கும் ஏற்பாடுகள் தமிழ் மொழிக்கு ஒவ்வாதனவே. முன்னிருந்த தமிழ்ப் பாடசாலை உபாத்தியாயருக்கு ஆங்கிலக் கல்வி கிடையாதாயினும் தமிழ் இலக்கண இலக்கியத் தேர்ச்சி மிகுதியுமுண்டு. பிள்ளைகளும் குறைந்தது பன்னிரண்டு வயதுவரை தமிழ் கற்றுவந்தார்கள்.

ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, உலகநீதி, வெற்றிவேற்கை, குறள், நாலடி, குறவஞ்சி, திவாகரம், நிகண்டு, எண்சுவடி, குழிப்பெருக்கம், தானப்பெருக்கம் இவை போன்ற நூல்களைப் பயின்று வந்தனர். எண்ணெழுத்திகழாத இம்மாணவர் பாக்களை வாசித்து அன்வயப் படுத்தி அருத்தஞ் சொல்லவும் கொடுத்த கணக்கை வாயாற்றீரவும் சக்தியுள்ள வராய், உலகில் (லௌகீக) அறிவு படைத்தவராய், ஒழுக்கம் விழுமிதாக் கொண்டவராய் நன்கு மதிக்கப்பட்டு வந்தனர். ஞாபக சக்தி தற்காலத்து வாலிபர்களுக்குப் பெரும்பான்மையும் கிடையாது. நான்கு பாட்டுச் சொல்ல ஏலாது, சிலேட்டி லாயினும் காகிதத்திலாயினும் எழுதிப்பாராமல் கணக்கு ஓடாது. இஃதன்றியும் கற்குங் காலவுளவும் சிறிதன்று. தமிழ்ப் பாடசாலை விட்டபின் குறைந்தபட்சம் பதினெட்டாண்டு செல்லும் பி.ஏ. பட்டம் பெற.

பதினொரு வயதில் ஆங்கிலம் கற்கப்புகுந்த மாணவரும் மேற்கூறிய காலவளவிற்கு முன்னரே அஃதாவது இருபது வயதில் பட்டம் பெற்று வந்தனர். இருதிறத்தாருக்கும் வித்தியாசம் என்னவெனில்... பின்னவர் நீண்ட ஆயுளும், அறிவு முதிர்ச்சியும், ஒழுக்கச் செல்வமும், உடற்றிறமும் பெற்றிருந்தனர். முன்னவரோ, ஈப்போல் நைந்தும், கண்ணொளியிழந்தும், இழைத்த நாள் எல்லையடையாததும், உடலாக்கம், மனவாக்கம் பெறாதும் கைப்பொருளிழந்தும் வருவாய் குன்றியும், தம்மைப் பெற்றார் தவிக்கவும், தாம் பெற்ற குழவிகள் துடிக்கவும் விட்டொழிகின்றனர்.
அந்தோ பாவம்! இப் பரிதாபநிலை தவிர்த்தல் எங்ஙனம்? துரைத்தனத்தாரும் தமிழபிமானிகளும் தமிழ்ப் பாடசாலைகளை நன்கு பாராட்டுதலினாற் கூடும். இன்ஸ்பெக்டராக ஏற்பட்டிருக்கும் தமிழர்கள் தக்க தமிழ்ப் பாடங்களை ஏற்படுத்த வேண்டும். தமிழ் கற்பிக்கும் முறை வேறு, மற்ற மொழிகள் கற்பிக்கும் முறை வேறு  என்பதை வற்புறுத்தித் தமிழின் விசேஷங்களை எடுத்துக் காட்டி ஆங்கிலப் போதனா முறை இதற்கு உதவாது என்பதை விளக்க வேண்டும். ஆங்கிலத் தேர்ச்சி மட்டுமின்றி; தமிழிலும் தக்க தேர்ச்சி யுடையவரைத் தெரிந்து ஆசிரியராக்க வேண்டும். அன்னார்க்கு மட்டும் போதனா முறை பயிற்றறவித்துப் போதகரா யனுப்பவேண்டும். சர்க்காருதவிப் பொருளையும் பாத்திரமறிந்து படைக்க வேண்டும். இத்தகைய குறிப்புக்களை கலப்பரேல், எல்லாத் தீமைத் தொழில் முன்போற் பறக்கும், மாணவர் மிக்க பயன்பெறுவர், வாழ்நாள் வீணானாகாமல் இம்மையிற் றழைத்து, மறுமைக்கும் வித்திடுவர் தமிழபிமானிகள்! தமிழபிவிருத்திக்கு ஆணிவேர் தமிழ்ப் பாட சாலைகளாதலினால் அவற்றைக் கண் திறந்து பாருமின். அவற்றிற்குப் பைதிறந்துதவுமின், வாக்குச் சகாயம் செய்யுமின், எவ்வாற்றானும் சிறார்கள் தமிழ்த் தாயைப் போற்றவல்ல வழிகளை நாடிக் கொடுமின்.

தமிழ் ஆகமம்- திருமந்திரம்

தமிழ் ஆகமம்- திருமந்திரம்

"யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற தொடருக்கு அடுத்துத் தமிழ் இனப்பெருமை பேசும், "ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' என்ற சமய- சமரசத்தை முன்வைத்த திருமூலரின் திருமந்திரம், சைவம் தந்த தமிழ் இலக்கியக் கொடைகளுள் சிறப்பாகக் குறிக்கத் தக்கது, "என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே' எனக் கட்டியம் கூறித் தொடங்கும்  திருமூலர், சைவத்தைத் தோத்திர நெறியிலிருந்து சாத்திர நெறிக்கு எடுத்துச் சென்றார். கி.பி. 14-ஆம் நூற்றாண்டு காலப் பகுதியில்,  அறிவாராய்ச்சிக்கு உட்படுத்தக் கூடிய அறிவியல் பூர்வமான, "சைவ சித்தாந்தம்' என்ற பெருநெறி தோன்ற வித்திட் டவர் திருமூலர். தென்னாட்டு அறிஞர்களால் வடமொழியில் படைக்கப்பட்ட ஆகமங்களை, மொழிபெயர்ப்புச் செய்யாமல், தமிழ் ஆகமமாகத் திருமந்திரம் படைக்கப்பட்டது. அறம், யோகம், மருத்துவம், தத்துவம் எனத் தமிழில் எழுந்த ஒரு சைவக் கலைக்களஞ்சியமாகவே திருமந்திரம் நிற்கிறது. உணர்வுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, இந்நூலை அறிவாராய்ச்சிக்கு உட்படுத்தினால் கிடைக்கும் புதையல்கள் அன்னைத் தமிழுக்கு அளப்பரிய செல்வங்களை வழங்கும்.

aankal tamil names


  • அகரமுதல்வன்
  • அக்கராயன்
  • அகவழகன்
  • அகத்தியன்
  • அகமகிழன்
  • அகமுகிலன்
  • அகிழவன்
  • அகில்
  • அகிலன்
  • அமுதன்
  • அமிர்தன்
  • அழகப்பன்
  • அழகன்
  • அருள்
  • அருளழகன்
  • அருள்நம்பி
  • அருணாச்சலம்
  • அரும்பொறையன்
  • அறவணன்
  • அறவாணன்
  • அறநெறியன்
  • அற்புதராசன்
  • அற்புதன்
  • அறிவன்
  • அறிவாற்றன்
  • அறிவு
  • அறிவழகன்
  • அறிவுநம்பி
  • அய்யாகண்ணு
  • அய்யன்
  • அனழேந்தி
  • அண்ணாதுரை
  • அண்ணாமலை
  • அன்பு
  • அன்புமணி
  • அன்பரசன்
  • அன்புக்கரசன்
  • அன்பழகன்
  • அன்பினியன்
  • அன்பானந்தன்
  • அடைக்கலநாதன்
  • அதிர்துடியன்
  • அமலன்
  • அம்பலவன்
  • அம்பலவாணன்
  • அம்பலக்கூத்தன்


  • ஆசை
  • ஆசைத்தம்பி
  • ஆசைநம்பி
  • ஆழியன்
  • ஆழிக்குமரன்
  • ஆற்றலறிவன்
  • ஆய்வகன்
  • ஆய்வகத்திறனன்
  • ஆற்றலரசு
  • ஆறுமுகன்
  • ஆளவந்தான்
  • ஆனந்தக்கூத்தன்
  • ஆனந்தன்
  • ஆனந்தத்தாண்டவன்
  • ஆனைமுகன்
  • ஆண்டான்
  • ஆராவமுதன்

  • இசைச்செல்வன்
  • இசையரசன்
  • இசையவன்
  • இசைச்சுடரன்
  • இசைச்சுடர்வாணன்
  • இயல்பரசன்
  • இயல்பிணன்
  • இயல்பிணனன்
  • இயலிசையன்
  • இரத்தினம்
  • இராவணன்
  • இரும்பன்
  • இரும்பொறையன்
  • இலக்கியன்
  • இலங்காபுரியன்
  • இலங்கைவேந்தன்
  • இலந்தையர்
  • இளங்கோ
  • இளங்கிள்ளி
  • இளங்கிள்ளிவளவன்
  • இளங்கோவன்
  • இளவளவன்
  • இளஞ்சிங்கன்
  • இளம்பரிதி
  • இனியவன்
  • இன்பன்
  • இனியன்
  • இமையன்
  • இமையவன்

  • ஈழவன்
  • ஈழக்கார்த்திகையன்
  • ஈழக்கார்த்திகேயன்
  • ஈழச்செம்பகன்
  • ஈழச்செல்வன்
  • ஈழக்குமரன்
  • ஈழவாகையன்
  • ஈழத்தமிழ்நெஞ்சன்
  • ஈழத்தாயகன்
  • ஈழவேந்தன்
  • ஈழவேந்தர்
  • ஈழவேங்கையன்
  • ஈழப்புயலோன்
  • ஈழநாதன்

  • உருத்திரன்
  • உருத்திரநாதன்
  • உடுக்கைநாதன்
  • உறுதிமொழியன்

  • எல்லாளன்
  • எழில்வேந்தன்
  • எழிலன்
  • எழில்குமரன்
  • எழில்வாணன்

  • ஏகளைவன்


  • ஐயாக்கண்ணு
  • ஐயாத்துறை

  • ஒற்றன்
  • ஒற்றறிவன்

  • ஓர்மவாணன்
  • ஓர்மத்தமிழன்
  • ஓர்மத்தமிழ்நெஞ்சன்
  • ஓர்மக்குரலோன்

  • கலையவன்
  • கலையரசன்
  • கலைவாணன்
  • கலைவண்ணன்
  • கண்ணிமையன்
  • கணனிப்பித்தன்
  • கணனிப்பிரியன்
  • கணனியன்
  • கணிமொழியன்
  • கணியுகவதன்
  • கணியன்
  • கனியன்
  • கனிமொழியன்
  • கதிரவன்
  • கதிர்காமர்
  • கதிர்காமன்
  • கதிர்காமக்கந்தன்
  • கந்தன்
  • கபிலன்
  • கவின்
  • கவினயன்
  • கமலன்
  • கரிகாலன்
  • கற்பூரமதியன்
  • கனகராயன்
  • கனகநாதன்
  • களங்கண்டான்
  • கரிகால் வளவன்
  • கவிநேயன்
கா
  • காந்தன்
  • கார்த்திகேயன்
  • கார்த்திகையன்
  • கார்முகிலன்
  • கார்த்திகைச்சுடரன்
  • கார்வண்ணன்
  • காரொளி வண்ணன்
  • கார்வேந்தன்
கீ
  • கீரிமலையவன்
  • கீர்த்தனன்
கே

கு
  • குகன்
  • குமரன்
  • குற்றாளன்

  • சங்கிலியன்
  • சச்சிதானந்தன்
  • சந்தனன்
  • சரவணன்
  • சற்குணன்
  • சமரன்
  • சமர்களன்
  • சமர்மறவன்
  • சமராய்வன்
  • சமர்திறமறவன்
சி
  • சிரிப்பழகன்
  • சிங்காரன்
  • சிலம்பன்
  • சிலம்பொலியன்
  • சிலம்பரசன்
  • சிங்காரவேலன்
சீ
  • சீலன்
  • சீறியக்குணத்தான்
சு
  • சுபீட்சணன்
  • சுடரவன்
  • சுடரொளி
  • சுடரொளியன்
  • சுடரொளிநாதன்
  • சுவையவன்
சூ

செ
  • செங்குட்டுவன்
  • செங்கோடன்
  • செந்தமிழன்
  • செந்தனல்
  • செந்தாமரையன்
  • செந்தில்
  • செந்தில்நாதன்
  • செந்தில்வேலவன்
  • செந்தில்குமரன்
  • செந்தூரன்
  • செயலவன்
  • செல்லக்குமார்
  • செல்லத்துறை
  • செல்லப்பன்
  • செல்லப்பா
  • செல்வக்குமார்
சே
  • சேயோன்
  • சேரன்
  • சேந்தன்
  • சேந்தன் அமுதன்
  • சேர்வராயன்

  • தமிழ்குமரன்
  • தமிழ்கேசவன்
  • தமிழ்சுவையவன்
  • தமிழ்சுவையோன்
  • தமிழ்மறவன்
  • தமிழ்மாறன்
  • தமிழ்சாமரன்
  • தமிழ்செல்வன்
  • தமிழ்நம்பி
  • தமிழேந்தி
  • தமிழ்நெஞ்சன்
  • தமிழ்நெஞ்சம்
  • தமிழோவியன்
  • தமிழ்மொழியினன்
  • தமிழ்தேசியன்
  • தமிழ்வளவன்
  • தமிழ்வாணன்
  • தமிழ்விழியன்
  • தமிழ்தாயகன்
  • தமிழழகன்
  • தமிழறிவன்
  • தமிழன்பன்
  • தமிழீழவன்
  • தமிழீழவளன்
  • தங்கன்
  • தங்கவடிவன்
  • தங்கவேலன்
  • தங்கவடிவேல்
  • தங்கவடிவேலவன்
  • தங்கத்துறை
  • தங்கத்துறைவாணன்
  • தமிழோவியன்
  • தாமரைவிழியன்
  • தாமரைச்செல்வன்
  • தாமரைக்கண்ணன்
தி
  • திகழ்வன்
  • திகழ்முகிலன்
  • திகழ்வாணன்
  • திகழொளியன்
  • திகிழன்
  • திகிழறிவன்
  • திருமாவளவன்
  • திருச்செல்வன்
  • திருநிறைச்செல்வன்
  • திருகோணமலையன்
  • திருக்கைலாசன்
  • திருமால்

து
  • துகிலன்
தூ
  • தூயவன்
  • தூயமதியன்
  • தூயறிவன்
  • தூயோன்
தே
  • தேசியன்
  • தேசியச்செல்வன்
  • தேசிகன்
  • தேசநேசிகன்
  • தேடலரசன்
  • தேடலறிவன்
தொ
  • தொல்காப்பியன்
  • தொல்நோக்கன்
  • தொள்வாணன்
  • தொள்மாவளவன்

  • நற்கீரன்
  • நல்லூழவன்
  • நந்தியன்
  • நந்திவர்மன்
  • நந்தியவர்மன்
  • நலங்கிள்ளி
  • நற்குணன்
  • நற்குணத்தான்
  • நற்குணராசன்
  • நற்சீலன்
  • நம்பி

நா
  • நாகன்
  • நாகராயன்
  • நாலடியார்
  • நாசிகன்
  • நாவினியன்
  • நாகரத்தினம்
  • நாகராஜ்
  • நந்தகுமார்
  • நாகையன்
  • நாகலிங்கம்
நி
  • நித்தியன்
  • நித்தியவாணன்
  • நித்திலன்
  • நினைவழகன்
நு
  • நுற்பவினைஞ்ஞன்
  • நுன்மதியன்
  • நுன்மதியோன்
நெ
  • நெடுங்கிள்ளி
  • நெடுஞ்செல்வன்
  • நெடுஞ்செழியன்
  • நெடுமாறன்
  • நெடுமால்
  • நெடுமாலவன்

  • பகலவன்
  • பரிதி
  • பரிதிநாதன்
  • பவித்ரா
பா
  • பாவலன்
  • பாண்டியன்
  • பாரி
பு
  • புண்ணியன்
  • புண்ணியவாணன்
  • புதினன்
  • புதுமைப்பித்தன்
  • புலன்கொண்டான்
  • புகழேந்தி
பூ
  • பூவரசன்
  • பூரண சங்கீத நாதன்
பே
  • பேரரறிவன்
  • பேரரறிவாளன்
பொ
  • பொதிகைமாறன்

  • மதிவளன்
  • மதிவாணன்
  • மதிநுற்பன்
  • மதியழகன்
  • மயூரநாதன்
  • மயூரன்
  • மயூரேசன்
  • மலர்வாணன்
  • மலரவன்
  • மலர்விழியன்
  • மலைமாறன்
  • மணிமாறன்
  • மணவாளன்
  • மாயோன்
மா
  • மாந்தன்
  • மாந்தநேயன்
  • மாறன்
  • மாமணியன்
  • மாமலையன்
மு
  • முகில்
  • முகிலன்
  • முகில்வதனன்
  • முகில்வாணன்
  • முரளிதரன்
  • முருகன்
  • முத்து
  • முத்துக்குமரன்
  • முத்துச்சிற்பி
  • முல்லையன்
  • முல்லைச்சமரன்
  • முத்தையன்
  • முக்காவியன்
  • முத்தப்பன்
மூ
  • மூலகநாதன்
  • மூலகவதன்
  • மூலகன்
  • மூவிசைச்செல்வன்
  • மூவேந்தன்
மொ
  • மொழியினன்
  • மொழிவழகன்
  • மொழிவளவன்
  • மொழிவாணன்
  • மொழிப்பற்றன்
மௌ
  • மௌனி
யா
  • யாழ்வேந்தன்
  • யாழவன்
  • யாழினியன்
  • யாழ்வாணன்
  • யாழ்பாடியார்
  • யாழ்ப்பாணன்
  • யாழ்குமரன்

  • வசுசேனன்
  • வசுதன்
  • வசுநேசன்
  • வடமலைவாணன்
  • வடிவழகன்
  • வடிவேலவன்
  • வடிவேலன்
  • வண்ணமதியன்
  • வணிகநாதன்
  • வணிகவாசன்
  • வரவணையான்
  • வல்லவராயன்
  • வள்ளுவன்
  • வளவன்
  • வன்னியன்
வி
  • விழியன்
  • விண்ணவன்
  • வில்லவன்
  • விடுதலைவேற்கன்
  • வினைத்திறன்
  • வினைத்திறமிகுந்தன்
வீ'
  • வீரசிங்கன்
  • வீரவர்மன்
  • வீரக்குலத்தோன்
  • வீரகேசவன்
  • வீரமறவன்
வெ
  • வெண்மதியன்
  • வெற்றி
  • வெற்றிக்குமரன்
  • வெற்றிச்செல்வன்
  • வெற்றியரசன்
  • வெற்றிவளவன்
வே
  • வேங்கையன்
  • வேலன்
  • வேலவன்
  • வேல்விழியன்
  • வேலுப்பிள்ளை
வை
  • வைகறைக்குமரன்
  • வையகநாதன்
  • வைரவன்
  • வைரமணியன்

Thursday, 14 November 2013

சுத்தானந்தபாரதியாரும் பேரூராதீனமும்



சுத்தானந்தபாரதியாரும் பேரூராதீனமும்
           தமிழ் மொழி வரலாற்றில் குறிப்பிடத்தகுந்தவரில் ஒருவர் கவியோகி சுத்தானந்த பாரதியார்.பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்கள் 1951 ம் ஆண்டு சத்வித்ய சன்மார்க்க சங்கத்தின் 35 வது ஆண்டு விழாவிற்கு அழைத்தார்.கவியோகி அவர்கள் 22 வருடம் எங்கும் பேசாமல் மவுனம் காத்து வந்தார். பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளாரின் தொடர் கடித வற்புறுத்தல் காரணமாக பேரூராதீன விழாவில் தம்முடைய மவுனத்தைக் கலைத்து சீவ-சிவரகசியம் எனும் தலைப்பில் மூன்று மணி நேரம் உரை நிகழ்த்தினார். 
       கவியோகி சுத்தானந்த பாரதியாரின் 22 வருட மவுன தவத்தை கலைத்த பெருமை பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்களையே சாரும்.

Wednesday, 13 November 2013



இந்திய வேளாண்மை;
    மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்கள் இந்திய விவசாயிகளுக்கு ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார்.விவசாயிகள் வேளாண் தொழிலை கைவிட்டு வேறு தொழிலை நாட வேண்டும் என்று.
 மரபணு மாற்ற விதைகள்தான் மனித இனத்துக்கு சோறிடும் என்று பிரதமரும் சரத்பவாரும் அமெரிக்க மகுடிக்கு ஆடுகிறார்கள்.என்டோசல்பைனுக்கு இவ்வளவு வக்காலத்து வாங்கும் அரசு அவர்களிடம் வாங்கிய தொகையையும் குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்.
   உணவு என்பது கார்ப்பரேட் கம்பெனிகளின் சொத்தாக மாற்றப்பட்டு நாம் அனைவரும் அவர்களிடம் கையேந்தி வரிசையில் நிற்கும் நிலையை உருவாக்கி விட்டனர்.இந்திய வேளாண்த்துறை அமைச்சர்களுக்கு பூச்சிக்கொல்லி நிறுவனங்கள்தான் சம்பளமே கொடுக்கிறார்கள் என்பது இதன் மூலம் நிருபனமாகிறது.
     காடுகள் காட்சிப் பொருளாக்கப்பட்டு விதைகள் அழிக்கப்பட்டு கார்ப்பரேட் கம்பெனிகளின் ஆசியால் தண்ணிர் மாயமாக்கப்பட்டு வருகிறது.
      விதைத்தவனுக்கு விலையில்லா அரிசி வழங்குவதுதான் இந்த அரசுகள் செய்த அரும் சாதனை

பேரூராதீனமும் தோழர் ஜீவானந்தம்



பேரூராதீனமும் தோழர் ஜீவானந்தம்

      பேருராதீனம் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்களோடு தோழர் ஜீவானந்தம் அவர்கள் நெருங்கிய நட்பினைப் பெற்றவராக திகழ்ந்துள்ளார்.
    பேருரடிகளாருக்கு எழுதிய கடிதத்தில் ‘200 வருட ஆட்சி மொழியான ஆங்கிலத்தை அகற்றினாலும் இன்றும் பொது மொழியாகத் தான் திகழ்கிறது.திருக்கோவில்களில் தமிழ் முழக்கம் கேட்க தாங்கள் பணி அறிந்து மகிழ்ந்தேன்.தமிழ்நாட்டில் எல்லாக் கோவில்களிலும் தமிழ் மந்திரம் ஒலிக்க தங்களின் முயற்சிக்கு உறுதுணையாக இருப்போம் என்று தம் கடிதத்தில் எழுதியிருந்தார்.1957 1959 இரண்டு முறை பேரூரடிகளாரை தோழர் ஜீவானந்தம் சந்தித்து பேசியுள்ளார்.