Friday, 11 December 2015

இயற்கை அறிவு ,நீரும் நிலனும்,சூழல் தூய்மை

இயற்கை அறிவு

பழந்தமிழரிடையே காடு கொன்று நாடாக்கி வாழ்வது நாகரிகமாகக் கருதப்பட்டது. இருப்பினும், அவர்கள் அழித்த காடுகளுக்குப் பதிலாக குளம் தொட்டு வளம் பெருக்குவதை மேன்மையான அறமாகக் கருதி இயற்கைச் சமன்மையைப் பேணிப்பாதுகாத்துள்ளனர். ஐம்பூதங்களில் ஒன்றான நீரின் இன்றியமையாமை உணர்ந்து ‘நீரின்றியமையாது உலகு‘ (20) எனக் குறள் நீர்வளத்தின் மேன்மையைச் சொல்கிறது. ஐந்துபூதங்களின் அவசியத்தைப் பின்வரும் புறநானூற்றுப் பாடல் சொல்கிறது:
மண் திணிந்த நிலனும்
நிலம் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித்தலை இய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போல
புறம் 2
இப்பாடல் ஐம்பூதங்களும் மானுடத்தின் தேவைக்குப் பயன்படவேண்டும் என்கிறது.

நீரும் நிலனும்

நிலம் என்பது உடம்பு. நீர் என்பது உயிர். ”உடம்பால் அழியின் உயிரால் அழிவர்” என்பது திருமூலர் கூற்று. நிலம் எனப்படும் உடம்பு அழியாமல் காக்கப்பட வேண்டுமாயின், நீர்நிலைகளான உயிரைப்பேணவேண்டும் என்று பழந்தமிழர் உணர்ந்திருந்தனர். பழந்தமிழர் நீரின் சிறப்பை பலவகைகளில் எடுத்துரைக்கின்றனர். வள்ளுவர், அமிழ்தம் என்று மழைநீரைக் குறிப்பிடுகிறார்.
”நீரான் வீறு எய்தும் விளைநிலம்” என நீருள்ள நிலமே சிறப்புடையது, பெருமையுடையது என நான்மணிக்கடிகை கூறுகிறது. ‘தீமுரணிய நீரும்‘ என்ற புறநானூற்றுப் பாடல் நீர் நிலைகளைப் பெருக்கினால் புவி வெப்பமடைவதிலிருந்து தப்பிக்கலாம் என்கிறது.
நீரைத் தேக்கும் வழிகள் பற்றிய குறிப்புகளும் தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன. நீரின் இயல்பானது ‘குழித்துழி நிற்பது‘ (நாலடியார்.31) என்பதால், அந்நீரை குழிகள் (குளம்) அமைத்துத்தேக்க வேண்டும். `நீரான் அறிப மடுவினை‘ (நான்.80) என்ற பாடல் குளம் அமைத்து தேக்கும் நீர் ஒரு ஆறு உள் அடங்கும் அளவிற்கு இருக்கவேண்டும். (நான்.54) என்றும் நீரைக் காக்க வேண்டிய வழிமுறைகளைக் கூறுகிறது. இதன் மூலம் பழந்தமிழர்,குளம் தொட்டு வளம் பெருக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனார் என்பது புலனாகுகிறது.
குளம் பற்றிய பிற சங்க இலக்கிய குறிப்புகள்:
  • ”நிலன்நெளி மருங்கில் நீர்நிலை பெருகத் தட்டோர் அம்ம, இவண் தட்டோரே“ (புறம்.18.27)
  • மடு, குளம் (பெரும்.288,மதுரை.710,குறுஞ்சி.63,மலைபடு.47)
  • “அறையும்பொறையும் மணந்தலைய எண்நாள் திங்கள் அனைய கொடுங்கரை தெண்ணீர்ச்சிறுகுளம்....”(புறம்.118)
(இப்பாடல் எட்டாம்நாள் தோன்றும் பிறை போன்ற வளைந்த தோற்றுமுடையகரையுடைய குளம்கட்டப்பட்டு வேளாண்மைக்குப் பயன்படுத்தப்பட்டதைப் பற்றிக் கூறுகிறது.)
  • ‘நீர்அறம் நன்று நிழல் நன்று‘(சிறுபஞசமூலம்.61)
  • ”குளம்தொட்டு காவு”(சோலை) - (பதிற்றுப்பத்து 64)
  • ‘காவோடு அறக்குளம் தொட்டல் மிக இனிது‘
(குளம் அமைப்பதோடு சோலைகளை அமைப்பது அறச்செயல் என்கிறது இனியவை நாற்பது

நிலைகொள் சூழலியல்

நிலைகொள் வேளாண்மையின் அடிப்படைக் கூறான பிறருக்குத் தீங்கு வராவண்ணம் செயல்பட வேண்டுமென்பது இலக்கியங்களில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருக்குறள் நிழலும் நீரும் முதலில் இனிமையாக இருந்து பிறகு துன்பம் தருவதாக மாறிவிடக்கூடாது என எச்சரிக்கிறது.[1] பல்லாயிரக்கணக்கான உயிர்களுக்குத் தீமை தருவதாக மாறினால் ஒரு காப்பு உண்மையான காப்பு ஆகாது என முதுமொழிக்காஞ்சி ‘மேல்வரவறியாதோன் தற்காத்தல் பொய்‘ (பொய்ப்பத்து.7) என்கிறது. ,காரணமின்றி எவ்வுயிரையும் கொல்லக்கூடாது என்பதனை ‘சான்றோர் அவைப்படின் சாவாது பாம்பு‘ என சான்றோர் எனப்படுவோர் காரணமின்றி ஒரு பாம்பைக்கூட கொல்ல மாட்டார்கள் என்கிறது பழமொழிநானூறு (313).
தாவர இனங்களையும் காக்க வேண்டும். விளையாட்டிற்காக் கூட சிறு செடியையும் தாழ்வாகக் கருதி தீங்கிழைக்கக்கூடாது. சிறு செடியே பிற்காலத்தில் வளர்ந்து யானை பிணிக்கும் மரமாகிப் பயன்படும் என்று நாலடியார் சொல்கிறது.[2]
ஒரு செயலால் எதிர்காலத்தில் வரும் இடையூறுகளை அறிந்து அதற்கேற்பவே அதன் பயன்களை மக்கள் பெறுமாறு செய்யவேண்டும். முன்பு நன்மை போலத் தோன்றவன பின்னர் பெருந்தீமை தந்துவிடும் என்பதை ”ஏற்றமுடைமை எதிர்கோளினறிய” (எதிர்காலத்தி்ல் வரப் போகும் நன்மை தீமை அறிதல் - முதுமொழிக்காஞ்சி.12) என்றும் ”ஒப்புரவறிதலிற் தகு வரவில்லை” ( விளைவு அறிந்து செய்வதே சிறந்த வரவு முதுமொழிக்காஞ்சி.5) என்றும், ‘நன்மையும் தீமையும் நாடி ‘(குறள்) என்றும் தமிழ் இலக்கியங்கள் முன்னெச்சரிக்கை உணர்வோடு எதனையும் செய்ய வேண்டும் என்கின்றன.
பகுத்தறியும் ஆற்றல் பெற்ற மனிதனே அனைத்து உயிர்களையும் காக்கும் வல்லமை படைத்தவன். ஏலாதி இத்தகுதி பற்றியே மனிதனை, ‘பல்லுயிர்கும் தாயன்ன என்னத்தகும்‘ (5)எனப் போற்றுவதோடு உயிரினங்களையும்,தாவரங்களையும் காரணமின்றித் துன்புறுத்தாதவன் ‘விண்ணுலகத்தேவன்‘ (2)என்றும் அப்படிப்பட்டவன், ‘பிற உயிர்களைத் தானும் கொல்ல மாட்டான், பிறர் கொல்வதற்கும் உடன்படமாட்டான்‘(8) என்றும் உயர்த்திப் பேசுகிறது.

மழைவளம்

மரங்கள் பாதுகாக்கப்பட்டால் மாரி பொய்க்காது என்று பழந்தமிழர் உணர்ந்திருந்தனர். ‘நெல்லும் உயிரே நீரும் உயிரே‘ என்ற கருத்துடைய பழந்தமிழர் உழவிற்காகவும் வேள்விக்காகவும் மட்டுமே மரங்கள் வெட்டப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததினால், வெகு சில வகை மரங்களை மட்டுமே அழித்துள்ளனர்.
சந்தனம், வகுளம், அகில், வேங்கை, விசை, சுரபுன்னை போன்ற மரங்கள் மட்டுமே பயிர்த்தொழில் செய்ய அழிக்கப்பட்டுள்ளன. சந்தன மரங்களைத் தினைப் புனக்காவலின் போது வெயிலில் நின்று பறவைகளை விரட்ட வேண்டிய சூழலில் வெப்பம் தவிர்க்க மேனியில் தடவிக் கொள்ளப் பயன்படுத்தி உள்ளனர்.[3] மேலும், பரண்களுக்கு கால்கள் அமைக்கவும், சந்தனக் கட்டைகளை நெருப்பிலிட்டு புகையை வான்வழி செலுத்தினால் மழை வரும் என்ற நம்பிக்கையின் பொருட்டும் வெட்டியுள்ளனர்.[4]
சந்தன மரங்களைக் கொண்டு யாகம் செய்தால் மழை வரும் என வேதங்களும் கூறுகின்றன. மேற குறிப்பிட்ட மரங்கள் மட்டுமே அழிக்கப்படவேண்டும் என்பதில் கவனமாய் இருந்துள்ளனர். இதைத் தவிர்த்து சயநலத்திற்காக பிற மரங்களை வெட்டி அவ்விடத்தில் பயிர்த்தொழில் செய்பவர்களின் வீடுகளிலிருந்து பெண் எடுக்கவும் தயங்கியுள்ளனர். ‘சுயநலத்திற்காக மரங்களை வெட்டி அவ்விடத்தில் பயிர்த்தொழில் செய்பவர்கள் பிறர் படும் துன்பத்திற்கு வருந்த மாட்டார்கள். அவர்கள் வீட்டில் பிறக்கும் பெண்பிள்ளைகளும் பிறர்படும் துன்பத்திற்கு வருந்தமாட்டார்கள். அத்தகையோரின் பெண்ணை விரும்புவது குறித்து ஆராய்ந்து பார்‘ எனத் தோழன் ஒருவன் தலைவனுக்கு அறிவுரை கூறும் வகையில் திணைமாலைநூற்றைம்பது பாடல் ஒன்று உள்ளது.[5]
மரங்களை வெட்டுவதை மட்டுமின்றி, மரங்களின் நுனியைக்கூட கிழிப்பதை அறமன்று எனக் கருதியுள்ளதை “எம்நாட்டில் அற நெறி தவறிநடப்பவர்கள் எவரும் இல்லையாதலால் கண்டல் சோலைகளில் உள்ள தாழை மரங்களின் நுனிப்பகுதிகள் முறிந்த காட்சியைக் கூட எங்கும் காணமுடியாது” என தோழியொருத்தி தலைவனிடம் தன் நாட்டின் சிறப்பினைக் கூறுகிறாள்.[6]
இதிலிருந்து பழந்தமிழர் மரக்கிளைகளின் நுனியைக் கிழிப்பதைக்கூட அறமற்ற செயலாகக் கருதியுள்ளனர் என்பதை அறியலாம். நற்றிணைப் பாடலொன்றும் ஞாழல் மரத்தின் நுனியைப் பறித்து சிதைத்த தலைவி பற்றி கூறுமிடத்து, ‘தலைவனின் பிரிவுத்துயரின் காரணத்தினால் மனம் பேதலித்து தன்னையறியாமல் அச்செயலைச் செய்துவிட்டாள்‘ எனக்கூறுவதாக உள்ளது (106). தலைவனின் பரிவைப்பற்றிக் கேட்டளவில் தனக்குள் ஏற்பட்ட மிகுதுயரை சொற்களில் வெளிப்படுத்தாமல், ஞாழல்மரத்தின் பூக்களை உதிர்த்து சினத்தை வெளிப்படுத்துகிறாள். சினத்தினால், அறிவு மயங்கிய நிலையில் அவ்வாறு செய்துவிட்டாள் என பூவைக்கூடத் தேவயின்றி பறிப்பது மடமை எனக் கூறுகிறது.[7]
தமிழர் மரங்களைத் தன் சக உயிர்களாகக் கருதிய திறத்தை பல பாடல்கள் காட்டுகின்றன. அவற்றில் ஒரு பாடலில் ”உடன்போக்குச் சென்ற தலைவியைத் தேடியலையும் ஒரு செவிலித்தாய் வழியில் தென்படும் கோங்கமரத்தைப் பார்த்து நீயும் ஒரு தாய். குலைகளை ஈன்றிருக்கிறாய். என் நிலையறிந்து மனம் நெகிழ்ந்து மொழி வழி இல்லையாயினும் உன் முள் எயிற்றால் அவள் சென்ற வழி காட்டு“ (திணைமாலை நூற்றைம்பது.65) என்கிறாள்.
தமிழர் நீர் வளம் பெற்றுச் சிறப்போடு வாழும் வாழ்வையே போற்றியுள்ளனர். ”கயம் திகழ் சோலை மலைநாடன் கேண்மை நயம் திகழும்” (ஐந்திணை ஐம்பது.5) என்ற பாடலில் வரும் ‘கயம் திகழ் சோலை நயம்‘ என்ற வரிகள் நீர் நிலையின் சிறப்பை எடுத்துக்காட்டுகிறது. மற்றொரு பாடல் இயற்கையைப் பேணிப் பாதுகாக்கும் மக்கள் நிறைந்த நாட்டில் அறியாமை என்பது இருக்கமுடியாது என்கிறது (ஐந்திணைஐம்பது.8). ”நாடா கொன்றோ காடா கொன்றோ..... எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி வாழிய நிலனே” என்ற ஔவையாரின் பாடலும் இதே கருத்தை முன் வைக்கிறது. இவ்வாறு பழந்தமிழர் மரங்களை, நீர்நிலைகளைப் பேணிப்பாதுகாத்துள்ளது தெரிய வருகிறது.

மக்கள் தொகைப் பெருக்கம்

சுற்றுப்புறச் சூழலை அச்சுறுத்தும் மக்கள் தொகை பெருக்கத்தை முதலில் கட்டுப்படுத்த வேண்டும். இதைக்கருத்தில் கொண்டே இன்னிலை ”ஒளிபாய் கண்ணே சீர்த்துற்று உகப்பாய் பெற்ற மகவு” (27) என்ற பாடலின் மூலம் முகத்திற்கு இரு கண்களைப் போல குடும்பத்திற்கு இரு மகவு போதும் என்கிறது.

சூழல் தூய்மை

வேனிற்காலங்களில் நீர்வளம் குறைந்து கிருமிகள் பெருகும். அக்காலத்தில் நீரைக் காய்ச்சிப் பருக வேண்டும் என நாலடியார் ‘குடநீர் அட்டு உண்ணும்‘ (382) வலியுறுத்துகிறது. வேனிற்காலத்தில் புது மண்பானையைப் பயன்படுத்த வேண்டும் என்றும் புது மண்பானையின் மண் மணம் நீங்க பாதிரிப்பூக்களைப் போட்டுவைக்கவேண்டும் என்றும் நாலடியார் கூறுகிறது: ”ஒள்நிறப் பாதிரிப்பூச் சேர்தலால் புத்தோடு தண்ணீர்க்குத்தான் பயந்தாங்கு” (நாலடியார்39)
இதைத் தவிர சுற்றுப்புறத் தூய்மையை வலியுத்தும் வகையில் நீர்அருந்தும் துறையில் ஆடை துவைத்தல்கூடாது என்பதை, ”துறைஇருந்து ஆடைகழுவுதல் இன்னா” (இன்னா நாற்பது.23) என்றும் பொதுஇடத்தில் உமிழ்நீர் உமிழ்வது கூடாது என்பதை ஆசாரக்கோவை ”இழியாமை நன்குமிழ்ந்தெச்சி அறவாய்” (27)என்றும், உணவு உண்பதற்கு முன்னும் பின்னும் வாய் கழுவுதல் அவசியம் (ஆசாரக்கோவை.27) என்றும் தொற்றுக்கள் கண்களைப் பாதிக்காமலிருக்க பிறர் பயன்படுத்திய பொருட்களைப் பயன்னபடுத்தக்கூடாது என்பதை ”கண்ணெச்சில் கண்ணூட்டார்”. (ஆசாரக்கோவை 41) என்றும் இலக்கியங்கள் கூறுகின்றன.
இயற்கை முறையில் பழுக்க வைப்பதின் சிறப்பு பற்றி நாலடியார், ”வேம்பின் இலையுள் கனியினும் வாழை தீஞ்சுவை யாதும் திரியாதாம்” (244)என்ற பாடல் மூலம் வேப்ப மர இலைகளுக்குள் பழங்களை பழுக்க வைப்பது சிறந்த முறை என்கிறது.

பேரிடர் மேலாண்மை

பூகம்பத்தினால் ஏற்படும் கடல்சீற்றம், புயல் போன்றவற்றினால் ஏற்படும் கடல் சீற்றம் எனக் கடல் சீற்றங்கள் பலவகைப்பட்ட சீற்றங்களில் இருந்து ஓரளவு தம்மைக் காத்துக்கொள்ளமுடியும் என்பதை பழந்தமிழர் அறிந்திருந்தனர்.
இலக்கியத்தைக் காக்க இலக்கணகத்தைப் போற்றி வளர்த்தது போல் உலகைக் காக்க சூழல் காப்பில் கவனம் செலுத்தினர். ”கடலும் கானலும் போல புல்லிய சொல்லும் பொருளும்” (பரிபாடல்.15.11-12) என்ற பாடல் ‘கடலும் கடற்கரைச்சோலைகளும் சொல்லும் பொருளும் போன்றன‘ என்கிறது. பொருளில்லாத சொல் பயனற்று, மொழிவளத்தைப் பாதித்துவிடுவது போல கடற்கரைச்சோலைகளில்லாத கடலும் பயனற்று ஊர்களின் வளத்திற்கு பாதிப்பைத்தரும் என்கின்றன. பழந்தமிழர்கள், கடற்கரைச்சோலைகளின் சிறப்புணர்ந்த காரணத்தினால்தான் அச்சோலைகளிலுள்ள மரங்களில் தெய்வம் உறைவதாக் கருதி வணங்கி வழிபட்டுள்ளனர்
  • ”தொன்று உறை கடவுள்” (அகம்.3-4)”
  • மன்ற மராஅத்த பேசும் முதிர்கடவுள்” (குறுந்தொகை.87.1)
  • ”துறையும் ஆலமும் தொல்வலி மராஅமும் முறையுளி பராஅய் பாய்ந்தனர் தொழூஉ” (கலித்தொகை.101.14-15)
  • “நல்அரை மராஅத்த கடவுள்” (மலைபடுகடாம்.395).
  • “தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரை மன்றப் பெண்ணை வாங்கி மடற்குடம்பை” (நற்றிணை.303.3-5)
இப்பாடல்கள் பழந்தமிழர், மரங்களைக் கடவுளாக வழிபட்டுப் போற்றிப் பாதுகாத்தமையைக் கூறுகின்றன. கடற்கரைச் சோலைகளில் தாழை (கைதை, கண்டல்), நெய்தல், ஞாழல், புன்னை, பனை, அடப்பங்கொடிகள் போன்றவை ஒன்றோடொன்று இணைந்தே வளரக் கூடியன. இவை நெருங்கி வளர்வதால் அப்பகுதி கரிய சோலை போல் அடர்ந்திருக்கும். "வெண்கோட்டு அருள் சிறைத்தா அய் கரைய கருங் கோட்டுப் புன்னை" (67.4-6)என்ற பாடல் வெண்மையான மணல் குவிந்த கடற்கரை மேட்டில் கரிய அடிப்பகுதியையுடைய புன்னை மரங்கள் சிறை போல் எழும்பி இருக்கும் என்கிறது.
  • ”மணி ஏர் நெய்தல் மாமலர் நிறைய, பொன் நேர் நுண் தாது புன்னை தூஉம், வீழ்தாழ் தாழைப் பூக்கமழ், கானல்”(நற்றிணை.78.2-4)
  • ”அடும்புஅமல் அடைகரை” (பதிற்றுப்பத்து.51).
  • ”தயங்குதிரை பொருத தாழை” (குறுந்தொகை.226.5)
  • “தாழை மணந்து ஞாழலொடு கெழீஇ படப்பை நின்ற முடத்தாட் புன்னை" (அகம்.180.12-13)
  • தெரிஇணர் ஞாழலும் தேம்கமழ் புன்னையும் புரி அவிழ் பூவின கைதையும்" (கலி.127.1-2)
போன்ற பாடல்கள் கடற்கரைச் சோலைகளில் புன்னை மரங்களோடு, அடப்பங்கொடிகளும் தாழை மரங்களும் எப்பொழுதும் பிண்ணிப்பிணைந்து இணைந்தே வளர்ந்திருக்கும் என்கிறது.
ஆழிப்ரேலைகள் தமிழகத்தை ஏழு முறைகள் தாக்கியுள்ளதாக மாத்தளை சோமு தன் ‘வியக்கவைக்கும் தமிழகம்‘ என்ற நூலில் சுட்டுகிறார். இவ்வாறு பெரும் பாதிப்பைப் பலமுறை சந்தித்துள்ள தமிழர் அதற்கான தீர்வும் இயற்கையே வழங்கியிருப்பதை அறிந்திருந்தனர். ஆழிப்பேரலையினால் சிறிதும் பாதிக்கப்படாத பல அழியா நல்ஊர்களை பற்றிச் சங்க இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. ஆழிப்பேரலையின் தாக்கத்திலிருந்து கடற்கரைகளையும் ஊர்களையும் காக்க பழந்தமிழர்கள் தாழை முதலான மரங்களின் தன்மையறிந்து அவற்றை வளர்த்துள்ளனர்.
‘கண்டவாயில் ‘என்னும் ஊர் ஒன்று நற்றிணைப் பாடலொன்றில் வெகுவாகச்சிறப்பிக்கப்படுகிறது. இதன்சிறப்பே ஆழிப்பேரலையினால் பாதிக்கப்படாததுதான். இவ்வூர் உப்பங்கழி சூழ்ந்த தோட்டங்களையுடையது.இதன் கடற்கரையில் முற்றிய பனைமரங்கள் வெளிறிய மணல்மேட்டில் முள்வேலி அமைத்தது போல் காணப்படும்.[8]
பனைமரங்களோடு இணைந்த ஞாழல், தாழை ,புன்னைமரங்களும் சேர்ந்து கரிய சோலையோ என்று எண்ணும்படி அடர்ந்திருக்கும். மணற்குன்றுகள் சூழ்ந்த இச்சோலைகளே கண்டல் வேலிகள் என அழைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுள் வணங்கும் தன்மையுடைய தாழையே சிறப்பாக பேரலைகளைத் தாக்குப்பிடிக்க வல்லது. எனவேதான், தாழை சூழ்ந்தசோலைகளை நாட்டுவேலி, பெருநீர்வேலி, கண்டல்வேலி எனப் பல பெயர்களில் அழைத்துள்ளனர்.
இம்மரங்கள் சோலைகளில் எழும்பி நிற்கும் காட்சி மதில்கள் சூழ்ந்த அரண்மனைக் கோட்டையை ஒரு புலவருக்கு நினைவுபடுத்துகின்றது. ”அயில்திணி நெடுங்கதவு அமைத்து, அடைத்து அணி கொண்ட எயில் இடு களிறே போல்” (கலி.135.3-5) என்ற பாடல் வரிகள் பேரலைகளை போர்க்களிறுகளோடு ஒப்பிட்டு அக்களிறுகளைத் தடுக்கும் அரண்மனைக் கோட்டைகளாகக் கடற்கரைச்சோலைகளைக் காட்டுகிறது. ஆவேசத்துடன் பெருகிவரும் பேரலை இத்தகைய மரங்கள் சூழ்ந்தசோலைகளில் மோதியவிடத்து சிறுநுரை என மாறி இல்லாமல் போய்விடும் என்பதை ”பெருநீர்க்கல் பொரு சிறுநுரை மெல்ல மெல்ல இல்லாகுமே” (குறுந்.290.4-6) என்ற வரிகள் காட்டுகின்றன. இவ்வாறு,பேரலை சிறுநுரையாக மாறுவதற்கு தாழையின் மடங்கிய தன்மையே காரணம் எனப் பல பாடல்கள் சான்று தருகின்றன. "வணங்கிய தாழை” (அகம்.128.1-2) என்ற பாடல் வரிகள் காக்கும் கடல் அருள் மறந்து அழிக்கமுற்படும் போது அதன் சினத்தைத் தணிக்க தாழையின் மடங்கிய தன்மையாலேயே இயலும் என்று கூறுகிறது. ”திரைமுதிர் அரைய தடந்தாட் தாழை” (அகம்.131.3-5) என மற்றொரு பாடலும் தாழையின் வளைந்த தன்மையின் சிறப்பை உறுதி செய்கிறது. கடலின் அண்மையில் மட்டுமின்றி ஆற்றங்கரை ஓரங்களிலும் இச்சோலைகளை வளர்த்துள்ளனர்.
பரிபாடல் கூறும் வையை ஆற்று வருணனையில் வையைக் கடலோடு ஒப்பிடப்படுகிறது. வையை ஆறானது பெருகி, ஊருக்குள் நுழைந்து பேரழிவை ஏற்படுத்திவிடும் என்பதால் ஆற்றங்கரைகளில் ஞாழல், புன்னை, தாழை முதலான மரங்களை வளர்த்துள்ளனர். இவை வளர்ந்து பெரிய சிறையின் சுவர் போல எழும்பிநிற்கும் (பரிபாடல்.77).
இம்மரங்களில், ஞாழல்மரம் வலுவானதல்ல. வெள்ளநீரின் வேகத்திற்குத் தாக்குப்பிடிக்க ஞாழல்மரங்களினால் இயலாது. ஆனால், புன்னை, தாழை இவையிரண்டும் உறுதியானவை, வலுவானவை. பேரலைகளைத் தாக்குப்பிடிக்கக்கூடியவை. கடற்கரைச்சார்ந்த பகுதிகளிலும் ஆற்றங்கரையோரங்களிலும் இத்தகைய மரங்களே வளர்க்கப்படவேண்டும் (பரிபாடல்.12-6) என்று மரங்களின் தன்மையை பரிபாடல் எடுத்துரைத்து அவற்றை மிகுதியாக வளர்க்கவேண்டும் என்கிறது. தாழையின் சிறப்பை சிலப்பதிகாரம் ”தாழைச்சிறைசெய்வேலி” (166) என்கிறது.
”புலவுத்திரை உதைத்த கொடுந்தாட் கண்டல்” (நற்றிணை.23.9-10) -வளைந்த தாழையைக் ‘கண்டல்‘ என நற்றிணைப் பாடல் கூறுகிறது. தாழை மரங்களுடன் புன்னை, ஞாழல் மரங்களும் இணைந்து வளர்ந்து நெய்தல் சார்ந்த ஊர்களை காத்து நிற்பதால் இவற்றை கண்டல் வேலிகள் என பழந்தமிழர் குறித்துள்ளனர். “தெண்திரை மணிப்புறம் தைவரும் கண்டல்வேலி நும்துறை” (நற்.54.9-11) - இவ்வாறு கடற்கரைச்சோலைகளைக் கண்டல்வேலிகள் என்று குறிப்பிடுவதுபோல ஆழிப்ரேலையை, ”உயர்திரை நெடுநீர்”, ”பெருநீர்”, ”வரம்பு இல் வெள்ளம்” ‘என்ற தொடர்களால் தமிழர் குறித்துள்ளனர். பதிற்றுப்பத்து ஆழிப்பேரலையை ”வரம்பு இல் வெள்ளம்” (33) என்கிறது. நற்றிணைப் பாடல் ஆழிப்பேரலையை “உயர்திரை நெடுநீர்”[9] என்ற தொடரால் குறிக்கிறது.
இப்பேரலைகளை தாக்குப்பிடிப்பனவாதலால், கண்டல்வேலிகள் "பெருநீர் வேலி" என்றழைக்கப்பட்ட செய்தியைக் குறுந்தொகை (345.5-7) கூறுகிறது. இப்பெரு வெள்ளமாகிய ஆழிப்பேரலையைத் தாக்குப்பிடிப்பன கண்டல் வேலிகளே என்பதை நற்றிணைப் (74) பாடலும் தெளிவாகக் கூறுகிறது. பொதுவாக மரங்கள் மணல் அரிப்பைத் தடுக்கவல்லன. தாழையோ தன் வளையும் தன்மையால் பேரலை, பெருங்காற்றையும் தாக்கு பிடிப்பதால் அப்பகுதியில் மணல்அரிப்பு ஏற்படாததோடு அப்பகுதி உயர்ந்து மலை போல் காணப்படும்.
  • “குன்று போல் எக்கர்” (கலி.127)
  • “ஓங்கல் வெண்மணல்”(குறுந்.311)
முதலான பாடல் வரிகள் மணலைக் கடலலைகள் தொடர்ந்து கொண்டு வந்து சேர்ப்பதினால் மணல்மேடு தொடர்ந்து பெரிதாகிக் கொண்டே சென்று, அதில் உள்ள பனைமரங்களை மிகச் சிறியன என ஆக்கும் “அடும்பு இவர் மணற்கோடு ஊர.நெடும்பனை குறியஆகும்” (அகம்.248.4-6) என்கின்றன. “ஓங்கல் வெண்மணல் தாழ்ந்த புன்னை” (குறுந்தொகை.311-5) உயர்ந்து கொண்டேவரும் வெண்மணலினால் உயரம் குறைந்து கொண்டே வரும் புன்னை எனக் குறுந்தொககையும் கூறுகிறது.
கடலின் அண்மையில் சோலைகளை பாதுகாத்தது போல சோலையடுத்த பகுதிகளில் நாவல் முதலான மரங்களை வளர்த்துள்ளனர். “பொங்குதிரை பொருத வார் மணல் அடைகரைப் புன்கால் நாவல் பொதிப்புற இருங்கனி” (நற்றிணை.35.1-2) - கடற்கரைச்சார்ந்த பகுதியில் ஏராளமான மர வகைகளை வளர்த்துள்ளனர். எனவே தான் கண்டல்வேலிகளை உடைய ஊரில் வாழ்வோர் தம் ஊரை அழியாநல்ஊர், எனப் பெருமையோடு கூறிக் கொண்டுள்ளனர்.
அழியாத புகழை உடையது கண்டல் வேலிகளை உடைய ஊரே என்கிறது அகநானூறு.[10] கண்டல்வேலிகளை உடைய ஊர்களே நல்ல ஊர்கள் என்கின்றன பல சங்கப் பாடல்கள்[11]

ஆழிப்பேரலையும் பெண்மை நலனும்

ஒரு தமிழ்ப்பெண் கரையை உடைக்கப் பெருகிவரும் காம வெள்ளத்தின் ஆற்றலை தாங்காத நிலையில் அதை உரைக்கவும் இயலாத நிலையில் தன் தோழியிடம், ”முட்டுவென் கொல் தாக்குவென் கொல் என் காம நோயை அறியாது துஞ்சும் ஊரை” என ஔவையின் தலைவி ஊரைச் சாடுகிறாள். இந்நற்றிணைப் பாடல் காமத்தை ஆழிப்பேரலையோடு ஒப்பிட்டுப் பாடுகிறது. காமத்தினை வெளிப்படுத்த இயலாத நிலையில் ஒரு பெண் தான்படும் பாட்டை “என் காமமோ ஆழிப்பேரலை போன்றது. அப்பேரலையைத் தடுத்து அமைதியடையச் செய்யும் ஆற்றல் கடற்கரைச்சோலைக்கு உள்ளது போல என் காமத்தையும் அமைதியடையச் செய்யும் ஆற்றல் என் தலைவனுக்கு மட்டுமே உள்ளது” என்று விளக்குவதாக நற்றிணைப் பாடல் சொல்கிறது.[12]
இதிலிருந்து ஆழிப்பேரலைகளைத் தாக்குப்பிடித்து அவற்றை அமைதியடையச் செய்யும் ஆற்றல் கடற்கரைச் சோலைக்கு உண்டு என்ற செய்தியைத் தமிழர் அறிந்திருந்தனர் என்பது புலனாகுகிறது. இச்சோலைகள் தற்காலத்தில் அலையாத்திக் காடுகள் என அழைக்கப்படுகின்றன. தாழைக்கு குமரி என்ற பெயருமுண்டு. இத்தாழை மரக் கண்டல் சோலைகள் சூழ்ந்திருந்ததால் தான் தென்னிந்தியப்பகுதிக்கு குமரி என்ற பெயரே வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இம்மரங்கள் கடற்கரைச்சார்ந்த புகுதிகளில் உள்ள புலால் நாற்றத்தைப் போக்கவும் வல்லன. ஞாழல், புன்னை மரங்களிலிருந்து மலரும் புதிய மலர்களின் நுண்ணிய மகரந்தப்பொடி கடற்கரை எங்கும் வீசிக்கொண்டிருக்கும். இதனால் புலால் நாற்றம் நீங்கி புதுமலர்களின் மணம் காற்றில் நிறைந்து அப்பகுதி கமழ்ந்து கொண்டிருக்கும் என்கிறது கலிப்பாடல்.[13] இதை நற்றிணையும், அகநானூறும் சிறப்பித்துப் பேசுகின்றன. கடற்கரைச்சோலைகள் நாட்டைப் பாதுகாப்பது மட்டுமின்றி, அந்நாட்டைப் புலால் நாற்றத்திலிருந்தும் காக்கவல்லன என்கின்றன.[14]
இக்கடற்கரைச்சோலைகளில் உள்ள மரங்களின் நிழல்களில் நெய்தல் நில மகளிர் தங்கி இளைப்பாறுவதும், மீன்களை உலர்த்துவதும் உண்டு. இனிய நிழலை விரும்பி வரும் பெண்கள் வேலைமுடிந்த பின்னர் இங்குதான் ஓய்வெடுப்பர் என்கிறது ஒரு பாடல்.[15]
கடற்கரை பகலில் மிகுந்த வெப்பமுடையதாக இருக்கும். கடல்நீர் சூரியனின் வெப்பத்தினால் ஆவியாகி அவ்விடத்தில் வெற்றிடம் ஏற்படும். அவ்வெற்றிடத்தை நிரப்ப கடற்கரையிலிருந்து காற்று கடலை நோக்கிச் செல்லும் இதனால் கடற்கரை பகலில் மிகுந்த வெப்பமுடையதாக இருக்கும்.வியர்வை பெருகி நீர்த்தாகம் ஏற்பட்டு உடலில் வறட்சி தோன்றும். ஆனால், கடற்கரைச்சார்ந்த பகுதிகளில் வளர்க்கப்படும் சோலைகள் இக்குறையைப் போக்குகின்றன. இதன் அருமை உணர்ந்தே அகநானூறு "புன்னை பூத்த இன்நிழல்" (91.2) என்றும் "வெண்மணல் ஒருசிறை புதுவது புணர்ந்த பொழிலே"(96.1-3) என்றும் பாராட்டுகிறது. நிழலோடு நாவிற்குச் சுவையான பழங்களையும் இச்சோலைகள் தர வல்லன. நாவின் வறட்சியைப் போக்க இனிய பழங்களும் இச்சோலைகளின் மூலம் கிடைக்கும்[16]

Monday, 9 November 2015

பேரூர் ஆதீனம் நகரப் பிரவேசம்

பேரூர் ஆதீனம் ஐந்நூறு வருடப் பழமை மிக்க ஆதீனம். திருக்கயிலாய மரபில் வருவது   இவ்வாதீனம். தவத்திரு சாந்தலிங்கர் இவ்வாதீனத்தின் குரு முதல்வர் .கோவை நகரின் பழமைக்குச் சான்றாய் விளங்குகிறது.   ஆண்டுதோறும் மாசி மகம் நாள் இரவு ஏழு மணியளவில் குருமகாசன்னிதானங்கள் பல்லக்கு வாகனத்தில் எழுந்தருளி பேரூரில் பட்டிணப் பிரவேசம் வரும் காட்சி பார்ப்போர் கண்களுக்கு விருந்தாய் அமையும் . பேரூர் நகரம் முழுவதும் பல்லக்கு வாகனம் வலம் வரும் ஒவ்வொரு இல்லத்திலும் மக்கள் முன்னின்று குருமகாசன்னிதானங்களுக்கு குரு மரியாதை செய்வது மரபாய் திகழ்கிறது .மாசி மகம் நாளில் பேரூர் வருக, குருவருள் திருவருள் பெறுக. நன்றி .அன்புடன் சங்கர்.

Thursday, 3 September 2015

ராமாயணம்

ராமாயணத்தில் ... இவர்கள் யார்?

1. அகல்யை - ராமரின் அருளால் சாபம் நீங்கப்பெற்றவள்.
2. அகத்தியர் - ராமனுக்கு போர்க்களத்தில் ஆதித்ய ஹ்ருதயம் உபதேசித்த மாமுனிவர்.
3. அகம்பனன் - ராவணனிடம் ராமனைப்பற்றி கோள் சொன்னவன். ராமனின் அம்புக்கு தப்பிப்பிழைத்த அதிசய ராட்சஷன்
4. அங்கதன் - வாலி, தாரையின் மகன். கிஷ்கிந்தையின் இளவரசன்.
5. அத்திரி - அனுசூயா என்ற பத்தினியின் கணவர். ராமதரிசனம் பெற்றவர்.
6. இந்திரஜித் - ராவணனின் மகன். லட்சுமணனால் அழிந்தவன். மேகநாதன் என்ற பெயரையும் உடையவன்.
7. கரன், தூஷணன் - ராவணனின் தம்பிகள், ராமனின் கையால் அழிந்தவர்கள். ஜனஸ்தானம் என்ற இடத்திற்கு அதிபதிகள்.
8. கபந்தன் - தலையும் காலும் இல்லாத அரக்கன். ராமனால் வதைக்கப்பட்டவன். கந்தர்வ வடிவம் பெற்று ராம லட்சமணர்கள் கிஷ்கிந்தை செல்ல வழி காட்டியவன்
9. குகன் - வேடர் தலைவன், படகோட்டி
10. கும்பகர்ணன் - ராவணனின் தம்பி, எப்போதும் பெரும் தூக்கம் தூங்குபவன்.
11. கும்பன் - கும்பகர்ணனின் மகன்
12. குசத்வஜன் - ஜனகரின் தம்பி, மாண்டவி, சுருதகீர்த்தி ஆகியோரின் தந்தை. பரத சத்ருக்கனின் மாமனார்.
13. கவுசல்யா, கைகேயி, சுமித்திரை - தசரதரின் பட்டத்தரசியர்
14. சுநைனா - ஜனகரின் மனைவி, சீதையின் தாய்
15. கவுதமர் - அகல்யையின் கணவர், முனிவர்
16. சதானந்தர் - அகல்யை, கவுதமரின் மகன். சீதையின் திருமணத்திற்கு வந்த புரோகிதர்.
17. சம்பராசுரன் - இவனுக்கும், தேவர்களுக்கும் நடந்த போரில் தசரதர் தேவர்களுக்கு உதவினார்.
18. சபரி - மதங்க முனிவரின் மாணவ, ராமனை தரிசித்தவள்
19. சதபலி - வடக்கு திசையில் சீதையை தேடச்சென்றவன்.
20. சம்பாதி - கழுகரசன் ஜடாயுவின் அண்ணன், சீதையைக்காண அங்கதனின் படைக்கு உதவியவன்.
21. சீதா - ராமனின் மனைவி, ஜானகி, வைதேகி, ஜனகநந்தினி, ஜனககுமாரி, மைதிலி ஆகிய பெயர்களும் இவளுக்கு உண்டு.
22. சுமந்திரர் - தசரதரின் மந்திரி, தேரோட்டி
23. சுக்ரீவன் - கிஷ்கிந்தையின் மன்னன், வாலியின் தம்பி, சூரியபகவானின் அருளால் பிறந்தவன்.
24. சுஷேணன் - வாலியின் மாமனார், வானர மருத்துவன், மேற்கு திசையில் சீதையை தேடச்சென்றவன்.
25. சூர்ப்பணகை - ராவணனின் தங்கை, கணவனை இழந்தவள்.
26. தசரதர் - ராமனின் தந்தை
27. ததிமுகன் - சுக்ரீவனின் சித்தப்பா, மதுவனம் என்று பகுதியின் பாதுகாவலர்
28. தாடகை - காட்டில் வசித்த அரக்கி, ராமனால் கொல்லப்பட்டவள்.
29. தாரை - வாலியின் மனைவி, அங்கதனின் தாய். அறிவில் சிறந்த வானர ராணி.
30. தான்யமாலினி - ராவணனின் இளைய மனைவி
31. திரிசடை - அரக்கிகளுள் நல்லவள், சீதைக்கு நம்பிக்கை ஊட்டியவள்.
32. திரிசிரஸ் - ராவணனின் தம்பியான கரனின் சேனாதிபதி.
33. நளன் - பொறியியல் அறிந்த வானர வீரன், விஸ்வகர்மாவின் மகன், கடலின் மீது இலங்கைக்கு பாலம் கட்டியவன்
34. நாரதர் - பிரம்மாவின் மனத்தில் பிறந்தவர், கலக முனிவர்.
35. நிகும்பன் - கும்பகர்ணனின் மகன்
36. நீலன் - வானர வீரன் நளனின் நண்பன், வானர சேனாதிபதி, அக்னி தேவனின் அருளால் பிறந்தவன்
37. பரசுராமர் - விஷ்ணுவின் அவதாரம், ஜமத்கனியின் மகன், ராமனுடன் போரிட்டவர்
38. பரத்வாஜர் - பிராயாகை அருகே ஆசிரமம் அமைத்திருந்த முனிவர்
39. பரதன் - கைகேயியின் மகன், ராமனின் தம்பி.
40. மந்தரை - கைகேயியுடன் கேகய நாட்டிலிருந்து அயோத்திக்கு வந்த வேலைக்காரி, கூனி என்றும் சொல்வர்.
41. மதங்கர் - தவ முனிவர்
42. மண்டோதரி - தேவலோக சிற்பியான மயனின் மகள், ராவணனின் பட்டத்தரசி, இந்திரஜித்தின் தாய்.
43. மாரீசன், சுபாகு - தாடகையின் மகன்கள். ராமனால் வதம் செய்யப்பட்டவர்கள், மாரீசன் மாய மானாக வந்தவன்.
44. மால்யவான் - ராவணனின் தாய்வழிப்பாட்டன்.
45. மாதலி - இந்திரனின் தேரோட்டி
46. யுதாஜித் - கைகேயியின் தம்பி, பரதனின் தாய்மாமன்
47. ராவணன் - மிச்ரவா என்பரின் மகன், குபேரனின் தம்பி, புலஸ்திய முனிவரின் பேரன்.
48. ராமன் - ராமாயண கதாநாயகன்
49. ரிஷ்யசிருங்கர் - புத்திரகாமேஷ்டி செய்த முனிவர்.
50. ருமை - சுக்ரீவனின் மனைவி, வாலியால் கவரப்பட்டவள். 
51. லங்காதேவி - இலங்கையின் காவல் தெய்வம்
52. வசிஷ்டர் - தசரதனின் குலகுரு, அருந்ததியின் கணவர்.
53. மார்க்கண்டேயர், மவுத்கல்யர், வாமதேவர், காஷ்யபர், கார்த்தியாயனர், கவுதமர், ஜாபாலி - தசரதரின் மற்ற குருமார்கள்
54. வருணன் (சமுத்திரராஜன்) - கடலரசன், தன்மீது அணை கட்ட ராமனை அனுமதித்தவன்
55. வால்மீகி - ராமாயணத்தை எழுதியவர். ரத்னாகரன் என்பது இயற்பெயர், கொள்ளைக்காரனாக இருந்தவர், ராமனின் மகன் குசனுக்க ராமாயணம் போதித்தவர், சீதைக்கு அடைக்கலம் அளித்தவர்.
56. வாலி - இந்திரனின் அருளால் பிறந்த வானர வேந்தன்.
57. விஸ்வாமித்ரர் - ராமனுக்கு அஸ்திரவித்தை போதித்தவர், சீதா - ராமன் திருமணத்திற்கு காரணமானவர்.
58. விராதன் - தண்டகவனத்தில் வசித்த அரக்கன், ராமனால் சாபம் தீர்ந்தவன்.
59. விபீஷணன் - ராவணனின் தம்பி, ராமனிடம் அடைக்கலம் அடைந்தவன்.
60. வினதன் - கிழக்குத்திசையில் சீதையை தேடச் சென்றவன்.
61. ஜடாயு - கழுகரசன் சம்பாதியின் தம்பி, தசரதனின் தோழன், சீதைக்காக ராவணனுடன் போராடி உயிர்நீத்தவன்.
62. ஜனகர் - சீதை, ஊர்மிளாவின் தந்தை.
63. ஊர்மிளா - லட்சுமணனின் மனைவி.
64. ஜாம்பவான் - கரடி வேந்தர், பிரம்மாவின் அருள்பெற்று பிறந்தவர்
65. அனுமான் - அஞ்சனை, கேசரி ஆகியோருக்கு வாயுபகவானின் அருளால் பிறந்தவன், ஆஞ்சநேயன், மாருதி ஆகியவை வேறு பெயர்கள்.
66. ஸ்வயம்பிரபை - குகையில் வாழ்ந்த தபஸ்வினி, குரங்குப் படையினருக்கு உணவிட்டவள்.
67. மாண்டவி - பரதனின் மனைவி.
68. சுருதகீர்த்தி - சத்ருக்கனனின் மனைவி.

Saturday, 25 July 2015

பழமையான கோவை

கோவை அரிய சில புகைப்படங்கள் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

Thursday, 23 July 2015

சுந்தரர்

சுந்தரமூர்த்தி நாயனார்
பெயர்: சுந்தரமூர்த்தி நாயனார்
குலம்: ஆதி சைவர்
பூசை நாள்: ஆடிச் சுவாதி
திருமுனைப்பாடி நாட்டைச் சேர்ந்த திருநாவலூரில், ஆதி சைவ வெள்ளாளர் குலத்தில் சுந்தரர் பிறந்தார். இவரது தந்தையார் சடையனார், தாயார் இசைஞானியார். மணப்பருவம் அடைந்தபோது சுந்தரருக்குத் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. மணநாளன்று முதியவர் ஒருவர் வடிவில் அங்கு வந்த இறைவன், சுந்தரருடைய பாட்டனார் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட ஒரு ஓலையைக் காட்டிச் சுந்தரரும், அவர் வழித்தோன்றல்களும் தனக்கு அடிமை என்றார். திருமணம் தடைப்பட, சுந்தரரை அழைத்துக்கொண்டு கோயிலுள் நுழைந்த வயோதிகர் திடீரென மறைந்தார். இறைவனே வந்து தன்னைத் தடுத்தாட் கொண்டதை உணர்ந்த சுந்தரர், "பித்தா பிறை சூடி" என்ற தனது முதல் தேவாரப் பதிகத்தைப் பாடித் துதித்தார். பின்னர் இறை தொண்டில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

சுந்தரர் அருளிய திருப்பதிகங்களை ’திருப்பாட்டு’ என்று அழைப்பது மரபு. இவர் அருளியவை முப்பத்து எண்ணாயிரம் அவற்றில் கிடைத்த பதிகங்கள் 101.[1]

சிவத் தலங்கள் தோறும் சென்று தேவாரப் பதிகங்கள் பாடி இறைவனைப் பணிந்தார். இறைவன் பால் இவர் கொண்டிருந்த பக்தி "சக மார்க்கம்" என்று சொல்லப்படுகின்ற தோழமை வழியைச் சார்ந்தது. இறைவனைத் தனது தோழனாகக் கருதித் தனக்குத் தேவையானவற்றை எல்லாம் கேட்டுப் பெற்றுக்கொண்டார். "நீள நினைந்தடியேன்" என்று தொடங்கும் அவர் பாடிய தேவாரப் பதிகம் மூலம், குண்டலூரில் தான் பெற்ற நெல்லை தனது ஊர் கொண்டு சேர்க்க இறைவனிடம் உதவி கேட்பதைக் காணலாம்.

இறைவனும் இவர் மற்றொருவரிடம் பொருள் பெற அனுமதித்ததில்லை.சேரமான் பெருமானை இவர் சந்தித்து திரும்பும் போது, அம்மன்னர் பொன்,பொருள்,மணியிழைகள்,ஆடைகள் போன்ற பல பொருட்களையும் இவருடன் அனுப்பி வைத்தார். திருமுருகன்பூண்டியில், இறைவன் அவற்றை எல்லாம் தமது பூதகணங்களை வேடர்களாக மாற்றி அவர்களைக் கொண்டு பறித்துக் கொண்டார். சுந்தரர் ’கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர்....’ எனத்துவங்கும் பதிகம் பாடி இறைவனிடம் இருந்து பொருட்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.திருமுருகன்பூண்டி சிவபெருமான் கோவிலில் பைரவர் சந்நிதி அருகிலுள்ள குழியில் தான் சுந்தரரிடமிருந்து கவர்ந்த பொருட்களை இறைவன் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இறைவனுடைய உதவி பெற்றே பரவையார், சங்கிலியார் என்ற இருவ பெண்களை மணம் புரிந்தார். அரசரான சேரமான் பெருமாள் இவருக்கு நண்பராயிருந்தார். தனது 18 ஆவது வயதில் இவர் சிவனடி சேர்ந்தார்.

இவர் வாழ்ந்தது கி. பி. எட்டாம் நூற்றாண்டளவிலாகும். இவர் பாடிய தேவாரங்கள் 7 ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவர் இயற்றிய திருத்தொண்டத் தொகை என்னும் நூலில் 63 நாயன்மார் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன

சுந்தரர்

சுந்தரமூர்த்தி நாயனார்
பெயர்: சுந்தரமூர்த்தி நாயனார்
குலம்: ஆதி சைவர்
பூசை நாள்: ஆடிச் சுவாதி
திருமுனைப்பாடி நாட்டைச் சேர்ந்த திருநாவலூரில், ஆதி சைவ வெள்ளாளர் குலத்தில் சுந்தரர் பிறந்தார். இவரது தந்தையார் சடையனார், தாயார் இசைஞானியார். மணப்பருவம் அடைந்தபோது சுந்தரருக்குத் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. மணநாளன்று முதியவர் ஒருவர் வடிவில் அங்கு வந்த இறைவன், சுந்தரருடைய பாட்டனார் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட ஒரு ஓலையைக் காட்டிச் சுந்தரரும், அவர் வழித்தோன்றல்களும் தனக்கு அடிமை என்றார். திருமணம் தடைப்பட, சுந்தரரை அழைத்துக்கொண்டு கோயிலுள் நுழைந்த வயோதிகர் திடீரென மறைந்தார். இறைவனே வந்து தன்னைத் தடுத்தாட் கொண்டதை உணர்ந்த சுந்தரர், "பித்தா பிறை சூடி" என்ற தனது முதல் தேவாரப் பதிகத்தைப் பாடித் துதித்தார். பின்னர் இறை தொண்டில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

சுந்தரர் அருளிய திருப்பதிகங்களை ’திருப்பாட்டு’ என்று அழைப்பது மரபு. இவர் அருளியவை முப்பத்து எண்ணாயிரம் அவற்றில் கிடைத்த பதிகங்கள் 101.[1]

சிவத் தலங்கள் தோறும் சென்று தேவாரப் பதிகங்கள் பாடி இறைவனைப் பணிந்தார். இறைவன் பால் இவர் கொண்டிருந்த பக்தி "சக மார்க்கம்" என்று சொல்லப்படுகின்ற தோழமை வழியைச் சார்ந்தது. இறைவனைத் தனது தோழனாகக் கருதித் தனக்குத் தேவையானவற்றை எல்லாம் கேட்டுப் பெற்றுக்கொண்டார். "நீள நினைந்தடியேன்" என்று தொடங்கும் அவர் பாடிய தேவாரப் பதிகம் மூலம், குண்டலூரில் தான் பெற்ற நெல்லை தனது ஊர் கொண்டு சேர்க்க இறைவனிடம் உதவி கேட்பதைக் காணலாம்.

இறைவனும் இவர் மற்றொருவரிடம் பொருள் பெற அனுமதித்ததில்லை.சேரமான் பெருமானை இவர் சந்தித்து திரும்பும் போது, அம்மன்னர் பொன்,பொருள்,மணியிழைகள்,ஆடைகள் போன்ற பல பொருட்களையும் இவருடன் அனுப்பி வைத்தார். திருமுருகன்பூண்டியில், இறைவன் அவற்றை எல்லாம் தமது பூதகணங்களை வேடர்களாக மாற்றி அவர்களைக் கொண்டு பறித்துக் கொண்டார். சுந்தரர் ’கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர்....’ எனத்துவங்கும் பதிகம் பாடி இறைவனிடம் இருந்து பொருட்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.திருமுருகன்பூண்டி சிவபெருமான் கோவிலில் பைரவர் சந்நிதி அருகிலுள்ள குழியில் தான் சுந்தரரிடமிருந்து கவர்ந்த பொருட்களை இறைவன் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இறைவனுடைய உதவி பெற்றே பரவையார், சங்கிலியார் என்ற இருவ பெண்களை மணம் புரிந்தார். அரசரான சேரமான் பெருமாள் இவருக்கு நண்பராயிருந்தார். தனது 18 ஆவது வயதில் இவர் சிவனடி சேர்ந்தார்.

இவர் வாழ்ந்தது கி. பி. எட்டாம் நூற்றாண்டளவிலாகும். இவர் பாடிய தேவாரங்கள் 7 ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவர் இயற்றிய திருத்தொண்டத் தொகை என்னும் நூலில் 63 நாயன்மார் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன

விடுதலைப்புலிகள்

புலிகளை 30 நாடுகள் ஏன் சேர்ந்து அழித்தது ? காரணம் தெரியவேண்டுமா ?

விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், அவர்கள் எங்கிருந்து உருவாகினார்கள், அவர்களின் போராட்ட வரலாறு என்ன, அவர்கள் எதற்காகப் போராடினார்கள்? என்று தெரிந்தும் சில அடிவருடிகள் சந்தர்ப்பத்திற்கேற்ப பச்சோந்திகளாக மாறி..... “விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம்” என சிங்களவர்களுடன் சேர்ந்து அறிக்கைகள் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். சில போராளிகள், சில தளபதிகள் சிங்கள அரசப் படைகளை எதிர்த்து கண்ணுக்கு எட்டும் தூரம் வரை நின்று போராடியிருக்கிறார்கள். சிங்களப்படைகள் நெருங்க நெருங்க துப்பாக்கி ரவைகள் முடியும் வரை நின்று போராடியிருக்கிறார்கள். அவர்கள்தான் அங்கே உடனடியாக கைது செய்யப்பட்டு அந்தந்த இடங்களில் வைத்தே உடனடியாக பழி தீர்க்கப்பட்டவர்கள் ஆவார்கள்..!

உலகில் எந்த யுத்த களத்திலும் அதியுச்ச போர் நடந்து கொண்டிருக்கும் ஒரு குறுகலான சிறிய இடத்தில் வைத்து அந்தப் போராட்ட வேளையிலே யுத்த கோரத்தாண்டவங்களை நேரடியாக எவரும் ஒலிப்பரப்பு செய்து கொண்டிருக்க மாட்டார்கள்.
ஆனால், விடுதலைப் புலிகளோ… கடும் யுத்தம் நடந்து கொண்டிருக்கையில், ஒரு சிறிய சரக்கு வாகனத்தில் வைத்து "தவபாலன்" என்ற போராளி தான் சுடப்பட்டு இறக்கும் வரை “புலிகளின் குரலை” இறுதி வரை ஒலிக்கச் செய்து கொண்டிருந்தார்.அவ்வாறு சில போராளிகளும் பட ஒளிப்பதிவுகள் செய்தமையும், வீடியோக்களை பதிவுசெய்து வெளிநாடுகளுக்கும் அனுப்பியதாலும்,மக்களின் பேரவலங்கள் இன்று உலகின் பார்வைக்கு வந்தது! விடுதலைப் புலிகளை “தீவிரவாதிகள்” என்று விமர்சித்து கொச்சைப்படுத்துபவர்களே…! 

உங்கள் சுயமூளையுடன் சற்று சிந்தியுங்கள்..! உலகம் தோன்றிய காலம் முதல் இன்று வரையும் உலகில் எந்த விடுதலை அமைப்புக்களும் விடுதலைப் புலிகள் போல் வளர்ந்ததும் இல்லை!, வாழ்ந்ததும் இல்லை!இந்த இருபத்தியோராம் நூற்றாண்டுவரை உலகில் எந்த விடுதலை அமைப்பு, விடுதலைப் புலிகள் போல் போராடினார்கள்?

* உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பும் தனக்கென தனியாக இராணுவச் சீருடைகளை அணிந்ததில்லை!

*உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பினரும் தங்களது படை நடவடிக்கைகளுக்கு பெயர் சூட்டி அழைத்ததில்லை!

* உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பினரும் போரில் இறந்த தங்கள் வீரர்களுக்கு தனியாக இடம் ஒதுக்கி கல்லறைகள் (துயிலும் இல்லங்கள்) கட்டியதில்லை!

* உலகில் எந்தவொரு விடுதலை அமைப்பும் நாப்பதாயிரத்திற்கு மேற்பட்ட வீரர்களை இழந்ததில்லை!

*உலகில் எந்தவொரு விடுதலை அமைப்பினரையும் உலக அரங்கில் பேச்சுவார்த்தைகளுக்கு சர்வதேச நாடுகள் அழைத்ததில்லை !

* உலகில் எந்தவொரு விடுதலை அமைப்பினருக்கும் ஏராளமான சமூக, போராட்ட, செய்தி இணையத்தளங்கள் இருந்ததில்லை!

* முகநூல்களிலும் வேறு சமூக, செய்தி இணையத்தளங்களிலும் தலைவர் பிரபாகரன் பற்றியும், விடுதலைப் புலிகள் போராட்டம் பற்றியும் முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வந்தது போல், வேறு எந்த விடுதலை அமைப்பினர் பற்றியும் பரவலாக செய்திகள் வந்ததில்லை!

* விடுதலைப் புலிகளுக்கு உலகினில் வாழும் அனைத்து தமிழர்களிடமும் இருந்து கிடைக்கப் பெற்ற பெரும் செல்வாக்கு போல், உலகினில் வாழும் வேறு எந்த விடுதலை அமைப்புக்கும் கிடைத்ததில்லை!

* விடுதலைப் புலிகள் தீவிரவாத இயக்கம் என்றால்… எப்படி முப்படைகளையும் கொண்ட மரபுவழி இராணுவமாக வளர முடிந்தது? அது எப்படி சாத்தியாமானது?

* அவர்கள் தீவிரவாதிகள் என்றால், எப்படி மக்களின் பெரும்பலம் அவர்களுக்குக் கிடைத்தது ?
பிறகு ஏன் விடுதலைப் புலிகளை முப்பதிற்கும் மேற்பட்ட நாடுகள் சேர்ந்து அழிக்க வந்தன…?

அந்த சிறிய தேசத்தில் இருந்து அவர்கள் வளர்ந்த அசுர வளர்ச்சிதான் காரணம்! அவர்களின் வளர்ச்சியை ஜீரணித்துக் கொள்ள முடியாத இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் அவர்களையும், அவர்களின் போராட்டத்தையும் அழித்து விட முடிவு செய்து, போர் தொடுத்து மக்களை துடிக்கத் துடிக்க கொன்று குவித்து, போராளிகளை கொன்றும், சில போராளிகளைக் கைது செய்தும் சகல இடங்களையும் கைப்பற்றினார்கள். ஆனால், அவர்களுக்குக் கிடைத்ததோ விடுதலைப் புலிகளின் சில ஆயுதங்கள் மட்டுமே! அவ்வாறெனில் சில நூற்றுக்கணக்கானதளபதிகளும், பல ஆயிரக்கணக்கான போராளிகளும் எங்கே போனார்கள்? அவர்கள்தான் அங்கிருந்த தமிழ் பேசும் மக்கள் என்பதை இன்றுவரையும் விடுதலைப் புலிகளை “தீவிரவாதிகள்” என்று சொல்லும் பலர் ஏற்றுக்கொள்வதில்லை!
இன்று வரையும் சில சர்வதேச நாடுகளாலும், சில விசக்கிருமிகளாலும் “தீவிரவாதி” என்றழைக்கப்படும் தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒரு தனி மனிதனாக ஒரு விடுதலைப் படையை உருவாக்கி, மக்களுக்கான பல நன்மைகளும், பயன் பெறக்கூடியதுமான பல உள்கட்டமைப்புக்களை உருவாக்கினார்.
அந்த உள்கட்டமைப்புக்கள் பின்வருமாறு:

* தமிழீழ காவல்துறை, குற்றத் தடுப்புக் காவல் துறை, குற்றப் புலனாய்வுப் பிரிவு.
* தமிழீழ வைப்பகம்.
* தமிழர் புனர்வாழ்வுக் கழகம்.
* தமிழர் புனர்வாழ்வு அபிவிருத்திக் கழகம்.
* சமூக பொருளாதார அபிவிருத்தி வங்கி.
* கிராமிய அபிவிருத்தி வங்கி.
* அனைத்துலகச் செயலகம்.
* நந்தவனம் (வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோர்களுக்கான தொடர்பாடல் சேவை மையம்)
* சுங்க வரித்துறை.
* தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்.
* அரசறிவியற் கல்லூரி.
* வன வளத்துறை.
* தமிழீழ நிதித்துறை.
* தமிழீழ நீதித்துறை, நீதிமன்றுகள்.
* கலை பண்பாட்டுக்கழகம்.
* மருத்துவப் பிரிவு.
* திலீபன் சிறப்பு மருத்துவமனை.
* பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை.
* மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு.
* சுகாதாரப் பிரிவு.
* ஆவணப்படுத்தல், பதிப்புத்துறை, வெளியிட்டுப் பிரிவு.
* போக்குவரத்து கண்காணிப்புப் பிரிவு.
* நிர்வாக சேவை.
* அனைத்துலக தொலைத்தொடர்பு செயலகம்.
* மீன்பிடி வளத்துறை.
* விழிப்புக்குழு (கிராமங்களுக்கான இரவுப் பாதுகாப்பு)
* தொழில் நுட்பக் கல்லூரி.
* சூழல் நல்லாட்சி ஆணையம்.
* தமிழீழ பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சித்துறை.
* தமிழீழ விளையாட்டுத்துறை.
* தமிழீழ காலநிலை அறிவுறுத்தல் வாரியம்.
* தமிழீழ போக்குவரவுக் கழகம்.
* மனிதவள செயலகம் (தமிழீழ கிராம சேவகர் பிரிவு).
* வளங்கள் பகுதி.
* மக்கள் தொடர்பகம் (மக்கள் குறை நிறைகளை தலைவரிடம் கொண்டு செல்லும் பிரிவு)
* விலங்கியல் பண்ணைகள்.
* விவசாயத் திணைக்களம்.
* தமிழ்மொழி காப்பகம்.
* தமிழீழ சட்டக்கல்லூரி.
* தமிழீழ கல்விக் கழகம்.
* தமிழீழ கல்வி மேம்பாட்டுப் பேரவை.
* காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகளுக்கானது).
* செஞ்சோலை (ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கானது).
* செந்தளிர் (ஐந்து வயதிற்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கானது).
* வெற்றிமனை (வலுவிழந்தோருக்கானது)
* அன்பு முதியோர் பேணலகம்.
* இனிய வாழ்வு இல்லம். (காது கேளாத, வாய் பேசாத, பார்வை இல்லாத ஊனமுற்ற சிறுவர் சிறுமிகளுக்கானது)
* சந்தோசம் உளவள மையம் (மனநோயாளிகளுக்கானது).
* நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கானது)
* மயூரி இல்லம் (இடுப்பின் கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது)
* சீர்திருத்தப் பள்ளி.
* முரளி முன்பள்ளி (ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆரம்பப் பள்ளி).
* புனிதபூமி மகளிர் காப்புத்திட்டம்
* உதயதாரகை (விதவைகளுக்கானது).
* பெண்கள் மறுவாழ்வு அபிவிருத்தி மையம்.
* பசுமை வேளாண் சேவை (விவசாயிகளுக்கானது).
* எழுகை தையல் பயிற்சி மையம்.
* மாணவர் அமைப்பு.
* பொத்தகசாலை (அறிவு அமுது).
* ஒளிப்பட பதிவுப் பிரிவு. திரைப்பட வெளியிட்டுப் பிரிவு.
* நிதர்சனம் (திரைப்படத் தயாரிப்பு).
* தர்மேந்திரா கலையகம் (திரைப்பட கலைகள் சம்மந்தமானது).
* விடுதலைப்புலிகள் செய்தி இதழ்.
* சுதந்திரப் பறவைகள் (பெண்கள் செய்தி இதழ்).
* ஈழநாதம் (தினச்செய்தி பத்திரிக்கை).
* வெளிச்சம் (மாத சஞ்சிகை).
* நாற்று (மாத சஞ்சிகை).
* பொற்காலம் வண்ணக் கலையகம்.
* அருச்சுனா புகைப்படக் கலையகம்.
* ஒளிநிலா திரையரங்கு.
* புலிகளின் குரல் வானொலி.
* தமிழீழ வானொலி.
* தமிழீழ தேசியத் தொலைக்காட்சி.
* பல சமூக செய்தி இணையத் தளங்கள்.
* தமிழீழ இசைக்குழு.
* காலணி (பாதணி உற்பத்தி மையம்)
* சேரன் உற்பத்திப் பிரிவு.
* சேரன் வாணிபம்.
* சேரன் சுவையகம்.
* சேரன் வெதுப்பகம்.
* சேரன் அரைக்கும் ஆலை (அரிசி உற்பத்தி).
* பாண்டியன் உற்பத்திப் பிரிவு.
* பாண்டியன் சுவையூற்று.
* பாண்டியன் பல்பொருள் வாணிபம்.
* சோழன் தயாரிப்புகள்.
* பொன்னம்மான் உரைவகை வாணிபம்.
* தென்றல் இலத்திரனியலகம்.
* தமிழ்மதி நகை மாடம்.
* தமிழ்நிலா நகை மாடம்.
* தமிழரசி நகை மாடம்.
* அந்திவானம் பதிப்பகம்.
* இளந்தென்றல் குடிவகைப் பிரிவு.
* இளவேனில் எரிபொருள் நிலையம்.
* இளந்தென்றல் தங்ககம் (ளொட்கெ).
* 1௯ தங்ககம் (ளொட்கெ)
* மருதம் வாணிபம்.
* மருதம் புலால் விற்பனை நிலையம் (மாமிசம்).
* மரமடுவம் (காட்டுமரங்கள், விறகுகள் விற்பனைப் பகுதி).
* கேடில்ஸ் தும்புத் தொழிற்சாலை.
* மாவீரர் அரங்குகள்.
* மாவீரர் நினைவு விளையாட்டு அரங்குகள்.
* மாவீரர் நினைவு வீதிகள்.
* மாவீரர் நினைவு குடியிருப்புத்திட்டங்கள்.
* மாவீரர் போராளிகள் குடும்பநலன் காப்பகம்.
* மாவீரர் நினைவுப் பூங்காக்கள்.
* மாவீரர் நினைவுப் படிப்பகங்கள்.
* மாவீரர் நினைவு நூலகங்கள்.
* மாவீரர் நினைவு விலங்கியல் காப்பகம்.
* மாமனிதர் விருதுகள் (சமூக, பொதுத் தொண்டுகள் செய்வோருக்கானது)
இது தவிர இரணைமடு அறிவியல் நகரில் புதிதாக உருவாக்கப் பட்டுக் கொண்டிருந்த தமிழீழ பல்கலைக் கழகம் இறுதி யுத்தத்தினால் கைவிடப்பட்டுள்ளது. இன்னும் பெயர் தெரியாத நிறைய அமைப்புக்கள். உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பும் விடுதலைப் புலிகளைப் போல் தங்கள் தேசத்திற்கென “தேசிய மலர்”, “தேசிய மரம்”, “தேசியப் பறவை”, “தேசிய விலங்கு” போன்ற தேசியச் சின்னங்களை வைத்துக் கொண்டதில்லை. சிங்கள அரசாங்கமானது ஒவ்வொன்றுக்கும்தடைபோட்டு நசுக்கிப் பறிக்கப் பறிக்க… தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒவ்வொன்றையும் பாதுகாக்க பல அமைப்புக்களை உருவாக்கினார். அவைகள்தான் மேற்குறிப்பிட்டமக்களுக்கான உள்கட்டுமான அமைப்புக்கள். இவர்தான் உங்கள் பார்வையில் தீவிரவாதியா ?
மக்களுக்கான கட்டமைப்புக்கள்ஒருபுறமிருக்க…. இராணுவக் கட்டமைப்புக்களைப் பாருங்கள்…
தரைப்படைகள்
* இம்ரான் பாண்டியன் படையணி.
* ஜெயந்தன் படையணி.
* சார்லஸ் அன்ரனி சிறப்புப் படையணி.
* கிட்டு பிரங்கிப் படையணி.
* குட்டிச்சிறி மோட்டார் படையணி.
* இராதா வான்காப்பு படையணி.
* சிறப்பு உந்துகணை செலுத்திப் படையணி.1060091_586777968040509_2097692466_ன்
* விக்டர் கவச எதிர்ப்புப் படையணி.
* சோதியா சிறப்புப் படையணி.
* மாலதி சிறப்புப் படையணி.
* அன்பரசி படையணி.
* ஈருடப் படையணி.
* குறி பார்த்துச் சுடும் படையணி.
* சிறுத்தைப் படையணி.
* எல்லைப்படை,
* துணைப்படை,
* பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவு.
* ஆயுதக்களஞ்சிய சேர்க்கைப் பிரிவு.
* பாதுகாவலர் பிரிவு.
* முறியடிப்புப் பிரிவு.
* காப்டன் முகிலன் நீண்ட தூர விசேட வேவு ரோந்து அணி.
* ஆழ ஊடுருவும் படையணி.
* உந்துருளிப் படையணி
கடற்படைகள்.
* கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு.
* கடல் வேவு அணி.
* சார்லஸ் சிறப்பு அணி.
* அங்கயற்கண்ணி ஆழ்கடல் நீச்சல் அணி (பெண்கள்).
* சுலோஜன் ஆழ்கடல் நீரடி நீச்சல் அணி (ஆண்கள்).
* கடற்சிறுத்தை சிறப்பு அணி.
* சங்கர் படையணி.
* வசந்தன் படையணி.
* சேரன் படையணி.
* பாக்கியன் ஆழ்கடல் தாக்கும் படையணி.
* வான்படை.
* கரும்புலிகள்.
* புலனாய்வுத்துறை.
* வெளியகப் புலனாய்வுப் பிரிவு.
* உள்ளகப் புலனாய்வுப் பிரிவு.
* படையப் புலனாய்வுப் பிரிவு (Mஈ)
* வேவுப் பிரிவு.
* களமுனை முறியடிப்புப் பிரிவு.
* களமுனை மருத்துவப் பிரிவு.
* கணினிப் பிரிவு.
* பொறியியல் பிரிவு.
* விசேட வரைபடப் பிரிவு.
* அரசியல் துறை, பரப்புரைப் பிரிவு, கொள்கை முன்னெடுப்புப் பிரிவு.
* தமிழீழ படைத்துறைப் பள்ளி.
* ஆயுத உற்பத்திப் பிரிவு.
* மின்னணுவியல் சிறப்பு உதவிப் பிரிவு.
* மாவீரர் பணிமனை

இப்படியானதொரு இராணுவக் கட்டமைப்பை உலகில் எந்த விடுதலை இயக்கமும் கொண்டு வந்ததில்லை! ஆரம்பத்தில் உருவாகும்போது “விடுதலைப் புலிகள்” என்ற அமைப்பாகத்தான் இருந்தார்கள். காலங்களாகி வளர வளர மக்களின் பேராதரவினாலும், மக்களின் முழு பலத்தினாலும் “தேசிய இராணுவமாக” வளர்ந்து, ஒரு தேசத்தையே உருவாக்கினார்கள். ஆரம்ப காலங்களில் விடுதலைப் புலிகள் அமைப்பாக இருந்தாலும், இடைப்பட்ட காலங்களில் முப்படைகளையும் கொண்டு ஒவ்வொரு படையணிகளுக்கும் தனித்தனி சீருடையுடன் ஒரு தேசிய இராணுவமாக உலக நாடுகளின் இராணுவங்களுக்குஒப்பாக இருந்தார்கள்.
எல்லா நாடுகளிடமும் முப்படைகள் இருந்தது, விடுதலைப் புலிகளிடம் ஒரு படை அதிகமாகவே இருந்தது; அந்த வீரமிக்க படைதான் “கரும்புலிகள்”! 

உலகில் எந்த நாடுகளிடமும் இல்லாத உயரிய ஆயுதமான, எந்தவிதமான ஆயுதங்களாலும் வெற்றி கொள்ளமுடியாத, எந்தவிதமான ஆயுதங்களோடும் ஒப்பிட முடியாத உயிராயுதமான “கரும்புலிகள்” விடுதலைப் புலிகளிடம் இருப்பது அவர்களுக்கு சிறப்பையும், அதிக பலத்தையும் கொடுத்திருந்தது. அந்தச் சின்னஞ்சிறிய தேசத்தில் இருந்த விடுதலைப் புலிகளின் படைகளுடன் மோத துணிச்சல் இல்லாத சிங்கள தேசம்தான், முப்பதிற்கு மேற்பட்ட உலக நாடுகளுடன் சேர்ந்து மோதி வெற்றி கண்டதென மார்தட்டிக் கொண்டு திரிகிறது! தமிழர்கள் கவலைப்பட வேண்டிய நேரம் இதுவல்ல…. ஒரு சின்னஞ்சிறிய தேசத்தில் எந்தவித உதவிகளும் இல்லாதிருந்த ஒரு மக்கள் படையுடன் முப்பதிற்கும் மேற்பட்ட உலக நாடுகள் மோதுகின்றன என்றால்… அங்கே தமிழனின் வீரம் எத்தகையது என்பதை ஒவ்வொரு தமிழனும் உணரவேண்டும். அங்கு தமிழனுக்குத்தான் வெற்றி கிடைத்துள்ளது !

இன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டில் உலக அரங்கில் தமிழனின் உண்மையான வீரம்தான் முன்னிலை வகிக்கிறது. உலக சரித்திரத்தில் தமிழனுக்கென்று ஒரு குணம், தமிழனுக்கென்று ஒரு வீரம் அழியாமல் இடம் பிடித்துள்ளது! இதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது! இவ்வாறு தமிழர்களின் வீரத்தை உலக வரலாற்றில் பதிய வைத்த விடுதலைப் புலிகளா… தீவிரவாதிகள் ?
விடுதலைத்தீ என்பது அனைத்து தமிழ் பேசும் மக்கள் மனதிலும் எரிந்து கொண்டிருக்கிறது! எந்த, தமிழ் பேசும் மக்களின் மனதில் விடுதலைக்கான தீ எரிகிறதோ….. அவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள்தான் என்பதை சிங்கள அரசும், சர்வதேசமும் மறந்து விடக்கூடாது! விடுதலைத் தீ என்பது எளிதில் அணைந்து விடாது! யாரும் அணைக்கவும் முடியாது! அந்தத் தீ எதற்காக எரிய ஆரம்பித்ததோ அதை அடையும் வரை எரிந்து கொண்டே இருக்கும். அதுவரையும் விடுதலைப் புலிகளும் வளர்ந்து கொண்டே இருப்பார்கள் !