Tuesday, 11 October 2016
பொதுவுடைமை
Wednesday, 28 September 2016
Wednesday, 21 September 2016
திருஈங்கோய்மலை
திருஈங்கோய்மலை களப்பயணம் . செங்குத்தானப் படிக்கட்டுகள் கால்வலியுடன் சென்று மனவலிமை பெற்று திரும்பிய தலம்.அன்புடன் சங்கர்.
Friday, 10 June 2016
பொதுவுடைமை மரம்
Thursday, 26 May 2016
ஐந்திணைக் கருப்பொருள்கள்
அன்பின் ஐந்திணைகளாகிய முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல்,
பாலை ஆகியவற்றின் முதற்பொருள், கருப்பொருள்,
உரிப்பொருள் ஆகியவற்றைக் காணலாம்.
2.3.1 குறிஞ்சித் திணை
முதற்பொருள்
நிலம் - மலையும் மலையைச் சார்ந்த இடமும்
பொழுது -
அ) பெரும்பொழுது - கூதிர்காலமும், முன்பனிக்காலமும்
ஆ) சிறு பொழுது - யாமம்
கருப்பொருள்கள்
1. தெய்வம் -
சேயோன்
2. உணவு -
ஐவன நெல் (மலை நெல்), தினை, மூங்கிலரிசி,
கிழங்கு
3. விலங்கு -
புலி, யானை, கரடி, பன்றி
4. மரம் -
அகில், ஆரம், தேக்கு, வேங்கை
5. பறவை -
கிளி, மயில்
6. பறை - முருகியம், தொண்டகப் பறை
7. தொழில் -
தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல், தினை
விதைத்தல், வேட்டையாடுதல்
8. யாழ் -
குறிஞ்சி யாழ்
9. பண் -
குறிஞ்சிப் பண்
10. ஊர் -
சிறுகுடி, குறிச்சி
11. நீர் -
அருவி நீர், சுனை நீர்
12. மலர் -
காந்தள், வேங்கை, குறிஞ்சி
உரிப்பொருள்
புணர்தலும் புணர்தல் நிமித்தமும் (நிமித்தம் = காரணம்)
2.3.2 முல்லைத் திணை
முதற்பொருள்
நிலம் - காடும் காட்டைச் சார்ந்த இடமும்
பொழுது -
அ) பெரும்பொழுது : கார்காலம்
ஆ) சிறுபொழுது : மாலை
கருப்பொருள்கள்
1. தெய்வம் -
மாயோன்
2. உணவு -
வரகு, சாமை
3. விலங்கு -
மான், முயல்
4. மரம் -
தோன்றி, காயா, பிடவம், குருந்தம்
5. பறவை -
காட்டுக்கோழி, சேவல்
6. பறை -
ஏறுகோட் பறை
7. தொழில் -
ஆநிரை மேய்த்தல், ஏறு தழுவல்
8. யாழ் -
முல்லை யாழ்
9. பண் -
குறிஞ்சிப் பண்
10. ஊர் -
பாடி, சேரி
11. நீர் -
குறுஞ்சுனை, கான்யாறு
12. மலர் -
முல்லை, குல்லை, தோன்றி, பிடவம்
உரிப்பொருள்
இருத்தலும் இருத்தல் நிமித்தமும்.
2.3.3 மருதத் திணை
முதற்பொருள்
நிலம் -
வயலும் வயல்சார்ந்த இடமும்
பொழுது -
அ) பெரும்பொழுது - ஆண்டு முழுதும்
ஆ) சிறுபொழுது - வைகறை, விடியல்
கருப்பொருள்கள்
1. தெய்வம் -
இந்திரன் (வேந்தன்)
2. உணவு -
செந்நெல், கரும்பு
3. விலங்கு -
எருமை, நீர்நாய்
4. மரம் -
வஞ்சி, காஞ்சி, மருதம்
5. பறவை -
தாரா, நீர்க்கோழி
6. பறை -
மணமுழவு, நெல்லரி கிணை
7. தொழில் -
விதைத்தல், விளைத்தல்
8. யாழ் -
மருத யாழ்
9. பண் -
மருதப் பண்
10. ஊர் -
ஊர்கள்
11. நீர் -
ஆற்றுநீர், பொய்கை நீர்
12. மலர் -
தாமரை, கழுநீர்
உரிப்பொருள்
ஊடலும் ஊடல் நிமித்தமும்.
2.3.4 நெய்தல் திணை
முதற்பொருள்
நிலம -
கடலும் கடல் சார்ந்த இடமும்
பொழுது -
அ) பெரும்பொழுது - ஆண்டு முழுதும்
ஆ) சிறுபொழுது - எற்பாடு
கருப்பொருள்கள்
1. தெய்வம் -
வருணன்
2. உணவு -
மீன், உப்பு
3. விலங்கு -
உமண்பகடு (உப்பு வாணிகனின் மூட்டை சுமக்கும்
எருது), சுறா
4. மரம் -
புன்னை, ஞாழல், கண்டல்
5. பறவை -
அன்றில், அன்னம்
6. பறை -
மீன்கோட் பறை
7. தொழில் -
மீன் பிடித்தல், மீன் உலர்த்தல், உப்பு
விளைவித்தல், நாவாய் ஓட்டல்
8. யாழ் -
நெய்தல் யாழ்
9. பண் -
நெய்தல் பண்
10. ஊர் -
பட்டினம், பாக்கம்
11. நீர் -
உவர்க்குழி (ஊற்றுநீர்), மணற்கிணறு
12. மலர் -
நெய்தல், கைதை (தாழை)
உரிப்பொருள்
இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
2.3.5 பாலைத் திணை
முதற்பொருள்
நிலம் - பாலை நிலம்
பொழுது -
அ) பெரும்பொழுது - வேனிற் காலம்,
பின்பனிக் காலம்
ஆ) சிறுபொழுது - நண்பகல்
கருப்பொருள்கள்
1. தெய்வம் -
கொற்றவை
2. உணவு -
வழிப்போக்கரிடம் திருடிய உணவு
3. விலங்கு -
யானை, புலி, செந்நாய்
4. மரம் -
இருப்பை, உழிஞை
5. பறவை -
கழுகு, பருந்து, புறா
6. பறை -
சூறை கோட் பறை
7. தொழில் -
வழிப்பறி, சூறையாடல்
8. யாழ் -
பாலை யாழ்
9. பண் -
பாலைப் பண்
10. ஊர் -
பறந்தலை
11. நீர் -
கூவல் (கிணறு, குழி)
12. மலர் -
மரா, குரா
உரிப்பொருள்
பிரிதலும் பிரிதல் நிமித்தமும்.
இவ்வாறு வரும் திணைக் கருப்பொருள்கள் தத்தம் திணையில்
இடம்பெறுவதுடன் பிற திணையிலும் இடம் பெறுவதுண்டு.
அதற்குத் திணை மயக்கம் என்று பெயர்.
Wednesday, 18 May 2016
பயணங்கள்

Tuesday, 23 February 2016
அறுபத்து நான்கு கலைகள்
அறுபத்து நான்கு கலைகள்
எண்தமிழ் விளக்கம்வடசொல்1.எழுத்திலக்கணம்அக்கரவிலக்கணம்2.எழுத்தாற்றல்லிகிதம்3.கணிதவியல்கணித சாத்திரம்4.மறை நூல்வேத சாத்திரம்5.தொன்மம்புராணம்6.இலக்கணவியல்வியாகரணம்7.நய நூல்நீதி சாத்திரம்8.கணியக் கலைசோதிட சாத்திரம்9.அறத்துப் பால்தரும சாத்திரம்10.ஓகக் கலையோக சாத்திரம்11.மந்திரக் கலைமந்திர சாத்திரம்12.நிமித்தகக் கலைசகுன சாத்திரம்13.கம்மியக் கலைசிற்ப சாத்திரம்14.மருத்துவக் கலைவைத்திய சாத்திரம்15.உறுப்பமைவுஉருவ சாத்திரம்16.மறவனப்புஇதிகாசம்17.வனப்புகாவ்யம்18.அணி இயல்அலங்காரம்19.இனிதுமொழிதல்மதுரபாஷணம்20.நாடகக் கலைநாடக சாத்திரம்21.ஆடற் கலைநிருத்திய சாத்திரம்22.ஒலிநுட்ப அறிவுசப்த ப்ரம்மம்23.யாழ் இயல்வீணையிலக்கணம்24.குழலிசைவேணு கானம்25.மத்தள நூல்மிருதங்க சாத்திரம்26.தாள இயல்தாள சாத்திரம்27.வில்லாற்றல்அஸ்திர ப்ரயோகம்28.பொன் நோட்டம்கனகப் பரிட்சை29.தேர்ப் பயிற்சிஇரதப் பயிற்சி30.யானையேற்றம்கஜப் பரிட்சை31.குதிரையேற்றம்அசுவப் பரிட்சை32.மணி நோட்டம்இரத்தினப் பரிட்சை33.மண்ணியல்பூமிப் பரிட்சை34.போர்ப் பயிற்சிசங்கிராமவிலக்கணம்35.கைகலப்புமல்யுத்தம்36.கவர்ச்சியியல்ஆகரூடணம்37.ஓட்டுகைஉச்சாடணம்38.நட்பு பிரிக்கைவித்வேடணம்39.மயக்குக் கலைமோகன சாத்திரம்40.புணருங் கலைகாம சாத்திரம்41.வசியக் கலைவசீகரணம்42.இதளியக் கலைஇரசவாதம்43.இன்னிசைப் பயிற்சிகாந்தருவ வாதம்44.பிறவுயிர்மொழிபைபீல வாதம்45.மகிழுறுத்தம்கவுத்துக வாதம்46.நாடிப் பயிற்சிதாதுவாதம்47.கலுழம்காருடம்48.இழப்பறிகைநஷ்டம்49.மறைத்ததையறிதல்முஷ்டி50.வான்புகுதல்ஆகாய ப்ரவேசம்51.வான் செல்கைஆகாய கமனம்52.கூடுவிட்டு கூடுபாய்தல்பரகாய ப்ரவேசம்53.தன்னுறு கரத்தல்அதிருசியம்54.மாயம்இந்திரஜாலம்55.பெருமாயம்மகேந்திரஜாலம்56.நீர்க் கட்டுஜல ஸ்தம்பனம்57.அழற் கட்டுஅக்னி ஸ்தம்பனம்58.வளிக் கட்டுவாயு ஸ்தம்பனம்59.கண் கட்டுத்ருஷ்டி ஸ்தம்பனம்60.நாவுக் கட்டுவாக்கு ஸ்தம்பனம்61.விந்துக் கட்டுசுக்ல ஸ்தம்பனம்62.புதையற் கட்டுகனன ஸ்தம்பனம்63.வாட் கட்டுகட்க ஸ்தம்பனம்64.சூனியம்அவஸ்தை ப்ரயோகம்