Wednesday, 18 May 2016

பயணங்கள்



                                         TN 33 AA 2235
ஏப்ரல் 12 ,2015. வெயில் தன் வேலைகளைச் செய்வதற்கு தயாராக இருந்தது.
நானும் தனபால் சாரும் அதிகாலை 5.30 க்கு தயாராகி கல்லாறு ஆற்றின் பாலம் அருகே நின்று மலையின் அழகை ரசித்துக் கொண்டு நின்றோம். 5.45 மணிக்கு ராஜசேகர் அவருடைய வாகனத்தில் மதிய உணவை தயார் செய்துக் கொண்டு வந்தார்.
              பாதியில்  முடிவது பயணத்திற்கு அழகல்ல. TN 33 AA 2235 என்னுடை வாகனத்தின் எண்.நான் மிகவும் ரசிக்கும் ஸ்பிளண்டர் பைக். என்னுடைய பல தொலை தூர பயணங்களில் என்னுடன் வந்த தோழன். இதுவரை TN 33 AA 2235 எந்த பைக் என்னை எந்த இடத்திலும் தடுமாறி நிற்க வைத்தது இல்லை.
            6 மணிக்கு நான், தனபால் சார், ராஜசேகர் சார்  மூவரும் உதகை மலையின் மீது ஏறத் தொடங்கினோம். வழியில் பர்லியாற்றில் நின்று நேநீர் அருந்தினோம். 7.30 க்கு உதகையை அடைந்தோம். அங்கிருந்து கல்லட்டி வழியாக முதுமலை பயணம். கல்லட்டி வழியானது மிகவும் சவாலானப் பாதை.மலையில் இருந்து வீழும் அருவி நீர் போல பாதை இருக்கும்.
     கல்லட்டி முதுமலைச் சாலையில் அமர்ந்து கொண்டு வந்திருந்த உணவை வயிறு நிரம்ப சாப்பிட்டோம். அதன் பின் முதுமலை செல்லும் வழியில் யானைகள் , மான்கள்  காட்டெருமைகள் ஆகியவற்றைக் கண்டு மகிழ்ந்தோம்.
முதுமலை மூன்று சாலையில் நின்று டீ குடித்தோம்.இந்த இடம் தமிழ்நாடு,கர்நாடகா,கேரளா ஆகிய முன்று மாநிலங்களின் எல்லை. அங்கிருந்து பந்தீப்பூர் சாலையில் பயணம்.மிகவும் சவாலானப் பாதைகள்.
பந்தீப்பூர் சென்று முதன்மைச் சாலையில் இருந்து பிரிந்து பனிமலைக் கண்ணா எனும் தலத்திற்குச் சென்றோம்.சோழர்கள் கட்டிய கோவில்.
ராசேந்திரச் சோழன் வடநாட்டுப் பயணத்தில் இக்கோயிலைக் கட்டியதாக குறிப்புகள் உள்ளன. கர்நாடக இந்து அறநிலையம் இக்கோவிலை மிக அருமையான  முறையில் பராமரிக்கிறது. மலையின் கீழே கடுமையான வெயில் இருந்தாலும்,மலையின் மேலே குளிர் கடுமையாக இருக்கிறது.
              Description: G:\san jee\IMG-20150914-WA0000.jpg
அங்கிருந்து மீண்டும் பயணித்து மைசூர் முதன்மைச் சாலையை அடைந்தோம்.
பந்தீப்பூர் வனம் கர்நாடகாவின் கட்டுப்பாட்டில் உள்ளது.
      பந்தீப்பூரைக் கடந்து சாம்ராஜ் நகரை மாலை 3.30 க்கு அடைந்தோம். மதிய உணவை வழியில் ஓர் எல்லைக் கோயிலில் சாப்பிட்டு சிறிய உறக்கம்.4.15 க்கு மீண்டும் பயணம்.
                 கர்நாடகாவின் காடுகளை இருள் வருவதற்குள் கடந்தோம்.தமிழகத்தின் உச்சி எல்லையான திம்பம் வந்து நின்று 5 ரூபாய்க்கு டீ குடித்தோம்.
                    அங்கிருந்து கிளம்பி கடுமையான மலைப்பாதைகளைக் கடந்து பண்ணாரி அம்மன் கோயிலுக்கு இரவு 8.30 க்கு வந்து சேர்ந்தோம்.அங்கிருந்து மீண்டும் பயணித்து இரவு 10 க்கு மேட்டுப்பாளையம் வந்து இரவு உணவு உண்டோம். 470 கி.மீ பயணம்.
கல்லாறு-பர்லியாறு-குன்னூர்-ஊட்டி-கல்லட்டி-முதுமலை- மூன்று சாலை-பந்தீப்பூர்-பனிமலை-சாம்ராஜ் நகர்- தமிழக எல்லை-திம்பம்-பண்ணாரி-பவானி சாகர் அணை-மேட்டுப்பாளையம்-கல்லாறு..
                            மீண்டும் சந்திப்போம்.

No comments: