Thursday, 26 May 2016

ஐந்திணைக் கருப்பொருள்கள்

அன்பின் ஐந்திணைகளாகிய முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல்,
பாலை ஆகியவற்றின் முதற்பொருள், கருப்பொருள்,
உரிப்பொருள் ஆகியவற்றைக் காணலாம்.

2.3.1 குறிஞ்சித் திணை

முதற்பொருள்

நிலம் - மலையும் மலையைச் சார்ந்த இடமும்
பொழுது - 

அ) பெரும்பொழுது - கூதிர்காலமும், முன்பனிக்காலமும்

ஆ) சிறு பொழுது - யாமம்

கருப்பொருள்கள்

1. தெய்வம் - 

சேயோன்

2. உணவு - 

ஐவன நெல் (மலை நெல்), தினை, மூங்கிலரிசி,
கிழங்கு

3. விலங்கு - 

புலி, யானை, கரடி, பன்றி

4. மரம் - 

அகில், ஆரம், தேக்கு, வேங்கை

5. பறவை - 

கிளி, மயில்

6. பறை - முருகியம், தொண்டகப் பறை

7. தொழில் - 

தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல், தினை
விதைத்தல், வேட்டையாடுதல்

8. யாழ் - 

குறிஞ்சி யாழ்

9. பண் - 

குறிஞ்சிப் பண்

10. ஊர் - 

சிறுகுடி, குறிச்சி

11. நீர் - 

அருவி நீர், சுனை நீர்

12. மலர் - 

காந்தள், வேங்கை, குறிஞ்சி

உரிப்பொருள்

புணர்தலும் புணர்தல் நிமித்தமும் (நிமித்தம் = காரணம்)

2.3.2 முல்லைத் திணை

முதற்பொருள்

நிலம் - காடும் காட்டைச் சார்ந்த இடமும்

பொழுது - 

அ) பெரும்பொழுது : கார்காலம்
ஆ) சிறுபொழுது : மாலை

கருப்பொருள்கள்

1. தெய்வம் - 

மாயோன்

2. உணவு - 

வரகு, சாமை

3. விலங்கு - 

மான், முயல்

4. மரம் - 

தோன்றி, காயா, பிடவம், குருந்தம்

5. பறவை - 

காட்டுக்கோழி, சேவல்

6. பறை - 

ஏறுகோட் பறை

7. தொழில் - 

ஆநிரை மேய்த்தல், ஏறு தழுவல்

8. யாழ் - 

முல்லை யாழ்

9. பண் - 

குறிஞ்சிப் பண்

10. ஊர் - 

பாடி, சேரி

11. நீர் - 

குறுஞ்சுனை, கான்யாறு

12. மலர் - 

முல்லை, குல்லை, தோன்றி, பிடவம்

உரிப்பொருள்

இருத்தலும் இருத்தல் நிமித்தமும்.

2.3.3 மருதத் திணை

முதற்பொருள்

நிலம் - 

வயலும் வயல்சார்ந்த இடமும்

பொழுது - 

அ) பெரும்பொழுது - ஆண்டு முழுதும்
ஆ) சிறுபொழுது - வைகறை, விடியல்

கருப்பொருள்கள்

1. தெய்வம் - 

இந்திரன் (வேந்தன்)

2. உணவு - 

செந்நெல், கரும்பு

3. விலங்கு - 

எருமை, நீர்நாய்

4. மரம் - 

வஞ்சி, காஞ்சி, மருதம்

5. பறவை - 

தாரா, நீர்க்கோழி

6. பறை - 

மணமுழவு, நெல்லரி கிணை

7. தொழில் - 

விதைத்தல், விளைத்தல்

8. யாழ் - 

மருத யாழ்

9. பண் - 

மருதப் பண்

10. ஊர் - 

ஊர்கள்

11. நீர் - 

ஆற்றுநீர், பொய்கை நீர்

12. மலர் - 

தாமரை, கழுநீர்

உரிப்பொருள்

ஊடலும் ஊடல் நிமித்தமும்.

2.3.4 நெய்தல் திணை

முதற்பொருள்

நிலம - 

கடலும் கடல் சார்ந்த இடமும்

பொழுது - 

அ) பெரும்பொழுது - ஆண்டு முழுதும்

ஆ) சிறுபொழுது - எற்பாடு

கருப்பொருள்கள்

1. தெய்வம் - 

வருணன்

2. உணவு - 

மீன், உப்பு

3. விலங்கு - 

உமண்பகடு (உப்பு வாணிகனின் மூட்டை சுமக்கும்
எருது), சுறா

4. மரம் - 

புன்னை, ஞாழல், கண்டல்

5. பறவை - 

அன்றில், அன்னம்

6. பறை - 

மீன்கோட் பறை

7. தொழில் - 

மீன் பிடித்தல், மீன் உலர்த்தல், உப்பு
விளைவித்தல், நாவாய் ஓட்டல்

8. யாழ் - 

நெய்தல் யாழ்

9. பண் - 

நெய்தல் பண்

10. ஊர் - 

பட்டினம், பாக்கம்

11. நீர் - 

உவர்க்குழி (ஊற்றுநீர்), மணற்கிணறு

12. மலர் - 

நெய்தல், கைதை (தாழை)

உரிப்பொருள்

இரங்கலும் இரங்கல் நிமித்தமும்

2.3.5 பாலைத் திணை

முதற்பொருள்

நிலம் - பாலை நிலம்

பொழுது - 

அ) பெரும்பொழுது - வேனிற் காலம்,
பின்பனிக் காலம்
ஆ) சிறுபொழுது - நண்பகல்

கருப்பொருள்கள்

1. தெய்வம் - 

கொற்றவை

2. உணவு - 

வழிப்போக்கரிடம் திருடிய உணவு

3. விலங்கு - 

யானை, புலி, செந்நாய்

4. மரம் - 

இருப்பை, உழிஞை

5. பறவை - 

கழுகு, பருந்து, புறா

6. பறை - 

சூறை கோட் பறை

7. தொழில் - 

வழிப்பறி, சூறையாடல்

8. யாழ் - 

பாலை யாழ்

9. பண் - 

பாலைப் பண்

10. ஊர் - 

பறந்தலை

11. நீர் - 

கூவல் (கிணறு, குழி)

12. மலர் - 

மரா, குரா

உரிப்பொருள்

பிரிதலும் பிரிதல் நிமித்தமும்.

இவ்வாறு வரும் திணைக் கருப்பொருள்கள் தத்தம் திணையில்
இடம்பெறுவதுடன் பிற திணையிலும் இடம் பெறுவதுண்டு.
அதற்குத் திணை மயக்கம் என்று பெயர்.

No comments: