Tuesday, 5 March 2024

அறிய வேண்டிய வரலாறு - காந்தி- நேரு - ஜின்னா - மவுண்ட் பேட்டன் திட்டம்

 

      

 பிரிட்டிஸ் இந்தியா -சுதந்திர இந்தியா இரண்டுக்கும் என்னென்ன வேறுபாடுகள் என்பதை பல நூல்கள் நமக்கு முன்மொழிந்தாலும் மிக முக்கியமாக நாம் அறிய வேண்டிய ஒரு வரலாறு இருக்கின்றது. அது என்னவெனில் நாம் எதிர்த்த பிரிட்டிஸ் சாம்ராஜ்ஜியத்தின் கடைசி வைசிராயாக விளங்கிய மவுண்ட் பேட்டன் அவர்களையே சுதந்திர இந்தியாவின் முதல் வைசிராயாக பதவி வகிக்க வேண்டும் என்று நேரு அவர்கள் மவுண்ட் பேட்டனிடம் வலியுறுத்தினார். 

         இந்த மாபெரும் திட்டத்தை முதன்முதலாக முன்மொழிந்தவர் ஜின்னா . ஏனெனில் சுதந்திர இந்தியா பிரிவினை நிறைவடைந்த பிறகு பாகிஸ்தானுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளை, நிலங்களைப் பெற்றுத்தருபவராக மவுண்ட் பேட்டன் திகழ இந்தியாவின் முதல் வைசிராயாகவும் அவரே இருக்க வேண்டும் என்பதை ஜின்னா வலியுறுத்தினார். இந்தத் திட்டத்தை நேரு அவர்கள் மவுண்ட் பேட்டனிடம் நேரடியாகத் தெரிவித்து தமது ஆதரவையும் வழங்கினார். 




          இந்தியர்களின் உயர்ந்த இந்த பதவியை ஏற்றுக்கொள்வதில் விருப்பம் இருந்தாலும் மவுண்ட் பேட்டன் தயங்கினார். நேருவின் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுமாறு இங்கிலாந்தில் சர்ச்சிலும் அட்லியும் மவுண்ட் பேட்டனிடம் வலியுறுத்தினர். மிகவும் புகழோடு இருக்கும் நிலையில் உயர்ந்த பதவியில் உயர் புகழோடு இங்கிலாந்து செல்ல விரும்பிய மவுண்ட் பேட்டனுக்கு இந்தக் கோரிக்கை மகிழ்ச்சியை அளித்தாலும் தயக்கத்தையும் அளித்தது. அவரது தயக்கத்தின் காரணம் மகாத்மா காந்தி. ஏனெனில் மகாத்மா காந்தி தமது அறிவிப்பில் பெண் ஒருவரே இந்தியாவின்  முதல் வைசிராயாகத் திகழ வேண்டும் என்பதை அறிவித்திருந்தார். அதனால் மவுண்ட் பேட்டன் தயங்கினார். நேருவும் ஜின்னாவும் மகாத்மா காந்தியைச் சந்தித்து இந்தத் திட்டம் பற்றி எடுத்துரைத்தார்கள். அதனைத்தொடர்ந்து மகாத்மா காந்தி வைசிராய் மாளிகை சென்று மவுண்ட் பேட்டனைச் சந்தித்து , காங்கிரசின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறினார். மகாத்மா காந்தியின் அழைப்பை மாபெரும் கெளரவமாக மவுண்ட் பேட்டன் கருதினார். 

              மவுண்ட் பேட்டன் ஒருங்கிணைந்த இந்திய விடுதலையையே ஆதரித்தார். ஆனால் அதற்காக மவுண்ட் பேட்டன் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. மகாத்மா காந்தியும் பாகிஸ்தான் பிரிவதை ஏற்கவில்லை. ஆனால் ஜின்னா அவர்களின் விடாப்பிடிவாதம் காரணமாக வேறு வழியின்றி ஒப்புக்கொண்டார். ஆனால் மகாத்மா காந்தியடிகள் ஒரு விஷயத்தை உறுதியாக நம்பினார். சுதந்திர இந்தியாவில் காங்கிரசு சார்பில் தேர்ந்தெடுக்கப்படும் அமைச்சர்கள் வேலையாட்கள் இல்லாத சாதாரண இல்லத்தில் தங்கியிருந்து மக்கள் பணி செய்ய வேண்டும் என்பதை தாம் பங்கேற்கும் ஒவ்வொரு பிரார்த்தனை கூட்டத்திலும் மிகுந்த நம்பிக்கையுடன் நம்பி வெளிப்படுத்தினார். 


மவுண்ட் பேட்டன் ஜூன் 3 திட்டம் 

     1947 ஆம் ஆண்டு ஜூன் 3 அன்று வானொலியில் மவுண்ட் பேட்டன் கீழ்க்காணும் திட்டங்களை வாசித்தார். 

         இந்தியப்பிரிவனை பிரிட்டன் அரசால் அங்கீகரிக்கப்பட்டது. அதன்வாயிலாக இரண்டு நாடுகளுக்கும் சுதந்திர நிலை வழங்கப்படும். இரண்டு நாடுகளும் தனித்தனியாக சுதந்திரமான முறையில் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் உரிமையை பிரிட்டீஸ் அரசாங்கம் அங்கீகரித்தது என்பதையும், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருக்கும் சிற்றரசுகள் புவியியல் ரீதியாக மக்கள் விருப்பத்தின் அடிப்படையில் எந்த அரசில் வேண்டுமானாலும் இணையலாம் என்று அறிவித்தார். இந்தத் திட்டம் பிரிட்டன் அரசின் பாராளுமன்ற சட்டமாகவும் இயற்றப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டு வாசிக்கப்பட்டது என்பதையும் மவுண்ட் பேட்டன் அறிவித்தார். இந்த நடைமுறையே இந்திய சுதந்திரத்தின் இறுதி முயற்சியாக இருந்தது. 

          இந்தத் திட்டத்தின் மூலம் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று நேரு அறிவிக்க, மாறாக ஜின்னா அவர்கள் இதனை பாராட்டுவதில் என் இதயம் மகிழ்ச்சி அடையவில்லை என்றார். அடுத்த முக்கிய தலைவராக விளங்கிய பல்தேவ்சிங் , பிரிட்டீஸ் திட்டம் எதுவும் மகிழ்விக்காது. அதில் மவுண்ட்பேட்டன் திட்டமும் என்று கூறினார். மவுண்ட் பேட்டன் கலங்கிப் போய் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தார். அந்த நேரத்தில் இந்தியாவில் பிளேக் நோய் பரவி மக்களை பலி வாங்கியது. மகாத்மாவை நோக்கி பெரும்பாலான மக்கள் படையெடுத்து வந்தனர். அவர்களை ஆக்கப்படுத்தி ஊக்கப்படுத்தினார். வைசிராய் மவுண்ட் பேட்டனும் தன்னால் இயன்ற அளவில் மருத்துவ முகாம்களை உருவாக்கி நோயைக் கட்டுப்படுத்தினார். 

          

சுதந்திரம் 

      மவுண்ட் பேட்டன் மீண்டும் சுதந்திரம் மற்றும் பிரிவினை ஆகிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். பல அரசர்களை வைசிராய் மாளிகை வரவைத்தார். பல மன்னர்கள் மவுண்ட் பேட்டனை அவர்களது அரண்மனைக்கு வரவைத்தனர். மவுண்ட் பேட்டன் , நேரு, ஜின்னா, பல்தேவ் சிங், எல்லோரையும் தனித்தனியாகவும் ஒன்றாகவும் அமர வைத்து பேசி ஒரு முடிவுக்கு வந்தார் . மவுண்ட் பேட்டன் திட்டம் இறுதி நிலையில்  வெற்றி நிலையில் இருந்தது.

        நேரு, பட்டேல், ஜின்னா, பல்தேவ்சிங் ஆகியோர் உடனிருக்க மவுண்ட் பேட்டன் அறிவிக்கிறார். ஜூன் 15-ம் ஆண்டு நடைபெற்ற வாக்கெடுப்பில் ஆதரவாக 157 வாக்குகளும், எதிராக 29 வாக்குகளும் பதிவாகின. எனவே ஆகஸ்ட் 15-ம் தேதியை முடிவு செய்தனர். விரைவாக வெளியேறிவிட்டால் பிரிவினையின் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பு இருக்காது என்று எண்ணி  ஆகஸ்ட் 14-ம் தேதி மவுண்ட்பேட்டன் வைஸ்ராய் பதவியிலிருந்து விலகினார். காங்கிரசின் கோரிக்கையை ஏற்று 1947 ஆகஸ்ட் 15-லிருந்து 1948 ஜூன் 21 வரை தலைமை ஆளுநராக இருக்கச் சம்மதித்தார். அதன்பின் ராஜாஜி 1950 வரை தலைமை ஆளுநராகப் பணியாற்றுனார். 1948-ம் ஆண்டு பிரிட்டன் திரும்பினார்.


          இந்திய சுதந்திர வரலாற்றில் மவுண்ட் பேட்டன் பெயரும் முயற்சிகளும் சூழ்ச்சிகளும் நீங்காத  இடம் வகிக்கும். 

 

 

 


No comments: