Monday, 23 February 2015

ஜெயமோகன் அவர்களின் அனுபவம்

நதி என நாம் நினைப்பதன் சித்திரம் மாறிக்கொண்டே இருக்கிறது. இளமையில் நானறிந்த நதி என் வீட்டின் கொல்லையில் ஓடிய வள்ளியாறுதான். வற்றாத நதி. அதன் படுகை அதிகம் போனால் அரைகிலோமீட்டர் அகலம். மழைக்காலத்தில் செந்நிறநீர் நிறைந்தோடும்.

எட்டாவது படிக்கையில் முதல்முறையாக தாமிரவருணியை பார்த்தேன். இருமடங்கு பெரிய நதி. என் மனம் அன்றுகொண்ட விம்மிதத்தை இப்போதும் நினைவுகூர்கிறேன். அதன்பின் காவேரியைப்பார்த்தபோது தாமிரவருணி சிறியதாகியது. அதன்பின் கிருஷ்ணையையும் கோதாவரியையும் பார்த்தபோது நதி என்ற கற்பனையையே மாற்றியமைத்தேன். கிருஷ்ணா நதி மீது ரயில்பாலத்தில் முடிவில்லாமல் சென்றுகொண்டே இருக்கையில் ஒரு கணத்தில் இது என்ன நதியா ஏரியா என எழும் பிரமிப்பை வட இந்தியாவில் பயணம்செய்யும் பெரும்பாலான தமிழர்கள் அடைந்திருப்பார்கள்

அதன்பின் கங்கை. அதன்பின் பிரம்மபுத்திரா. அதன்பின் மிஸிஸிப்பி.. அதன்பின் கொலராடோ. நான் பார்த்த பெரிய நதிகள் பல. இனி என்னை எந்த நதி திகைப்படையச்செய்யும் என எண்ணியிருந்தேன். இம்முறை மீண்டும் பிரம்மபுத்திராவைப்பார்த்தபோது பலநிமிட நேரம் சொல்லின்மையை அடைந்தேன். மனம் புத்தி ஆணவம் மூன்றும் பணிந்து கரைந்து மறையும் தியானநிலை

இந்தியாவின் மிகப்பெரிய நதி என்றால் அது பிரம்மபுத்திராதான். கங்கை அதில் பாதிதான். காவேரி அதனுடன் ஒப்பிட்டால் சிறு ஓடை.. கரை ததும்பித்தான் கோடையிலும் செல்கிறது. அசாமை அடைந்ததும்தான் அது சமவெளியில் ஓடுகிறது ஆகவே பரந்து விரிந்து பலப்பல கிளைகளாக ஆகி ஒழுகிச்செல்கிறது ஒவ்வொரு நதிக்கிளைகள் நடுவிலும் மிகப்பெரிய மணல்திட்டுக்கள். ஒவ்வொன்றும் ஒரு நாகர்கோயிலுக்குச் சமம். மறுகரை என்பது பெரும்பாலும் பிரம்மபுத்திராவில் இந்த நதிக்குறையின் விளிம்பே.

16 ஆம் தேதி காசிரங்காவிலிருந்து நேராக பிரம்மபுத்திராவை அடைந்தோம். மூன்றுமணிநேரப்பயணம். பிரம்மபுத்திராவின் நடுவே உள்ள மாஜிலி என்ற ஆற்றிடைக்குறைதான் இந்தியாவிலேயே மிகப்பெரிய நதித்தீவு. 1250 சதுரகிலோமீட்டராக இருந்த இதன் பரப்பு பல முறை பிரம்மபுத்திராவால் விழுங்கப்பட்டு அரிக்கப்பட்டு இப்போது 421 சதுரகிலோமீட்டராக இருக்கிறது .2001ல் வந்த வெள்ளத்தில் மாஜிலியின் மூன்றில் ஒரு பங்கு கரைந்து கடலுக்குச் சென்றுவிட்டது

மாஜிலிக்குச் செல்ல பெரும்படகுகள் –அல்லது இரும்புத்தெப்பங்கள் என்று சொல்லவேண்டுமோ?- உள்ளன. படகுத்துறையே ஒரு பெரிய படகுதான். ஏனென்றால் நீர்மட்டம் வருடத்தில் ஐம்பது முறைக்குமேல் மாறக்கூடியது. ஒரு படகில் ஐந்நூறுக்கும் மேல் மனிதர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்ட இருசக்கரவாகனங்கள் பத்துப்பதினைந்து கார்கள் மலைமலையாக பொதிகள் ஏற்றப்பட்டபின் கிளம்பியது.

மாலைநான்கு மணிக்கு கடைசிப்படகு. அதன்பிறகு படகுப்போக்குவரத்து இல்லை. பிரம்மபுத்திராவில் இரவில் படகுகள் செல்லமுடியாது. மணல்திட்டுகளும் சுழிகளும் அபாயகரமானவை. ஆகவே காரில் நிற்காமல் வந்தோம். மதிய உணவு சாப்பிடவில்லை. படித்துறையில் இருந்த சிறிய தற்காலிகக்கடைகளில் பழகிப்போன புண்ணாக்கால் செய்யப்பட்ட கேக்கையும் டீயையும்தான் சாப்பிட்டோம்

மாஜிலி என்றால் நடுநிலம் என்று பொருள் ஐநூறாண்டுகளுக்கு முன்னர்தான் இது விரிந்து பெரிய தீவாக ஆகியிருக்கிறது 1661 முதல் 1696 வரை நடந்த தொடர் பூகம்பங்கள் அசாமின் நில அமைப்பையே மாற்றியமைத்தவை. அதன் வழியாக அசாமின் பண்பாட்டிலேயே மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது.. அதன் வழியாக பிரம்மபுத்திரா திசைமாறி ஒழுகத்தொடங்கியது. 1750ல் பதினைந்து நாட்கள் தொடர்ந்து பொழிந்த மழையும் பெருவெள்ளமும் பிரம்மபுத்திராவை இரண்டு பெரிய பெருக்குகளாகப்பிளந்தன. விளைவாக உருவானதே மாஜிலி

பிரம்மபுத்திராவை மாலைவேளையில் கடந்துசெல்வது வாழ்வின் மகத்தான அனுபவங்களில் ஒன்று. நான்கு மணி என்றால் நமது ஊரில் ஐந்தரை மணிபோல. மஞ்சள் வெயில். தெளிந்த நீலநீர்வெளி. இளம் குளிர். ஓசையே இல்லை. அவ்வப்போது செல்லும் பயணப்படகுகள். இருகரைகளிலும் கிராமங்கள் இல்லை. ஆற்றிடைக்குறைகளின் மணல்மேடுகளும் கரைக்காடுகளும் மட்டுமே.

படகின் மேல் கூரையில் நின்றபடி சென்றோம். பெரிய உருத்திராட்ச மாலைபோல நீரில் வளைந்து சென்றன நீர்க்காகங்கள். நீரிலிருந்து கனத்த புகை என எழுந்து வளைந்து சென்றன நாரைக்கூட்டங்கள். வாத்துக்கூட்டங்கள் நீரில் நீந்தும்போது உருவாகும் அலைவடிவம் நீர்வலை போல அவற்றைச் சூழ்ந்து சென்றது. மோனம் மிகுந்த தருணம். முழு விடுதலைக்கு அண்மையில் செல்லும் தருணம்.

மாஜிலியில் இறங்கிச் செல்லும்போது பயணிகளை படித்துறையில் இருந்து நகருக்குள் கொண்டுசெல்லும் பேருந்து மணலில் மாட்டிக்கொண்டது. பிரம்மபுத்திராவின் மணல்கரையே ஐந்து கிலோமீட்டருக்கு மேல் அகலமானது. சாலை போடமுடியாது. மணல். ஆனால் மென்மையான மணல். கட்டுமானத்துக்கும் உதவாது. மணல்மேல் யானைப்ப்புல்லை பரப்பி சாலையாக்கியிருந்தனர்.

பேருந்தை மீட்டு எடுக்க ஒருமணிநேரமாகியது. நாங்கள் இறங்கி தள்ளினோம். பேருந்தை சற்று பின்னால் எடுத்தபின் முன்னால் கொண்டுசெல்லலாம் என்று கே.பி. வினோத் அளித்த ஆலோசனைதான் கடைசியில் வென்றது. அதன்பின்னர் நாங்கள் மாஜிலிக்குள் நுழைந்தோம்.

மாஜிலியில் இருந்த சர்க்யூட் ஹவுஸுக்கு வந்துசேர்ந்தோம். மாலையுணவு அங்கே நேரமாகும் என்றார்கள். வெளியே உணவு வேண்டுமென்றால் முன்னரே சொல்லியனுப்பவேண்டும், சொல்லியனுப்பியபின் ஒரு சுற்றுலா விடுதியில் சாப்பிடச்சென்றோம். அங்கே உணவு வர மேலும் ஒரு மணிநேரமாகியது. நல்ல குளிர் இறங்கிக்கொண்டிருந்தது. ஏழரை மணிக்கே கூரிருள். ஓலைக்கொட்டகையில் அமர்ந்து சாப்பிட்டோம்

இப்பகுதியின் அரிசி மிகச்சுவையானது கோமல் சால் .என்கிறார்கள். துணியில் கட்டி கொதிநீரில் நீரில் பதினைந்து நிமிடம் போட்டு எடுத்தால் சோறு. சற்று ஒட்டும்தன்மைகொண்டது. இங்கே இன்னொரு சிறப்புணவு பட்டாணிக்கடலையை விட கொஞ்சம் பெரிய உருளைக்கிழங்கு. அதை சுண்டல்போலச் செய்த பொரியல் நான் சமீபத்தில் சாப்பிட்ட மிகச்சிறந்த உணவு. சிறந்த மீன் கிடைக்கும். ஆனால் உணவுக்கு ஆணையிட்ட சைவ உணவுக்காரரான கிருஷ்ணன் அனைவருக்கும் சைவமே போதும் என எங்களுக்குத்தெரியாமல் சொல்லிவிட்டிருந்தார்

மாஜிலியின் குளிர் ஏறி ஏறி வந்தது. இமையக்குளிர் போல வறண்ட குளிர் அல்ல. நீராவி நிறைந்த குளிர் இது. கோடைகாலத்தில் மிகக்கடுமையாகப் புழுங்கும் என்றார்கள். வியர்வை ஊறி ஆடைகள் நனைந்துவழியுமாம். 2001ல் வந்த வெள்ளத்தில் அந்த விடுதியிலேயே இடுப்பளவு நீருக்குள் இருந்ததாம். அதாவது மொத்த மாஜிலியே நீருக்குள் இருந்திருக்கிறது. நிலம் காணாமலாவதைப் பற்றி எண்ணிக்கொண்டேன். வாழ்ந்த நிலம் மறைந்து போவது எவ்வளவு பெரிய கதை.        நன்றி திரு ஜெயமோகன் அவர்களுக்கு

Saturday, 21 February 2015

தமிழின் சிறந்த நாவல்கள் (எழுத்தாளர்கள் தேர்வு)

தமிழின் சிறந்த நாவல்கள் (எழுத்தாளர்கள் தேர்வு)

வெங்கட்சாமிநாதன்

1. மோகமுள் – தி. ஜானகிராமன்
2. தலைமுறைகள் – நீல. பத்மநாபன்
3. ஜே.ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி
4. கோவேறு கழுதைகள் – இமையம்
5. வானம் வசப்படும் – பிரபஞ்சன்
6. தூர்வை – சோ. தர்மன்
7. எட்டுத் திக்கும் மதயானை – நாஞ்சில் நாடன்
8. கரமுண்டார் வீடு – தஞ்சை பிரகாஷ்
9. விஷ்ணுபுரம் – ஜெயமோகன்
10. செந்நெல் – சோலை சுந்தரபெருமாள்

ஜெயமோகன்

1. விஷ்ணுபுரம் - ஜெயமோகன்
2. பின் தொடரும் நிழலின் குரல் - ஜெயமோகன்
3. புயலிலே ஒரு தோணி - ப.சிங்காரம்.
4. ஒரு புளிய மரத்தின் கதை - சுந்தர ராமசாமி
5. மோகமுள் - தி.ஜானகிராமன்.
6. பொய்த்தேவு - க.நா.சுப்ரமணியம்
7. ஜெ.ஜெ. சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி
8. தலைமுறைகள் - நீல பத்மநாபன்
9. கிருஷ்ணப் பருந்து - ஆ.மாதவன்
10. மானுடம் வெல்லும் - பிரபஞ்சன்

ராஜமார்த்தாண்டன்

1. பொய்த்தேவு – க.நா. சுப்பிரமணியம்
2. ஒரு புளியமரத்தின் கதை – சுந்தர ராமசாமி
3. அம்மா வந்தாள் – தி. ஜானகிராமன்
4. ஜே.ஜே. சில குறிப்புகள்- சுந்தர ராமசாமி
5. குழந்தைகள் பெண்கள் ஆண்கள் – சுந்தர ராமசாமி
6. புயலிலே ஒரு தோணி – ப. சிங்காரம்
7. விஷ்ணுபுரம் – ஜெயமோகன்
8. பின்தொடரும் நிழலின் குரல் – ஜெயமோகன்
9. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் –ஜெயகாந்தன்
10. உப பாண்டவம் – எஸ். ராமகிருஷ்ணன்

சி. மோகன்

1. இடைவெளி – எஸ். சம்பத்
2. புயலிலே ஒரு தோணி – ப. சிங்காரம்
3. விஷ்ணுபுரம் – ஜெயமோகன்
4. நினைவுப் பாதை – நகுலன்
5. நாளை மற்றுமொரு நாளே – ஜி. நாகராஜன்
6. ஜே.ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி
7. மோகமுள் – தி. ஜானகிராமன்
8. பள்ளிகொண்டபுரம் – நீல. பத்மநாபன்
9. தண்ணீர் – அசோகமித்திரன்
10. சாயாவனம் – சா. கந்தசாமி

கந்தர்வன்

1. மோகமுள் – தி. ஜானகிராமன்
2. தலைமுறைகள் – நீல. பத்மநாபன்
3. சாயாவனம் – சா. கந்தசாமி
4. மலரும் சருகும் – டி. செல்வராஜ்
5. கோபல்ல கிராமம் – கி. ராஜநாராயணன்
6. கடல்புரத்தில் – வண்ணநிலவன்
7. கீரல்கள் – ஐசக் அருமைராஜன்
8. புத்தம் வீடு – ஹெப்சியா ஜேசுதாஸன்
9. பொய்த்தேவு – க.நா. சுப்பிரமணியம்
10. கோவேறுக் கழுதைகள் – இமையம்

சா. கந்தசாமி

1. பிரதாப முதலியார் சரித்திரம் – மாயூரம் வேதநாயகம் பிள்ளை
2. நாகம்மாள் – ஆர். சண்முகசுந்தரம்
3. ஒரு நாள் – க.நா. சுப்பிரமணியம்
4. வாசவேஸ்வரம் – கிருத்திகா
5. 18ஆவது அட்சக்கோடு – அசோகமித்திரன்
6. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் –ஜெயகாந்தன்
7. பள்ளிகொண்டபுரம் – நீல. பத்மநாபன்
8. அவன் ஆனது – சா. கந்தசாமி
9. வானம் வசப்படும் – பிரபஞ்சன்
10. ரப்பர் – ஜெயமோகன்

1. புயலில் ஒரு தோணி {ப.சிங்காரம்}

2. கரைந்த நிழல்கள் {அசோகமித்திரன்}.

3. கம்பா நதி {வண்ண நிலவன்}

4.  நதி மூலம் {விட்டல் ராவ்}.

6. புத்தம் வீடு {ஹெப்சிகா ஜேசுதாசன்.}

7. வாசவேச்வரம் {கிருத்திகா}

8. நாளை மற்றுமொரு நாளே {ஜி.நாகராஜன்}

9. மரபசு {ஜானகி ராமன்}

10. பாரிசுக்கு போ {ஜெயகாந்தன்.}

எஸ். ராமகிருஷ்ணன் (100 நாவல்கள்)

1) பிரதாப முதலியார் சரித்திரம் - மாயூரம் வேதநாயகம் பிள்ளை

2) கமலாம்பாள் சரித்திரம் – பி.ஆர். ராஜம் அய்யர்

3) கிளாரிந்தா - மாதவையா

4) நாகம்மாள் - ஆர் சண்முக சுந்தரம்

5) தில்லான மோகனாம்பாள் - கொத்தமங்கலம் சுப்பு

6) பொன்னியின் செல்வன் - கல்கி

7) வீரபாண்டியன் மனைவி – அரு.ராமநாதன்

  சயாம் மரண ரயில் - ரெ. சண்முகம்.

9) லங்காட் நதிக்கரை - அ.ரெங்கசாமி

10) தீ.- எஸ். பொன்னுதுரை.

11) பஞ்சமர் - டேனியல்

12) பொய்தேவு - க.நா.சுப்ரமணியம்.

13) வாடிவாசல் - சி.சு.செல்லப்பா

14) அபிதா - லா.ச.ராமாமிருதம்.

15) நித்யகன்னி - எம்.வி. வெங்கட்ராம்

16) பசித்த மானுடம் – கரிச்சான்குஞ்சு

17) அம்மா வந்தாள் – தி.ஜானகிராமன் 

18) மோகமுள் - தி. ஜானகிராமன்

19) மரப்பசு - தி.ஜானகிராமன்

20) வாசவேஸ்வரம் – கிருத்திகா

21) ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

22) சில நேரங்களில் சில மனிதர்கள்- ஜெயகாந்தன்

23) பாரீஸிக்கு போ – ஜெயகாந்தன்

24) புயலிலே ஒரு தோணி - பா.சிங்காரம்

25) கடலுக்கு அப்பால் - பா.சிங்காரம்

26) நினைவுப்பாதை - நகுலன்

27) நாய்கள் - நகுலன்

28) ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி

29) ஜே.ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி

30) குழந்தைகள் பெண்கள் ஆண்கள்- சுந்தர ராமசாமி

31) கோபல்ல கிராமம் - கி.ராஜநாராயணன்

32) சாயாவனம் - சா. கந்தசாமி

33) தொலைந்து போனவர்கள் - சா. கந்தசாமி

34) நாளை மற்றுமொரு நாளே – ஜீ. நாகராஜன்

35) குருதிப்புனல் - இந்திரா பார்த்தசாரதி

36) கருக்கு -பாமா

37) கரிப்பு மணிகள் - ராஜம் கிருஷ்ணன்

38) வாடாமல்லி - சு.சமுத்திரம்.

39) கல்மரம் - திலகவதி.

40) போக்கிடம் - விட்டல்ராவ்

41) புத்தம் வீடு - ஹெப்சிபா ஜேசுதாசன்

42) கரைந்த நிழல்கள் - அசோகமித்ரன்

43) பதினெட்டாவது அட்சக்கோடு - அசோகமித்ரன்

44) ஒற்றன் - அசோகமித்ரன்

45) இடைவெளி – சம்பத்

46) பள்ளிகொண்டபுரம் - நீல பத்மநாபன்

47) தலைமுறைகள் - நீல.பத்மநாபன்

48) கிருஷ்ணபருந்து - ஆ.மாதவன்

49) அசடு - காசியபன்

50) வெக்கை - பூமணி

51) பிறகு - பூமணி

52) தலைகீழ் விகிதங்கள் - நாஞ்சில் நாடன்

53) எட்டுதிக்கும் மதயானை - நாஞ்சில் நாடன்

54) ஒரு கடலோர கிராமத்தின் கதை - தோப்பில் முகமது மீரான்

55) மானுடம் வெல்லும் - பிரபஞ்சன்

56) சந்தியா - பிரபஞ்சன்

57) காகிதமலர்கள் - ஆதவன்

58) என் பெயர் ராமசேஷன் - ஆதவன்

59) ரத்தம் ஒரே நிறம் - சுஜாதா

60) உடையார் - பாலகுமாரன்

61) கரிசல் - பொன்னிலன்

62) கம்பாநதி - வண்ணநிலவன்

63) கடல்புரத்தில் வண்ணநிலவன்

64) பழையன கழிதலும் - சிவகாமி

65) மௌனப்புயல் – வாசந்தி

66) ஈரம் கசிந்த நிலம் – சி. ஆர் ரவீந்திரன்

67) பாய்மரக்கப்பல் - பாவண்ணன்.

68) பாழி – கோணங்கி

69) ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் - தமிழவன்

70) வார்ஸாவில் ஒரு கடவுள் - தமிழவன்.

71) கோவேறு கழுதைகள் - இமையம்

72) செடல்- இமையம்

73) உள்ளிருந்து சில குரல்கள் - கோபி கிருஷ்ணன்.

74) வெள்ளாவி – விமல் குழந்தைவேல்

75) கரமுண்டார்வீடு - தஞ்சை பிரகாஷ்

76) விஷ்ணுபுரம் - ஜெயமோகன்

77) காடு- ஜெயமோகன்

78) கொற்றவை ஜெயமோகன்

79) உப பாண்டவம் - எஸ்.ராமகிருஷ்ணன்

80) நெடுங்குருதி – எஸ்.ராமகிருஷ்ணன்

81) யாமம் - எஸ்.ராமகிருஷ்ணன்,

82) கூகை சோ.தர்மன்

83) புலிநகக்கொன்றை – பி.ஏ.கிருஷ்ணன்.

84) ஸீரோ டிகிரி – சாரு நிவேதிதா

85) எக்ஸிஸ்டென்ஷியலிசயமும் பேன்சி பனியனும் - சாரு நிவேதிதா

86) சொல் என்றொரு சொல் – பிரேம் ரமேஷ்

87) சிலுவை ராஜ் சரித்திரம்- ராஜ்கௌதமன்

88) தகப்பன்கொடி – அழகிய பெரியவன்.

89) கொரில்லா – ஷோபா சக்தி

90) நிழல்முற்றம் - பெருமாள் முருகன்

91) கூளமாதாரி – பெருமாள் முருகன்

92) சாயத்திரை- சுப்ரபாரதிமணியன்

93) ரத்தஉறவு - யூமாவாசுகி

94) கனவுச்சிறை - தேவகாந்தன் 

95) அளம் - தமிழ்செல்வி

96) அலெக்ஸ்சாண்டரும் ஒரு கோப்பை தேநீரும்.- எம்.ஜி.சுரேஷ்

97) அரசூர் வம்சம் - இரா.முருகன்

98) அஞ்சலை - கண்மணி குணசேகரன்

99) குள்ளச் சித்தன் சரித்திரம் - யுவன் சந்திரசேகர்

100) ஆழி சூழ் உலகு - ஜோ டி குரூஸ் 

Thursday, 19 February 2015

பாரதியார் வாழ்ந்த காசி வீட்டில் ஒரு நாள்

பாரதியார் வாழ்ந்த காசி வீட்டில் ஒரு நாள்

"இன்னது நீர்க்கங்கை யாறு எங்கள் ஆறே
இங்கிதன் மாண்பினுக்கு எதிரெது வேறே''

இது கங்கைக்குத் தங்கக் கவிதா மகுடம் சூட்டி பாரதி பாடிய வரிகள்.

இதன் மூலம் அவர் காசியையும், கங்கையையும் எந்த அளவு நேசித்திருப்பார் என்று சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

39 வயது வரை வாழ்ந்த உலக மகா கவி பாரதியின் தன் வாழ்க்கையின் இளமைப் பிராயமான 16 வயதில் இருந்து 21 வயது வரை (1898-1903) காசியில் தங்கி கல்வி கற்றதுதுடன் கலை கலாச்சார பொது அறிவு விஷயங்களையும் பெற்றார்.
1898ம் ஆண்டு ஜூன் மாதம் பாரதியின் தந்தை சின்னச்சாமி காலமான பின்னர், குடும்பச் சூழல் மாறியது. வறுமை விரட்டியது. காசியில் இருந்த அத்தை குப்பம்மாளும், அவர் கணவர் கிருஷ்ணசிவனும் பாரதியை காசிக்கு அழைக்கவே மறு பேச்சு பேசாமல் அங்கு போய்விட்டார்.
காசியில் கங்கை கரையோரம் உள்ள வீட்டில் அத்தை மாமாவோடு தங்கலானார். பின்னர் காசி மிஷன் கல்லூரியிலும், ஜெய்நாராயண் கல்லூரியிலும் படித்தார். ஹிந்தி, சம்ஸ்கிருதம் கற்றுத் தேர்ந்தார். அலகாபாத் சர்வ கலாசாலை பிரவேசப் பரீட்சையில் முதல் வகுப்பில் தேறி, பலரும் பாராட்டும் நிலை அடைந்தார். பாரதியின் உச்சரிப்புத் தெளிவையும் அதன் தன்மையையும் காசிப் பண்டிதர்கள் கண்டு அப்போதே வியந்தார்கள்.
கொஞ்ச காலம், பள்ளி ஒன்றில் ஆசிரியர் பணியிலும் இருந்தார். காசி வாசம், பாரதி உள்ளத்தில் ஒரு புதிய இனம் தெரியாத பரவசத்தை ஊட்டிற்று. காசி நகரில், பல இடங்களுக்கும் சென்று வருவது அவருக்கு வழக்கமாயிற்று. நடந்தேதான் செல்வார்.
வீடு என்று இருந்தால் வரி கட்ட வேண்டும் அதுவே மடம் என்று இருந்தால் வரி விலக்கு உண்டு. இது அப்போதைய பிரிட்டிஷ் அரசின் சட்டம்.இந்த சட்டத்திற்காக பாரதியின் மாமா தனது வீட்டை சிவ மடம் என்றாக்கினார். நிறைய பண்டிதர்கள் வந்து போவார்கள். பண்டிதர்களிடையே பாரதி எப்போதுமே தீவிரமாக பேசுவார் அதிலும் குறிப்பாக பெண் விடுதலை, பெண் கல்வி குறித்து காரசாரமாக விவாதிப்பார். இவர் ஒரு ஞானவான் என்பதை மட்டும் உணர்ந்தவர்கள் அதற்கு மேல் இவரை உயர்த்த முடியாததால் பின் அங்கு இருந்து கிளம்பி மீண்டும் எட்டயபுரம் வந்தார்.
பாரதி தனது உடையிலும் தோற்றத்திலும் மாற்றத்தை உருவாக்கி கொண்டது காசியில்தான். இப்போதும் கூட இங்குள்ள பனாரஸ் இந்து யுனிவர்சிட்டியில் உள்ள பேராசிரியர்கள் வேட்டி கோட் தலைப்பாகை அணிந்து இருப்பதை பார்க்கலாம். இந்த பழக்கம்தான் பாரதிக்கு பிற்பாடு எங்கு சென்றாலும் தொடர்ந்திருக்கலாம். ஒருமுறை அல்ல ஒரு நாளின் பலமுறை பாரதி கங்கையில் நீராடுவதும் கரையில் இருந்தபடி காளிதாசர், ஷெல்லி, கீட்ஸ் கவிதைகளை படிப்பதுமாக இருப்பார். கங்கை கரை படிக்கட்டுகளில் அமர்ந்து படிப்பது அவருக்கு மிகவும் பிடித்த விஷயம்.
இப்படி பாரதியின் நெஞ்சுக்குள் பாய்ந்து ஒடிக்கொண்டிருந்த தொன்மையான கங்கையையும் அவர் நேசித்த காசியையும் பற்றி நிறைய முறை கேள்விப்பட்ட எனக்கு கடந்த வாரம் அவர் வாழ்ந்த அந்த காசியின் வீட்டை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.

வாரணாசி ரயில் நிலையத்தில் இருந்து அனுமான் காட் என்றால் நூறு ரூபாய் கட்டணத்தில் ஆட்டோ ரிக்ஷாவில் கொண்டு போய் இறக்கிவிடுவர். அங்குள்ள காஞ்சி மடத்திற்கு நேர் எதிராக சிவ மடம் என்று தமிழிலும் இந்தியிலும் எழுதப்பட்ட பழங்கால வீடு ஒன்று உள்ளது.

மாட்டின் எச்சமும், குப்பை கூளமும் நிறைந்த நெரிசலான சந்துக்குள் அமைந்திருக்கும் அந்த பழைய வீட்டிற்கு எப்படி பார்த்தாலும் இருநூறு வயதிருக்கும்.
அதிர்ந்து பேசினாலே வீட்டின் காரை சுவர்கள் உதிர்ந்துவிடுமோ என்கிற அளவிற்கு பழமை மாறாமல் அப்படியேதான் பல இடங்களும் உள்ளது.
அந்த வீட்டில் பலர் இருந்தாலும் நின்று பேச நேரமில்லாமல் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருக்கின்றனர்.

அந்த வீட்டில் பாரதியின் பெருமைகளையும்,நினைவுகளையும் சுமந்து கொண்டு இருக்கும் ஒரே ஜீவன் கே.வி.கிருஷ்ணன் என்பவர்தான். பாரதியாரின் அப்பாவுடன் பிறந்த குப்பம்மாள் மகள் வழி பையனான இவருக்கு இப்போது வயது 88 ஆகிறது. பாரதி இங்கு இருந்த போது அவர் பிறக்கவேயில்லை.

காசியில் பிறந்து வளர்ந்தவரான இவர் இங்குள்ள புகழ்பெற்ற வாரணாசி இந்து பல்கலையில் பணியாற்றி ஒய்வு பெற்றவராவார். எளிமையான வாழ்க்கை, தமிழைவிட இந்தியில் திறமை அதிகம்.இசையிலும் புலமை உண்டு.
பிற்பாடு பாரதியார் தன் மாமா என்பதை அறிந்து அவர் மீது மிகுந்த பற்று கொண்டு அவர் எழுதிய கவிதைகளை எல்லாம் இந்தி மொழியில் மொழிமாற்றம் செய்து பாரதியை இந்தி பேசும் மக்களிடையே கொண்டு போய் சேர்த்தார். இதன் காரணமாக அங்குள்ள மக்கள் உதவியுடன் பாரதிக்கு சிலை அமைக்கவும் செய்தார்.
பாரதியின் மாப்பிள்ளை என்பதே என் பாக்கியம் அதைவிட வேறு எதுவும் வேண்டாம் என்ற நிலையில் உள்ளவர்.தற்போது மிகவும் தளர்ந்து போய் உள்ளார். கேட்கும் திறனும் குறைந்து விட்டது.
ஆனாலும் இரண்டாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து ஒருவன் பாரதி வாழ்ந்த வீட்டை பார்வையிட வந்துள்ளானே என்ற ஆர்வம் காரணமாக சிரமப்பட்டு எழுந்து பாரதி உலாவிய இடங்கள் இவை, அவர் உபயோகித்த பொருட்கள் இவை என்று பழுதடைந்து, பாழடைந்த கிடந்த நாற்காலி மேஜை போன்றவைகளை தூசு தட்டி காண்பித்த போது அந்த இடம் பாரதி வாழ்ந்த இடமாக அல்ல இப்போதும் வாழும் இடமாகவே பட்டது.
முன்பு காரைச்சுவர்களுக்குள் இருந்தார் இப்போது இவரது இதய சுவர்களுக்குள் இருக்கிறார்

Wednesday, 18 February 2015

நிலவைத் தொலைத்த இரவு

நினைவுகள் பவனி வருகின்றன, நிலவைத் தொலைத்த இரவில்

தோல்வி

சில நேரங்களில் நான் தோற்பதற்காகவே விளையாடுகிறேன் என்பது எனக்குத் தெரிந்து விடுகிறது

Thursday, 12 February 2015

சென்னையில் ரவிசங்கர்ஜீ உடன் சங்கர்

கவிஞர் அறிவுமதி

***
அகதி முகாம்
மழையில் வருகிறது
மண் மணம்.

***
அவசரக் காற்று
முதல் மழை
புளியம் பூக்கள்.

***

மழைவிட்ட நேரம்
தேங்கிய நீரில்
முகம் பார்த்தது
தெருவிளக்கு.

***

விற்பனையில்
வண்ணத்துப் பூச்சி
துடிக்கிறது பூச்செடி.

***

தாய்க்காகக் காத்திருக்கிறேன்
மரத்தில் சாய்ந்தபடி.

***

இறந்த வீரன்
மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது
பாதி எழுதிய மடல்.

***
விடிந்துவிடு இரவே
விழித்திருக்கிறான்
கூர்க்கா.

***
வாழ்த்து அட்டை
முகவரியில் வருடினேன்
எழுதிய கையை.

***

எப்படிப் பாதுகாக்க
குடைக் கம்பியில்
உன் கைரேகை.

***
தொட்ட நினைவு
புரட்டிய பக்கத்தில்
கூந்தல் முடி.

***

பாவம் தூண்டில்காரன்
தக்கையின் மீது
தும்பி.

***

மரக்கிளையில் குழந்தை
வரப்பில் பண்ணையார்
பயிரில் சிந்துகிறது பால்.

***

வாழ்க்கை என்னடா வாழ்க்கை
கருவேலங் காட்டிற்குள்
வண்ணத்துப் பூச்சி!

***

எவன் நிலம்!
எவன் நாடு!
இலவச மனைப் பட்டா!

***

நந்தனைக் கொன்றதே சரி
குலதெய்வம் மறந்த
குற்றவாளி.

***

நொறுக்குவான் பண்ணையாரை
எல்லாக் கோபங்களோடும்
சுடுகாட்டில்.

***
பிணப் பரிசோதனை
அய்யர் குடலிலும்
மலம்.

***

தேவர் படித்துறை
பறையர் படித்துறை
அலைகள் மீறின
சாதி!

***

பறையர் சுடுகாடு
படையாட்சி சுடுகாடு
தலைமுழுக
ஒரே ஆறு.

***

ஊருக்கு ஊர் வட்டிக்கடை
பொது இடங்களில்
தண்ணீர்த் தொட்டி
காறித்துப்புகிறான்
கணைக்கால் இரும்பொறை.

***

குருட்டுப் பாடகன்
தொடர்வண்டி சக்கரத்தில்
நசுங்கியது
புல்லாங்குழல்.

***

அன்று அதனை அடித்தாள்
இன்று அதுவாகி வெடித்தாள்
தாய் வழிச் சமூகம்.

***

ஒரே தலையணை
வெண்சுருட்டுப்
புகைக்குள்
திணறும்
மல்லிகை மணம்.

***

இரண்டு அடி கொடுத்தால்தான்
திருந்துவாய்!
வாங்கிக்கொள்
வள்ளுவனிடம்.

***

எங்கு தூங்குகிறதோ
என் கால்சட்டை காலத்தின்
குத்துப்படாத பம்பரம்.

***

கல்லூரி மணிக்கூண்டு
பழைய மாணவன்
விசாரிக்கும் மணியோசை.

***

ஒரு மரத்தை வெட்டுபவன்
மழையைக்
கொலை செய்கிறான்

***

கண்ணில் ஓவியம்
காதில் இசை
மழைப் பாட்டு

***

இந்தியா டுடேயில்
தமிழச்சி மார்புகள்!
கண்ணீரால் போர்த்தினேன்.

***

இரண்டு ஊதுபத்தி
புகையின் அசைவில்
நீ… நான்

***

உளி எடுத்துச்
சிற்பம் செதுக்கியவன்,
மூங்கில் அறுத்துப்
புல்லாங்குழல் செய்தவன்,
ஒலை கிழித்துக்
கவிதை எழுதியவன்..
இவர்களுக்கும்
பங்குண்டு
மழைக் கொலையில்.
ஒவ்வொரு செடிக்கும்
ஒவ்வொரு கொடிக்கும்
ஒவ்வொரு மரத்திற்கும்
பெயர்ச்சொல்லி,
உறவு சொல்லி
வாழ்ந்த வாழ்க்கை
வற்றிவிட்டது