ஏன் விளைந்தது பிரெஞ்ச்ப் புரட்சி என்பதற்குக் கீழே உள்ள கவிதை சான்று .
“ஒரு கழுதையின் முதுகில் ஒட்ஸ் தானிய
மூட்டை.
இன்னொரு கழுதையின் முதுகிலோ
உப்பு வரி ரசீது கட்டுகள்.”
ஆம். 1789 ஆம் ஆண்டுகளில் பிரெஞ்சுப் பொருளாதாரம் நிலைகுலைந்தது. தேசம் திவாலாகியது. சிக்கன நடவடிக்கைகள் மூலம் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்று ஆலோசனை சொன்னார்கள் அமைச்சர்கள். அரசன் செவி மடுத்துக் கேட்டுக் கொண்டிருக்க, மன்னனை முந்திக்கொண்டு கேட்டாள் ராணி ”தேசம் தானே திவாலானது நமக்கென்ன?” நாடு தழுவிய பஞ்சத்தால் பரிதவித்துப் போயிருந்த விவசாயிகள் மீது மேலும் வரிச்சுமையைக் கூட்ட முடிவு செய்யப்பட்டது.
மன்னனின் கேளிக்கைக்காகவும், மகாராணியின் ஆடம்பரத்திற்காகவும், இளவல்களின் மதுவிற்காகவும், மதகுருமார்களின் விருந்துக்காகவும் மக்கள் மேலும் சில துளிகள் ரத்தத்தைத் தியாகம் செய்யுமாறு கேட்டுக்கொள்ப்பட்டனர். . மக்களும் ஒப்புக் கொண்டனர் தியாகம் செய்வதற்கு. தங்கள் உதிரத்தை அல்ல, மன்னராட்சியை! ஆம் , இரத்தம் சிந்தி மன்னராட்சியைத் தியாகம் செய்ய முடிவெடுத்தனர்.
‘இது நல்லதல்ல என அரசாங்கம் அடையாளம் காட்டினால் அது போர்… மக்களே அடையாளம் காட்டினால் அது புரட்சி! அப்படி மக்களால் அடையாளம் காணப்பட்டு மக்களால் முன்னெடுக்கப்பட்டு மக்களால் வெற்றியாக்கப்பட்ட புரட்சி காலம் கடந்த வரலாறாக நீடிக்கின்றது.
பதினாறாம் லூயி மன்னன் ஏகபோக வாழ்வில் செழித்திருக்க , மக்கள் வறுமையில் வாடியிருக்க அப்போது அமெரிக்கா இங்கிலாந்து மீது போர்த் தொடுக்க , எதிரியை பழிவாங்க அமெரிக்காவுக்கு உதவிகளை அள்ளி வழங்கியது பிரான்ஸ். அள்ளி வழங்கிய நிதியால் தள்ளாடும் நிலைக்குத் தடுமாறிப் போனதன் விளைவே பிரெஞ்ச்ப் புரட்சி.
மன்னராட்சி குடும்ப உறவுகள் வேட்டையாட விவசாயிகளின் வயல்கள் அழிக்கப்பட்டன. காடு இழந்த விவசாயி கட்டாயம் வரி செலுத்த வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். கதறி அழுது கடவுளிடம் சென்றாலும் மத குருமார்கள் இரத்தத்தை உறுஞ்சும் அரசனையே சக்ரவர்த்தி என்றழைக்க கடைசியில் கண் தெரியாத அரசையும் காது கேட்காத கடவுளையும் எதிர்த்து களம் கண்டனர் மக்கள்.
போர் அல்லாத போராட்டம் , வறுமையில் நீடித்த புரட்சி எனப் பல தடைகளைத் தாண்டி போராட , போரிட மக்கள் வீதிக்கு வந்தனர்.
மலை உச்சியில் இருந்து அரசர்கள், நிலப்பிரபுக்கள் , மத குருமார்கள் அமர்ந்து கொண்டு மக்களை நோக்கி மலையைப் பாருங்கள் எனக் கூறிய போது , மலையின் கீழ் இருந்து மலையையே ஆட்டம் காண வைக்க மக்கள் முடிவெடுத்தார்கள்.
அடுத்த அத்தியாயத்தில் ........................ அடுத்து.....
2 comments:
What a deep content sir. Really great super. Most of the informations are new to me .
Congratulations, let your journey continues to bring out lot of historical incidents which changed the society. It is an informative and inspiring message to the young generation.
Post a Comment