1.நீதிமன்றம் என்று பெயர். ஆனால் நிதி இருந்தால்தான் நீதி கிடைக்கிறது. இந்த வினா சாமானிய மக்களுக்கு பல காலமாக விடை கிடைக்காத கிடைக்காத வினாவாகவே உள்ளது. உதாரணமாக இந்தியாவின் உயரிய அரசியல்வாதிகளுக்கும் திரை நட்சத்திரங்களுக்கும் இரவு இரண்டு மணிகளுக்குக் கூட நீதிபதிகள் தீர்ப்புச் சொல்வார்கள் அவர்களுக்கு ஏற்றவாறு.. ஆனால் சாமானிய மக்களுக்கு வாய்தா என்னும் வினா நீண்டு கொண்டே செல்கிறது. நீதி எப்போது நீதியாக இருக்கும் என்பதை நாம் எப்போது உணர்வது ?
2. கோயில்கள். மன நிம்மதி வேண்டி மக்கள் படை எடுக்கும் இடம். ஆனால் பொது தரிசனத்திற்குப் பொதுவாகவே நீண்ட வரிசை. பத்து ரூபாய் செலுத்தினால் பொது தரிசனத்திற்கு சற்று குறைந்த வரிசை. நூறு ரூபாய் செலுத்தினால் வரிசையின் நீளம் குறையும். இந்த வரிசைகளில் பணம் செலுத்தாமல் கோயில் பணியாளர்களுக்கு நேரடியாக பணம் செலுத்தினால் எந்த வரிசையிலும் நிற்காமல் உள் சென்று காண இயலும் இறைவனை. இந்த வினாவிற்கும் விடை எப்போது கிடைக்கும் என்று யாருக்கும் தெரியாது.
3. அரசியல்வாதிகள். ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் மக்கள் மிகப்பெரிய மாற்றத்தை நம்பி வேறொரு மாற்றத்தைத் தேடி, விடையைத் தேடி வாக்களிப்பார்கள். ஆனால் அவர்களுக்கு கிடைத்தது என்னவோ விடை காண முடியாத வினாக்கள் மட்டுமே. இதில் தேர்தல் ஆணையம் என்ற ஒன்று, தேர்தல் காலத்தில் மக்கள் தம் வியாபாரத்திற்காக மருத்துவத்திற்காக பயன்பாட்டிற்காக கொண்டு செல்லும் தொகைகளைப் பறிமுதல் செய்து செய்தியாக ஒளி(லி)பரப்புவார்கள்.!. ஆனால் எந்த அரசியல்வாதியின் எந்த அரசியல் கட்சியின் மொத்த தொகையும் கைப்பற்றப்பட்டதாக வரலாறு இல்லை. இதற்கு விடையும் இல்லை.
No comments:
Post a Comment