Sunday, 28 May 2017

உத்திரகோசமங்கை

“ஆரா அமுதாய் அலைகடல்வாய் மீன் விசிறும்
பேராசை வாரியனைப் பாடுதும்காண் அம்மானாய்!’
என்று இலக்கியங்களில் பாடப்பட்டதைக் கொண்டு இங்கும் கடல் இருந்தது என்பதற்கு சான்றுகள் கிடைக்கின்றன. 
         2.5.17 அன்று பேரூராதீன இளையபட்டம் சுவாமிகளுடன் இராமநாதபுரம் மாவட்டம் உத்திர கோசமங்கை செல்லும் வாய்ப்பு கிடைத்தது
     இராமநாதபுரம் சமசுதானம் இராணியம்மா தலைமையில் இளையபட்டம் அடிகள் அவர்களுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. 
      இறைவன், இறைவிக்கு தனியாக நடனம் ஆடிய தலம் என்று பெரியவர்களால் சொல்லப்பட்டது. 
       உலகச் சிறப்புப் பெற்ற மரகத லிங்கத்தை அருகில் இருந்து தரிசிக்கும் வாய்ப்பு இளையபட்டம் அடிகள் மூலம் எனக்கு கிடைத்தது.
      பின்னர் திருவாசகப் பாடல்களுக்கு பரத நாட்டிய நிகழ்வு அற்புதமான முறையில் நடந்தேறியது. 
    பரதம் வடமொழி அல்லது கர்நாடிக் என்று கூறப்படும் புரியாத மொழிக்குத்தான் என்பதை மாற்றி சிவபுரம் அமைப்பினர் திருவாசகப் பாடல்களுக்கு நடனம் ஆடியது சிறப்பிற்குரியது.
     இரவு உணவு முடிந்து திருக்கோயில் தங்கும் விடுதி அறையில் இளைய அடிகள் ஒய்வெடுக்க நானும் ஓட்டுநர் சம்பத் ம் திருக்கோயில் வளாகத்தில் தரையில் போர்வை விரித்து வானம் பார்த்து நட்சத்திரங்கள் கண்டு பல கதைகள் பேசி உறங்கிப் போனோம்.
            

No comments: