Sunday, 28 May 2017

நாகர்கோயிலில் ஊர் சுற்றிய நிகழ்வு

             ஊர் சுற்றுவது என்பது ஒரு சுகமான அனுபவம். அதுவும் இரயிலில் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து பல நிலையங்களை கடந்து, பல மனிதர்களைப் பார்த்து  அலைதல் தனி அலாதி தரக்கூடியது. கடந்த மே மாதம் 2017 ன் போது நான் தனி ஒருவனாக பல ஊர்களை சுற்றி  வந்தேன். முதலில் நாகர்கோயில் க்கு இரயிலில் சென்று, கோட்டாறு நிலையத்தில் இறங்கி சூடான தேநீர் அருந்தி பின் பத்மநாதபுரம் அரண்மனை சென்று நேர்த்தியான கட்டிட அமைப்பை இரசித்து அதன் பின் சுசீந்திரம் தாணுமலாய சுவாமி ஆலயம் சென்று தரிசனம் செய்தேன். நாகர்கோயில் தமிழகத்துடன் இணைக்கப்பட்டாலும் இக்கோயில் இன்னும் கேரளா நம்பூதிரிகளின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது,. நம்ம ஊரு சிவாச்சாரியார்கள் இதற்கெல்லாம் போராடாமல் நெய் ஊற்றி சாப்பிட்டு மணி அடித்து இறை சேவை புரிந்து வருகின்றனர். பின் இயிலில் கோவை சென்று  அடுத்த நாள் இராமேசுவரம் பிரயாணத்திற்கு தயாரானேன்.

No comments: