இழந்த மழை..
இரவோடிரவாய்
வந்து போய் விட்டிருக்கிறது
மழை.
முன்வாசல் மரங்களின்
இலைகளிருந்து
துளித்துளியாய்ச் சிந்தும்
நீர்த்துளிகள்
நினைவூட்டியபடி விழுகின்றன
நான் தவறவிட்ட தருணங்களை! இப்படிக்கு யாரோ
Post a Comment
No comments:
Post a Comment