நாடு இழந்தவர்களை அகதி என்கிறோம் மொழி இழந்தவர்களை என்னவென்று அழைப்பது?
Tuesday, 27 January 2015
பயணம்
பொங்கல் திருநாள் அன்று காலையில் ஈரோடு தொடங்கி திருச்சி வரை என் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன் . நாமக்கல்தாண்டியதும் வளையபட்டி என்னும் சிற்றூர் அருகே மற்றொரு வாகனத்தில் அண்ணன் தங்கை இருவரும் கவனிக்காமல் வலது புறம் திரும்ப பின் வந்த வாகனம் நிதானம் இல்லாமல் அவா்கள் மீது மோதியது . இருவருக்கும் பல இடங்களில் காயம் ஓடிச் சென்று காப்பாற்றினேன் . நீர் கொடுத்தேன் அவர்கள் இல்லத்திற்குத் தகவல் கொடுத்தேன் . பத்து நிமிடத்தில் வந்தார்கள் தங்களது காரில் அவர்களை அழைத்துச் சென்றனர். யாரும் தவறி கூட என் பக்கம் திரும்பி என்னை விசாரிக்கவில்லை . அவர்கள் நலம் பெறட்டும் என்று நினைத்துக் கொண்டு என் நெடும் பயணத்தை மீண்டும் தொடர்ந்தேன். பயணங்கள் முடிவதில்லை.
அதிகாலை
கண்கள் திறந்து கவனம் கொண்டு காவிரியில் குளிக்க இறங்கினேன் . கால் மட்டும் நனைந்தது . அதிகாலை விடிந்தது . காவிரி விடியுமா?
மறதி
இன்று மட்டும் என்னால் எழுத முடியாது . நீ என்னை விட்டு விலகிச் சென்ற நாள் இது . விரல்கள் சொற்களை மறந்து விட்டன.
நெஞ்சம் அழுகிறது
கவனிக்கவில்லை யாரும் தொலைந்தவனின் செருப்பையும் புறக்கணிக்கப்பட்ட மனம் கொண்டவர்களையும்