நான்கு மணி
ரயில்
நடத்துநர்
இல்லா பேருந்து பயணிகள் ரயில்.
நிலைய நடத்துநரிடம்
பயணச் சீட்டை வாங்கி
நான்கு மணி
ரயிலுக்கு
நாலாம் எண்
கொண்ட நடைமேடைக்கு
நடந்து வந்த
ஊசி பாசி விற்கும் மக்கள்
நடைமேடை நாற்காலியில்
குத்திட்டு அமர்ந்து இருந்தனர்.
நாலணாவிற்கு
இரண்டு ஊசிகள் என
நாள் முழுவதும்
நாற்பது ரூபாய்க்கு
விற்றால்
நாளை நமதே
என மறுநாளும் நிச்சயம்
நான்கு மணி
ரயிலுக்கு இவர்கள் காத்திருப்பார்கள்.
No comments:
Post a Comment