Sunday, 27 November 2016

நீளமான கார்

கோவை ஜீ டி நாயுடு கார் அருங்காட்சியகத்தில் பழமையான கார் முதல் புதுவகையான கார்கள் வரை காட்சிக்கு வைத்துள்ளார்கள்.

பழமையான வண்டி

திருவனந்தபுரம் அரண்மனையில் அரசர்கள் பயன்படுத்திய பழமையான மகிழுந்து..

குளம்

திருவனந்தபுரம் அரண்மனை அருகே கண்ட குளம். அமைதியான  தருணத்தில் அமர்ந்து  இரசித்துப் பார்த்தது.

நாற்காலி

பத்மநாதபுரம் அரண்மனையில் கண்ட நாற்காலி.

பத்மநாதபுரம் அரண்மனை

வணக்கம். சமீபத்தில் சேர நாட்டிற்குச் சுற்றுலா சென்று இருந்தேன். உண்மையில் கடவுளின் தேசம் தான்.
 அதனால் தான் மருத்துவக் கழிவுகளைத் தமிழ்நாட்டில் கொட்டிவிட்டு அவர்கள் நகரைத் தூய்மையாக வைத்துக் கொள்கிறார்கள். திருவனந்தபுரம் , மார்த்தாண்டம் வழியாகத் தமிழ்நாட்டில் நுழைந்தோம். மாநிலங்கள் பிரிப்பின் போது பத்மநாதபுரம் அரண்மனையை மட்டும் கேரளா பராமரிப்பதாக ஒப்பந்தம் செய்து கொண்டு கன்னியாகுமரி, நாகர்கோயிலைத் தமிழ்நாட்டிற்குப் பிரித்து தந்தார்கள். உண்மையில் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால் சத்தியமாக நாம் இப்படி வைத்திருப்போமா? என்பது ஐயமே..
 






 மிக அழகான அரண்மனை. அழகாக திட்டமிட்டுக் கட்டப்பட்ட அரண்மனை.சுற்றிப் பார்ப்பதற்கு குறைந்தபட்சம் 1 மணி நேரத்திற்கும் மேல் ஆகிறது. தமிழ்நாட்டு அரசர்கள் வாழ்ந்த அரண்மனைகள் மணல் திட்டாகத் தான் உள்ளது. கலைப் பொருட்களைப் பராமரிப்பதில் கேரளா அரசு மிகவும் ஆர்வம் காட்டுவது வரலாற்றுப் பிழை ஏற்படாமல் இருக்க பிற்காலத்தில் உதவும்.                                                  
                                                                                   அன்புடன்
                                                                                     சங்கரன்.
             

Tuesday, 11 October 2016

வருகை



                                             வருகை
மன்னார் வளைகுடாவில் வசித்து
ராஜிவ் செயவர்த்தனே ஒப்பந்தத்தால் தமிழகத்தில் கரித்துண்டுகள் கொண்டு சுருக்கம் போக்கும் தமிழன்
கோடி ஏக்கர் கொண்ட கடற்பரப்பை  எந்த தன்னம்பிக்கையோடு
கடந்து வந்தான்.,
துணிகளின் சுருக்கம் போக்க………

நான்கு மணி ரயில்



                                             நான்கு மணி ரயில்

நடத்துநர் இல்லா பேருந்து பயணிகள் ரயில்.
நிலைய நடத்துநரிடம் பயணச் சீட்டை வாங்கி
நான்கு மணி ரயிலுக்கு
நாலாம் எண் கொண்ட நடைமேடைக்கு
நடந்து வந்த ஊசி பாசி விற்கும் மக்கள்
நடைமேடை நாற்காலியில் குத்திட்டு அமர்ந்து இருந்தனர்.
நாலணாவிற்கு இரண்டு ஊசிகள் என
நாள் முழுவதும்
நாற்பது ரூபாய்க்கு விற்றால்
நாளை நமதே என மறுநாளும் நிச்சயம்
நான்கு மணி ரயிலுக்கு இவர்கள் காத்திருப்பார்கள்.

நனைந்த வார்த்தைகள்



                                   நனைந்த வார்த்தைகள்
 
 நானிருந்த பொழுதில் நகம் மட்டும் ஆயுதமாய் என்னிடம் இருந்தது.
நாளொரு பொழுதில் நான் என் விரல்களை இழக்கக் கூடும்.
நாளை எனக்கு நிச்சயம் என்றுநான் நம்பவில்லை.
நான் நீண்ட நேரம் யாருக்கு காத்திருக்கிறேன்.
நானாக நான் இருக்கும் என்னை இச்சமூகம் கைவிட்டது.
நனைந்த வார்த்தைகளை எல்லோரும் தருகின்றனர்.
நாங்கள் நனைந்த போது எங்களுக்கு யாரும் குடை சுமக்கவில்லை.
நனைந்த வார்த்தைகளில் பல நேரங்களில் நாங்கள் குளிராலும் பாதிக்கப்பட்டோம்.
நனைந்த வார்த்தைகளில் நஞ்சும் உண்டு.
நனைந்த வார்த்தைகளில் புனைவும் உண்டு.
எல்லோரும் நனைந்த வார்த்தைகளைத் தருகிறார்கள்.
சிலர் எங்களின் நனைந்த வார்த்தைகளைத் திருடுகிறார்கள்.
எங்களின்  நனையாத வாழ்க்கையைப் பறித்து விட்டு…
எங்களுடன் நனைய மறுக்கும் மதம் சாதி இனம் என
எதுவும்  எங்களுடன் நனையவில்லை.எல்லாவற்றையும் இழந்து  காடும் வீடும் மானமும் இழந்து நனைகிறோம்.
அடையாளம் இல்லாத எங்களுக்கு எந்த அடையாள அட்டையும் இல்லை.
பறவையைப் போல் திரிகிறோம்.ஏதேனும் ஒருநாள் மடிவோம்.


பொதுவுடைமை



நடந்தேன்.
ஒற்றையடிப் பாதையில் ஒரு ஓரமாய் நடந்தேன்.
துளிர் விட்ட மரத்தில் சிறிது நேரம் களைப்பாற்றி விட்டு
பாதி நகரமான எனது கிராமத்திற்கு நடந்தேன்.
சோளம் கொத்தித் தின்ற சிட்டுக்குருவிகளைக் காணாமல்
கண்ணீர் விட்டேன்.
மறுநாள் பாதி நகரமான எமது கிராமத்தை விட்டு
ஒற்றையடிப் பாதையில்
நடந்தேன்.
ஒற்றையடிப்பாதையில் இரண்டு பேர் துளிர் விட்ட மரத்தை
வெட்டிக் கொண்டிருந்தனர்.
ஏனென்று கேட்டேன்,
ஒற்றையடிப் பாதையை இரு வழிச் சாலையாக மாற்ற                                                 இந்த மரம் இடைஞ்சல் என்றனர்.
எல்லோரும் பயன் பெற பொதுவுடைமை என்றனர்.
தனியுடைமை தள்ளாடிய படி மரம் வீழ்ந்தது ,எனது  பாதி நகரமான கிராமம்  மீதியும் நகரமானது.
நடந்தேன்.

Wednesday, 21 September 2016

திருஈங்கோய்மலை

திருஈங்கோய்மலை களப்பயணம் .    செங்குத்தானப் படிக்கட்டுகள் கால்வலியுடன் சென்று மனவலிமை பெற்று திரும்பிய தலம்.அன்புடன் சங்கர்.

Friday, 10 June 2016

பொதுவுடைமை மரம்



                                                    கவிதைகள்
                                                  பொதுவுடைமை
                          
நடந்தேன்.
ஒற்றையடிப் பாதையில் ஒரு ஓரமாய் நடந்தேன்.
துளிர் விட்ட மரத்தில் சிறிது நேரம் களைப்பாற்றி விட்டு
பாதி நகரமான எனது கிராமத்திற்கு நடந்தேன்.
சோளம் கொத்தித் தின்ற சிட்டுக்குருவிகளைக் காணாமல்
கண்ணீர் விட்டேன்.
மறுநாள் பாதி நகரமான எமது கிராமத்தை விட்டு
ஒற்றையடிப் பாதையில்
நடந்தேன்.
ஒற்றையடிப்பாதையில் இரண்டு பேர் துளிர் விட்ட மரத்தை
வெட்டிக் கொண்டிருந்தனர்.
ஏனென்று கேட்டேன்,
ஒற்றையடிப் பாதையை இரு வழிச் சாலையாக மாற்ற                                                 இந்த மரம் இடைஞ்சல் என்றனர்.
எல்லோரும் பயன் பெற பொதுவுடைமை என்றனர்.
தனியுடைமை தள்ளாடிய படி மரம் வீழ்ந்தது ,எனது  பாதி நகரமான கிராமம்  மீதியும் நகரமானது.
நடந்தேன்.
                                                                                                     பொஇச…