Monday, 18 July 2022
கவிஞர் புவியரசு
Monday, 30 May 2022
நான் விரும்பும் தலைவர் - வ.உ. சிதம்பரனார்
நான் விரும்பும் தலைவர் - வ.உ.சிதம்பரனார்
குறிப்புச் சட்டகம்
முன்னுரை
பிறப்பும் இளமையும்இளமையும்
தேசவிடுதலைப் பணிகள்
இவரது சேவைகள்
முடிவுரை
முன்னுரை
இந்திய சுதந்திர போராட்டத்திலே தனது அளப்பரிய தியாகத்தினால் மக்கள் மத்தியில் அதிகம் அறியப்பட்டவர்அறியப்பட்டவர் வ.உ சிதம்பரனார் ஆவார். இவரது வாழ்க்கை , இவரது சேவை , இவரது போராட்டங்கள் இக்கட்டுரையில் கட்டுரையில் நினைவுகொள்ளப்படுகிறது.
பிறப்பும் இளமையும்இளமையும்
வ.உ.சிதம்பரனார் தமிழ்நாட்டின் தூத்துக்குடியிலுள்ள “ஒட்டப்பிடாரம்” எனும் இடத்தில் 05 செப்டம்பர் 1872 ஆம் ஆண்டு பிறந்தார்.இவர் தனது இளமை முதலே சிறந்த கல்வி அறிவும் , பிற நல்ல குணங்களை உடைய மனிதராக விளங்கினார். வலியவர்களால் எளியவர்களுக்கு பாதிப்பு வரும் போதெல்லாம் இவர் மனம் கலங்கி அவர்களுக்கு உதவும் குணம் உடையவர்.
திலகர் போன்ற தேசவிடுதலைப் போராளிகளைக் கண்டு ஈர்க்கப்பட்டு 1905 இல் இந்திய காங்கிரஸில் தன்னை இணைத்துக்க் கொண்ட இவர் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடத் துவங்கினார்.மிகச்சிறந்த தனது அறிவாற்றலால் ஆங்கிலேயர்களுக்கு நெருக்கடி கொடுத்தார். இவரது வாழ்க்கைப் பயணம் முழுவதும் போராட்டமாகவே விளங்கியது.
தேசவிடுதலைப் பணிகள்
ஆங்கில அரசு இந்தியர்களை எல்லா வகையிலும் அடிமைப்படுத்துவதை கண்டு கொதித்த இவர், ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெபெனிக்கு எதிராக 1906 இல் “சுதேசி ஸ்டீம் நேவிகேஷன்” நிறுவனத்தை இவர் துவங்கினார்.
“எஸ். எஸ் கார்னியோ” “எஸ். ஏஸ் காவோ” என்ற இரு கப்பல்களை வாங்கி ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியர்களின் எதிர்ப்பைக் காட்டினார். அதனால் கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்பட்டார். இவரது போராட்டங்களைக்க் கண்டு கோபமடைந்த ஆங்கில அரசு இவர் மீது தேச துரோக குற்றம் சுமத்தி இவரை சிறையில் அடைத்தது.அந்தத் தீர்ப்பில் நீதிபதி ஃபின்ஹே, சிதம்பரனாரின் பிரசங்கத்தையும் , பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்" என்று எழுதினார்.
கோயமுத்தூர் சிறைச்சாலையில் இருந்த போது ஆங்கிலேய அரசு இவரை செக்கிழுக்க வைத்து துன்புறுத்தியது. “மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?” என்று அவரின் உற்ற நண்பர் பாரதியார் மனம் நொந்து பாடினார்.
இவரது சேவைகள்
இவரது சேவைகள் காலம் கடந்தும் வாழ்கின்றது. அடிமைப்பட்டு கிடந்த தேசத்துக்காக வ.உ.சி போராடினார். வசதி இல்லாத மக்களுக்கு சட்ட உதவிகளையும் இன்னும் பிற உதவிகளையும் எந்தப் பிரதிபலனும் பாராமல் செய்தார். சிவஞானபோதம், திருக்குறள் போன்ற நூல்களுக்கு உரை எழுதி தமிழ்ப்ப்பணி ஆற்றினார். தனது சுயசரிதை வாயிலாக தேசத்து மக்களை உத்வேகப்படுத்தினார். இவர் தனது மன நிலைப்பாட்டை
“என் மனமும் என் உடம்பும் என் சுகமும் என் அறம் என் மனையும் என் மகவும் என் பொருளும்- என் மதியும் குன்றிடினும் யான் குன்றேன். கூற்றுவனே வந்தாலும் வென்றிடுவேன் காலால் மிதித்து”
என்று மிகுந்த மன வைராக்கியம் உடைய மனிதராக வாழ்ந்து காட்டியவர் இவராவார். தம் வாழ்வின் இறுதி நிமிடங்களில் , மகாகவி பாரதியின் "என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்? " என்கிற வரிகளைக்கேட்டுக்கொண்டே கண்ணீர் கசிய 1936 நவம்பர் 18 ஆம் நாள் உயிர் துறந்தார்.
முடிவுரை
வ.உ.சி அவர்களைப் பெருமைபடுத்தும் வகையில் பல தொண்டு நிறுவனங்களும் , பாடசாலைகளும், நூலகங்களும் இவரது பெயரில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. வ.உ.சிதம்பரனார் போன்ற பெரும் தலைவர்களுக்கு எம்மால் முடிந்த நன்றிக் கடன் என்னவெனில் அவர்களின் விடுதலை உணர்வுகளை எந்நாளும் மறவாமல் இருப்பதே ஆகும்.
Friday, 21 January 2022
வேலுநாச்சியார்
நான் தான் தமிழ் நாட்டின் வீரமங்கை வேலுநாச்சியார்.
பலரும் அறிந்த
ஜான்சிராணி என்னும் மாபெரும் வீரப் பெண்மணி தோன்றுவதற்கு நூறு வருடங்களுக்கு முன்பே பரங்கியரை எதிர்த்த வீரத்தின் விளை நிலமாம் தமிழ் மண் பெற்றுத்தந்த வீரத் தமிழச்சித்தான் இந்த வேலுநாச்சியாராகிய நான்…
பெண்ணாக நான் பிறந்தாலும் ஆண் வாரிசாகவே வளர்க்கப்பட்டேன். கல்வி, விளையாட்டு, சிலம்பம், வாள்வீச்சு, குதிரை ஏற்றம், யானை ஏற்றம் என அனைத்துத் திறன்களையும் கற்றுத் தேர்ந்தேன்.. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், பிரெஞ்சு, உருது எனப் பல மொழிகளையும் கற்றேன்.
சிவகங்கைச் சீமைக்கு
சீராய் புகுந்த மகிமை நான்.
சிவகங்கை ராஜாவுக்கு
சீதனமாக... சீர் எழிலாக
மன்னர் முத்துவடுக நாதருக்கு ராணியாக...
பின்னர் ஏணியாக-அவர் குலம் காக்கும்
கேணியாக
குணங் காக்கும் தோணியாக
அவரைச் சுற்றி தேனீயாக...
அவர் பயிற்சியிலும்
முயற்சியிலும் பங்கு
கொள்ளும் ராணியாகத் திகழ்ந்தேன்.
திப்பு சுல்தானின் 5000 படைவீரர்களின் உதவியோடு இழந்த சிவகங்கைச் சீமையை மீட்டெடுத்தேன். ஏற்றமிகு ஆட்சி புரிந்தேன்.
ஆங்கிலேயர்கள் ஒருமுறை எங்கள் அரண்மனைக்கு வரி கேட்டு வந்த போது நான் அவர்களுக்குச் சொன்ன பதிலை இப்போது நம் இந்திய நாட்டின் 75 வது குடியரசு தின நாளில் உங்களுக்கு நினைவு படுத்துகிறேன்.
எங்கள் மண்.
எங்கள் நாடு.
எங்கள் மக்கள்.
இங்கிருக்கும் ஒவ்வொரு துரும்பும் எங்கள் உழைப்பைச் சொல்லும்.
எங்கள் மக்களின் உழைப்பாலும் வியர்வையாலும் உதிரத்தாலும் உருவானது எங்கள் நாடு.
இங்கே ஓடுகின்ற நதிகளும்,
நிற்கின்ற மரங்களும்,
வீசுகின்ற காற்றும்,
அடிக்கின்ற வெயிலும் பெய்கின்ற மழையும்
எங்கள் மண்ணின் பெருமையைச் சொல்லும்...
வீரம் எங்களுக்கு விளையாட்டு...
விவேகம் எங்கள் தாலாட்டு...
அன்புக்கு எங்கள் தலை குனியும்...
ஆணவம் கொண்டோர் தலை எங்கள் மண்ணில் உருளும்.
எங்கிருந்தோ வந்து எங்கள் பூமியில் பிழைக்க வந்த உங்களுக்கு, எங்களிடம் வரிகேட்க உரிமையும் இல்லை...
அதில் ஒழுக்கமும் இல்லை...
அதனால் எங்கள் மன்னர் சார்பிலும் எங்கள் மக்கள் சார்பிலும் சொல்கிறேன். வரி என்று எங்களிடம் கேட்டு வந்தது இதுவே இறுதியாக இருக்கட்டும்.
இனிமேலும் இது தொடர்ந்து வந்தால் வரி கேட்டு வருபவனுக்கு வாயே இருக்காது!
இது எச்சரிக்கை மட்டுமல்ல.
எங்கள் இறுதி அறிவிப்பும் இதுதான்..."
தமிழர் தாயகத்தை அன்னியரிடம் இருந்து மீட்கப் படை திரட்டி போராடிய முதல் பெண் வீராங்கனை நானே!
இந்த மண்ணும் விண்ணும் உள்ள வரை வேலு நாச்சியாராகிய எனது வீரமும் தீரமும் வரலாற்றுப் பக்கங்களில் இருக்கும்.
எனது வரலாறு காலத்தால் அழிக்கப்படாத வீர வரலாறு…
வாழ்க பாரதம்
வாழ்க நம் தாய் நாடு!