இருந்தமிழே உன்னால் இருந்தேனே !
தமிழகத்தில்1953-ல் முதன் முதலில் தமிழ் முறையில் வழிபாடுகளை நெறிப்படுத்தி , வழிபடுத்தி நடைமுறைப் படுத்தியவர் பேரூரடிகளார் ஆவார். அவரின் வாழ்வில் 100 சம்பவங்களை இங்கு காண்போம்.
1.1926 – ஆம் வருடம் குரோதன ஆண்டு சிவராமசாமி அடிகளாருக்கும் கப்பிணியம்மாளுக்கும் நான்காவது நன்மகவாய் கோயமுத்தூர் முதலிபாளையம் கிராமத்தில் அவதாரம் செய்தார்கள் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார்.
2.பேரூரடிகளார் ஆன்மீக கல்வியை கற்றுவித்துதான் ஆரம்பக்கல்வியைக் கற்றார்கள். இளம் வயதிலேயே சிரவை ஆதீனம் இராமானந்த சுவாமிகளின் அனுக்கத் தொண்டராய், சீடராய், மாணவராய்,புலவராய் என பல்வேறு பரிணாமங்களை தம் இருபது வயதிற்குள் அடைந்தார்.
3. சிரவை ஆதினம் மூன்றாவது சன்னிதானம் தவத்திரு சுந்தர சுவாமிகளின் நெருங்கிய தோழராய், சிரவை திருமடத்தில் வளர்ந்து பிற்காலத்தில் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகள், தவத்திரு சுந்தர சுவாமிகள் இருவரும் கொங்கு நாட்டு இரட்டையராய், சைவத்தமிழ் சமூகத்தின் பாதுகாவலராய் திகழ்ந்தனர்.
4. பேரூரடிகளார் அவர்கள் தம் 1947- ஆம் ஆண்டு 19ம் அகவையில் கோயமுத்தூர் மாவட்டத்திலிருந்து தமிழ்கல்வி பயில்வதற்காக பழைய தென்னாற்காடு மாவட்டம் மயிலம் திருமடக் கல்லூரிக்கு சென்று படித்தார். விழுப்புரம் வரை இரயிலில் சென்று விழுப்புரத்திலிருந்து வரை நடை பயணமாகவே சென்று வந்த நிகழ்வு குறிப்பிடத்தக்கது.
5. 1948-ஆம் ஆண்டு திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழி வழி திருப்பேரூராதின சன்னிதானம் தவத்திரு ஆறுமுக சுவாமிகளின் அருளாணையின் வண்ணம் பேரூராதின இளவரசராக பணியாற்றத் தொடங்கினார்.
6. 1950-ஆம் ஆண்டு பேரூரடிகளார், மயிலம் 18-ம் பட்டம் சுவாமிகள் தலைமையில் வீர சைவ தீக்கை வாங்கி பேரூராதீன இளவரசு சுவாமிகளாக முறைப்படி பட்டம் ஏற்றார்கள்.
7.1952-ம் ஆண்டு தம் 25வது அகவையில் பேரூராதீன குருமுதல்வர் தவத்திரு சாந்தலிங்கர் பெயரில் ஒரு பள்ளியை ஆரம்பித்தார். பள்ளி ஆரம்பித்த மறு வருடம் அப்பள்ளியின் மாணவர் எண்ணிக்கை 232 என்பது அன்றைய கால கட்டத்தில் நினைத்துப் பார்க்கப் பட வேண்டிய ஒன்று.
8. 1953-ம் ஆண்டு தம் 26-வது இளவயதில் கொங்குநாடே வியக்கும் வகையில் ‘’ தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி ‘’ ஒன்றை ஆரம்பித்து கொங்கு நாட்டு மக்களின் தமிழ்க்கல்வி கனவை நனவாக்கியவர்.
9. ‘’ தமிழோடு இசைப்பாடல் மறந்தறியேன் ‘’ எடும் அருள் வாக்கிற்கு ஏற்ப எல்லோரும் அச்சப்பட்டு நின்றபோது பேரூர் திருக்கோவிலில் குன்றக்குடி அடிகளாருடன் தமிழ்மொழி வழிபாட்டை நடைமுறைக்கு கொண்டு வந்த சகாப்த சாதனையாளர். 10. 1954-ம் ஆண்டு கணபதி கிராமத்தில் அருள்மிகு விநாயகப் பெருமான் திருக்கோவில் திருக்குட நீராட்டு எனும் கடவுள் மங்கலம் நிகழ்வை தமிழ்த் திருமுறை நெறியில் செய்து தமிழ் கூறும் நல்லுலத்தை திரும்பி பார்க்கச் செய்தார்.
11. சென்னைப் பல்கலைக்கழக சின்டிகேட் உறுப்பினராய் அடிகளார் இருந்த போது தமிழ்அல்லாத பிற துறையினர் தமிழ் படிக்க வேண்டியதில்லை எனும் தீர்மானம் நிறைவேற இருந்தபோது,பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து அத்தீர்மானம் வராமல் தோல்வி பெறச் செய்து, இன்று அனைத்து தமிழக பல்கலைக்கழகங்களிலும் பிற துறை மாணவர்களும் தமிழ் படிப்பதற்கு காரணமாய் திகழ்பவர்.
12. சிறையில் கைதிகளை மன மாற்றம் செய்து மாற்றுச் சமயங்கள் மதமாற்றம் செய்த போது அடிகளார் தமிழகத்தின் சிறைகளுக்குச் சென்று தமிழ்ச் சமய பண்பாட்டை கற்பிக்க அரசிடம் புதிய ஆணை வாங்கினார். அடிகளார் அவர்கள் தமிழகத்தின் எந்த சிறைச்சாலைக்குச் சென்றாலும் ஏன்? என்ற கேள்வி இல்லாமல் கதவுகள் திறக்கப்படும்.
13. கோயம்புத்தூர் மத்திய சிறையில் இருந்த ‘’வி.பி.பால தண்டாயுதம் ‘’ எனும் தீவிர இடதுசாரி இயக்கத் தலைவர் விரும்பி பேரூரடிகளாரிடம் சைவ சித்தாந்தம் கற்றார். அடிகளாரிடம் பயின்ற பிறகு ஏற்பட்ட மாற்றத்தின் அடிப்படையிலேயே இவரை தமிழக அரசு விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.
14. கோவை மத்திய சிறையில் வ.உ. சிதம்பரம் பிள்ளை ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் செக்கிழுத்தார். அதன் பின் அச்செக்கு முறையான பராமரிப்பின்றி முள்வெளிக்குள் இருந்தது, பேரூரடிகளார் அவர்கள் அதனை இனங்கண்டு மா.பொ.சி.யிடம் தெரிவிக்க அதன் பின்னரே வருடந்தோரும் வ.உ.சியின் நினைவு தினத்தில் நினைவு கூறப்படுகிறது.
15. அடிகளார் அவர்கள் தமது பூர்வசிரம கிராமத்தில் தம் குரு முதல்வரின் பெயரில் ஓர் பள்ளி தொடங்கி , அக்கிராமத்தின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் சுற்று வட்ட கிராம மக்களுக்கும் கல்வியின் ஒளியாய் திகழ்ந்தார்.
16. தமிழக அரசு குன்றக்குடி பெரிய அடிகளுக்கு சட்ட மேலவை உறுப்பினர் பதவி தர முன்வந்த போது குன்றக்குடி அடிகளார் பேரூரடிகளாரிடம் கேட்டு சொல்கிறேன் என்று அனுமதி பெற்றே மேலவை உறுப்பினர் ஆனார்.
17. ஆதீனங்கள் மக்களை விட்டு இருந்த போது பேரூரடிகளாரின் ஆலோசனையின் வண்ணம் தமிழக தெய்வீகப் பேரவை தோற்றுவிற்கப்பட்டு அனைத்து ஆதீனங்களும் ஓர் குடையின் கீழ் செயல்படும் அமைப்பாய் மாற்றினார். காலப்போக்கில் இந்திய அரசு இவ்வமைப்பை எமர்ஜென்சி காலத்தில் நாடச்செய்த்து குறிப்பிடத்தக்கது.
18. தவத்திரு ஆறுமுக சுவாமிகளின் பரிபூரணத்தை தொடர்ந்து தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்கள் பேரூராதீன குருமகா சன்னிதானமாக 1967-ஆம் ஆண்டு பதவி ஏற்றார்கள். 19. தந்தை பெரியார் குன்றக்குடி சென்ற போது திருநீரு அணிந்த சம்பவமே எல்லோர்க்கும் தெரிந்த்து. ஆனால் ஈரோட்டில் பெரியார் மருத்துவமனையில் இருந்த போது அவரைப்பாக்க அடிகளார் சென்றபோது ‘’ சன்னிதானம் வந்திருக்காங்க ‘’ என்று திருநீறு வாங்கியது பேருரடிகளாரிடம் மட்டுமே.
20. பேருரடிகளார் தாம் துவங்கிய கல்லூரியில் பட்டம் பெற்ற மாணவர்களை வைத்து ஊர்தோறும் சென்று திருக்குறள் பாடத்தை நடத்த இரு ஊர்திகளை வாங்கி கொடுத்து தன் பயணத்தை மாட்டு வண்டியில் தொடர்ந்தார்.
21. இந்திய அரசு சீனப் போருக்கு பிறகு திருக்கையிலை செல்லாம் என அறிவித்த போது தமிழகத்தின் சார்பில் இமயமலை சென்ற 7 பேரில் பேரூரடிகளாரும், திருப்பனந்தாள் முத்துகுமாரசாமிகளும், ஈரோடு மீனாச்சி சுந்தரமும் முக்கியமானவர்கள்.
22. அகில இந்திய அளவில் விசுவ இந்து பரிசத் இயக்கத்தின் இருந்து மிகவும் முக்கியமானவராக திகழ்ந்ததால், தமிழக அரசு இவருக்கு எம்.ஜி.ஆர் ஆட்சிகாலத்தில் காவல்துறை பாதுகாப்பு அளிக்க முன்வந்தும் மறுத்தார்.
23.பெருந்தலைவர் காமராசர் மதிய உணவுத் திட்டத்தை பேரூரடிகளாரின் கல்வி நிலையங்களில்தான் முதன் முதலில் தொடங்கினர். 24. பி.டி.ஜாட்டி குடியரசுத் தலைவராய் இருந்த போது அவரின் வருகைக்காக பேரூரடிகளார் சார்பில் மாவட்ட கலெக்டெரிடம் அனுமதி கேட்க கலெக்டர் மறுத்து விட்டார். இத்தவகலை பி.டி.ஜாட்டியிடம் தெரிவித்த போது, நான் பேரூர் திருமடம் செல்கிறேன் என அவரே அறிவிக்க, கலெக்டர் பயணத்திட்டங்களை அடிகளாரிடம் தெரிவிக்க செய்தார்.
25. பி.டி.ஜாட்டி பேரூராதீன நிகழ்ச்சிக்காக தமிழகம் வந்தபோது ஆளூநர் ஷா அவர்களும், தமிழக முதல்வர் அவர்களும் வரவேற்க, ஆளூநர் தன் மனைவியுடன் பேரூராதீன விழாவில் கலந்து கொண்ட போது தமிழக அரசியல் வட்டாரம் உற்று க் கவனித்தது.
26. தவத்திரு சாந்தலிங்கர் அருள்வரலாறு, பேரூராதீனம், தமிழ்நெறி, சாந்தலிங்கரின் வழிபாட்டு நெறி, எனப் பல நூல்களையும் ஆயிரத்திற்கு மேற்பட்ட கட்டுரைகளையும், சுமார் எட்டாயிரத்திற்கு மேற்பட்ட வெண்பா பாடல்களையும் இயற்றியும் எழுதி வருபவர் பேரூரடிகளார்.
27. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பேரூராதீனம் வருகை புரிந்து தங்கி தமிழ்கல்லூரியில் உரையாற்றி அடிகளாரை வணங்கி சென்று உள்ளார்.
28.நாத்திக அமைப்பினரும் பேரூரடிகளின் தமிழ்பற்றைக் கண்டு அளவிட முடியாத அன்பை வெளிப்படுத்தினர். தோழர் ஜீவானந்தம் பேரூராதீனம் வந்து அடிகளாரைக் கண்டு வணங்கி அளாவளாவியப் பெருமைக்கு அடிகளார் சொந்தக்காரர்.
29. அப்பர், சம்பந்தர், மாணிக்கவாசகர்,சுந்தரர் என நால்வர் பாடல் பெற்ற தலங்கள் அனைத்திற்கும் சென்று வந்தவர் பேரூரடிகளார் மட்டுமே. திருப்பனந்தாள் சுவாமிகள் கடல் கடந்து இரு தலங்கள் இருப்பதால் 282 தலங்களை மட்டுமே தரிசித்துள்ளார்கள்.
30. உலகின் ஏழு கண்டங்களுக்கு சென்று இந்து சமய எழுச்சியை எற்படுத்தியவர் அடிகளார் ஒருவரே.மடாதிபதிகளில் மக்களிடம் நெருங்கி பழகி வருபவர் பேரூரடிகளார் மட்டும
31. தமிழக திருக்கோயில்களில் சமஸ்கிருதத்தில் மட்டுமே வழிபாடுகள் நடைமுறையில் இருந்த போது பேரூரடிகள் பல்வேறு போராட்டங்களை நடாத்தி தமிழக அரசின் சார்பில் கோயில்களில் தமிழில் வழிபாடு நடத்தப்படும் என சட்ட மன்றத்திலேயே அறிவிக்கச் செய்தவர்.
32. தமிழக அமைச்சர் கண்ணப்பன் பேரூராதீன விழாவிற்கு வருகை தந்தார். அப்போது அவர்தான் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர். விழாவில் பேரூரடிகளார், கிருபானந்த வாரியர் என பலரும் தமிழ்மொழி வழிபாட்டின் நிலையை எடுத்துரைக்க, அமைச்சர் கண்ணப்பன் வேறு வழியின்றி சர்ச்சைக்குறிய அந்த நடைமுறையை அமல்படுத்த, தமிழில் வழிபாடு செய்யப்படும் என தமிழகத்தின் அனைத்து கோயில்களிலும் நடைமுறைப் படுத்தப்பட்டது.
33. தமிழ்குடிமகன் அமைச்சராக இருந்த போது பேரூரடிகளாரை தலைவராகக் கொண்டு தமிழ் மந்திரங்களை தொகுக்க ஆணை பிறப்பித்தார்.
34. தமிழ்மொழி வழிபாட்டை நடைமுறை படுத்தக்கோரி பேரூரடிகளார் போராடிய போது குமரிஆனந்தன் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டார்.
35.நீதிபதி,ஏ.கே.ராஜன் தன் முதல் முதலில் தமிழ்மொழி வழிபாட்டின் சிறப்பையும், பேரூரடிகளாரின் சிறப்பையும் தன் நூலான குறிப்பிட்டுள்ளார்.
36. பெரியார் தனது குடியரசு இதழ் தொடக்க விழாவிற்கு 2.5.1925 ஞானியர் அடிகள் அவர்களை அழைத்தார். அதனை நினைவு கூர்ந்து கலைஞர் கருணாநிதி அவர்கள் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவிற்கு பேரூரடிகளாரை தலைமை தாங்க அழைத்தார்கள்.
37. மண்டக்காடு இனக்கலவரம் எழுந்த போது பேரூரடிகளாரும், குன்றக்குடி அடிகளாரும் இணைந்து முறியடித்தனர். அதற்காக தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் பேரூரடிகளின் பணிச்சிறப்பை வியந்து போற்றியது சட்டமன்ற குறிப்பேட்டில் பதிவாகியுள்ளது.
38. உலக சைவப் பேரவை எனும் அமைப்பை தவத்திரு சிவந்தி அடிகளுடன் பேரூரடிகளாரும் இணைந்து ஆரம்பித்தார். உலகம் முழுவதும் உள்ள சைவ சமயத்தினரை ஒன்று திரட்டி 2010-ஆம் ஆண்டு வரை 12 மாநாடுகளை நடாத்தியவர் பேரூரடிகளார் ஆவார்.
39. அமெரிக்க தாமரைக் கோவில் நிறுவனர் தவத்திரு சச்சிதானந்த சுவாமிகளின் ஜோதி வழிபாடு கோயமுத்தூர் கொடிசியாவில் நடைபெற்ற போது நடிகர் ரஜினிகாந் பல ஆயிரம் மக்கள் முன்னிலையில் பேரூரடிகளாரிடம் விழுந்து ஆசிவாங்கினார். 40. தமிழுக்காகவும், தமிழ்இனத்திற்காகவும் ,சமயத்திற்காகவும் எந்த சமரசமும் அரசாங்கத்தையே எதிர்ப்பதால் பேரூரடிகளாரை ‘’ தென்னாட்டு தலாய்லாமா ‘’ என்று கிருபானந்த வாரியார் வியந்து போற்றியுள்ளார்.
41. கோயமுத்தூர் மாநகர காவல் தெய்வம் என்றழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் ராஜாகோபுரம் அமைக்க பேரூரடிகளார் முன்வைத்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு அடிகள் ஆலோசனேயின் வண்ணம் ஏழுநிலை கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. 42. நாயக்கர் ஆட்சிக்காலத்தில் பழனி திருக்கோயிலில் புகுத்தப்பட்ட சமஸ்கிருத மந்திரம் பேரூரடிகளாரின் இடைவிடாத தொடர் போராட்டம் காரணமாக திருக்கோயில் இரவு பூஜையின் போது தமிழ் மந்திரங்கள் ஒலிக்கச் செய்த சாதனையாளர் பேரூரடிகளார். 43. மருதமலை திருக்கோவிலில் பேரூரடிகளார் கோவை மில் தொழிலாளிகளை ஒன்று திரட்டி படிகளை சீரமைத்து மக்கள் வழிபட வழியமைத்தவர் பேரூரடிகளார் ஆவார். அடிகள் பணியினை வியந்து தேவர் பிலிம்ஸ் சின்னப்ப தேவரும் இணைந்து பல பணிகளை செய்தார்.
44. பேரூரடிகளார் தமிழ்ப்பணியையும், ஆன்மீகப்பணியையும் தொடர்ந்து செய்தாலும் , தினமும் ஆதீன தோட்டத்தில் விவசாய பணிகளை முன்வந்து முன்னின்று விவசாயப் பணிகளில் தம்மை ஈடுபத்திக்கொள்கிறார்.
45. அமைச்சர் தமிழ்குடிமகன் பேரூரடிகளாரை சந்திக்க வந்த போது பேரூரடிகளார் மாடுகளை ஏர்பூட்டி உழவுத்தொழில் செய்து கொண்டிருந்த காட்சியை தமிழ்குடிமகன் வியந்து பல மேடைகளில் பாராட்டியுள்ளார்.
46. அரசு விழாவிற்கு வருகை புரிந்த காமராசர் அவர்கள் பேரூரடிகளாரின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க பேரூராதினத்திலேயே தங்கினார். காமராசர் தமிழக மடங்களிற் தங்கியது இல்லை ஆனால் பேரூராதீனத்தில் தங்கியுள்ளார்.
47. பூமிதான இயக்கத் தலைவர் வினோபா அவர்கள் ஆந்திரப் பயணத்தை முடித்துக் கொண்டு வந்தபோது பலர் வினோபாவை தேடிச் சென்று சந்தித்தனர். ஆனால் வினோபா அவர்கள் தேடிவந்து சந்தித்தது பேரூரடிகளாரை மட்டுமே.
48 . பெண்களுக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டு வந்த காலத்தில் , பல தரப்பினரின் எதிர்ப்பை மீறி பெண்களுக்கு வேள்வி வழிபாட்டு களத்தினையும் , புதுக்கோட்டை திலகவதியார் திருவருள் ஆதீனத்திற்கு பெண்களை தலைமை பொறுப்புக்கும் கொண்டு வந்தவர் பேரூரடிகளார்.
49. பெரியார் அவர்கள் கோவை வருகை புரிந்த பொது தமது வாகனத்தில் மக்களை சந்தித்தார் . அப்போது பெரியாரின் தொண்டர் தமது குழந்தையை பெரியாரிடம் நீட்டி பெயர் வைக்க சொன்னார் . பெரியார் அவர்கள் ‘’ இராமசாமி ‘’ என பெயர் சூட்டி, இது எனது பெயர் மட்டுமல்ல பேரூரடிகளாரின் பெயர் என்றார்.
50. இலங்கையில் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற போது பேரூரடிகளார் அவ்விழாவிற்கு செல்ல ஆயத்த ஏற்பாடுகள் நடந்தன. தமிழக அரசு அடிகளாருக்கு பாதுகாப்பிற்காக காவல்துறையினரை உடன் அனுப்ப இருந்தநு. அப்போது பேரூரடிகளார் , இலங்கை, எம் தமிழ்நாடு . அவர்கள் தமிழ் புலிகளாக எம்மை பாதுகாப்பர். ஆகையால் பாதுகாப்பு வேண்டாம் என மறுத்தார் . அதன்படியே இலங்கை அரசு மாநாட்டை சீர்குலைத்து கலவமாக்கிய போது விடுதலைப் புலிகள் அமைப்பினர் தான் பேரூரடிகளாரை காப்பாற்றினார் என்பது நினைவு கூறத்தக்கது.
Friday, 31 August 2018
பேரூர் குருமகாசன்னிதானம்
Subscribe to:
Posts (Atom)