பேரூர் ஆதீனம் ஐந்நூறு வருடப் பழமை மிக்க ஆதீனம். திருக்கயிலாய மரபில் வருவது இவ்வாதீனம். தவத்திரு சாந்தலிங்கர் இவ்வாதீனத்தின் குரு முதல்வர் .கோவை நகரின் பழமைக்குச் சான்றாய் விளங்குகிறது. ஆண்டுதோறும் மாசி மகம் நாள் இரவு ஏழு மணியளவில் குருமகாசன்னிதானங்கள் பல்லக்கு வாகனத்தில் எழுந்தருளி பேரூரில் பட்டிணப் பிரவேசம் வரும் காட்சி பார்ப்போர் கண்களுக்கு விருந்தாய் அமையும் . பேரூர் நகரம் முழுவதும் பல்லக்கு வாகனம் வலம் வரும் ஒவ்வொரு இல்லத்திலும் மக்கள் முன்னின்று குருமகாசன்னிதானங்களுக்கு குரு மரியாதை செய்வது மரபாய் திகழ்கிறது .மாசி மகம் நாளில் பேரூர் வருக, குருவருள் திருவருள் பெறுக. நன்றி .அன்புடன் சங்கர்.